"கருணாநிதி பேனா.." காரணமே இதுதான்.. இப்படி செய்யுங்களேன்.. ஸ்டாலினுக்கு ஐடியா தந்த பூவுலக நண்பர்கள்
கலைஞருக்கு பேனா சிலை தேவையில்லை என்று பூவுலக நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை: கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும், கருணாநிதி நினைவு சின்னங்களில் மட்டும் வாழ்ந்துவிடுவதில்லை என்றும், பூவுலக நண்பர்கள் அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில், அவருடைய நினைவிடம் அமைந்துள்ள இடத்திலிருந்து மெரினா கடற்கரையில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் அனுமதி அளித்திருக்கிறது. இந்த நினைவு சின்னத்தை மெரீனா கடற்கரையில் அமைக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தனர்.

கடற்கரை
இதற்கு சில காரணங்களையும் கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. அந்த அறிக்கையின் சுருக்கம் இதுதான்: "ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவு சின்னத்தை நினைவிடத்தில் இருந்து சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ன் படி பகுதி IV(A) என வரையறுக்கப்பட்டுள்ளது.

சின்னங்கள்
2015 பிப்ரவரி 15ம் தேதியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ல் அறிவிக்கையில் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தத்தின்படி CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் இந்தப் பேனா வடிவ சிலை Exceptional case இல்லை.

கடலில் வேண்டாம்
ஏற்கெனவே நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள்ளாகவே பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு போதுமான இடமிருக்கின்ற நிலையில் கடலுக்குள் அமைப்பதை Exceptional case என்று கூற முடியாது.. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

யோசனை
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது. அப்படி ஒரு தலைவரின் பெருமையை கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைத்துத்தான் போற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக மதுரையில் அமைக்கப்பட்டு வரும் "கலைஞர் நினைவு நூலகம்" போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் கலைஞரின் நினைவைப் போற்றலாம்" என்று அந்த அமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு யோசனை கூறியிருந்தது.

கலைஞருக்கு நினைவு சின்னம்
இதனிடையே, இந்த அறிக்கை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விளக்கம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. அதில், "கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்கிறீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். நிச்சயமாக கலைஞருக்கான நினைவுச் சின்னம் வேண்டும் என்கிறோம். ஆனால், கடலில் வேண்டாம் என்கிறோம்... படத்தில் உள்ளது போல், பேனாவை அவருடைய நினைவிடத்திலோ அல்லது அவர் உருவாக்கிய தலைமை செயலகத்திலோ அல்லது மதுரையில் அமைக்கப்படும் "கலைஞர் நூலகத்திலோ" அல்லது வேறு நல்ல இடத்தை தேர்வு செய்து வைக்க வேண்டும். கடலில் வேண்டாம் என்பது மட்டுமே எங்கள் நிலைப்பாடு." என்று அந்த அமைப்பு மீண்டும் விளக்கம் தந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications