என்னை மிரட்டியே ரூ 8 லட்சம் கறந்த நித்யா! கொடுங்கையூர் கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொடுங்கையூர் இளம் பெண் நித்யா கொலை வழக்கில் கைதான மருத்துவர் சந்தோஷ்குமார் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்றைய தினம் கைதான அவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

nithya

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களது மகள் நித்யா (26), சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாராம். இவர் பெற்றோருடன் தங்காமல் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 5ஆவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அப்போது பாலமுருகன் (28) என்பவருடன் நித்யாவுக்கு காதல் ஏற்பட்டது. பாலமுருகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக தெரிகிறது. இதனால் நித்யாவின் வீட்டிலேயே பாலமுருகன் தங்கியிருந்தாராம். இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி நித்யாவின் பெற்றோர், நித்யாவின் கொடுங்கையூர் வீட்டிற்கு வருவதால், பாலமுருகனை தன்னுடன் தங்க வேண்டாம் என கூறி அனுப்பினார்.

இதையடுத்து நித்யாவின் பெற்றோர் வீட்டை விட்டு சென்றதை அறிந்த பாலமுருகன், நித்யாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்திருந்த நிலையில் நித்யா தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் இருந்தார்.

இதனால் பதறிய பாலமுருகன், போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு போலீஸார் சென்று பார்த்த போது நித்யா ஏற்கெனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.

அவருடைய உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே நித்யாவின் பெற்றோரை வரவழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது நித்யா, பாலமுருகனுடன் லிவ் இன் டூகெதரில் வாழ்வது எங்களுக்கு தெரியாது. அவரிடம் இருந்த 25 பவுன் நகைகள் இருந்தன. அதை பாலமுருகன் திருடிவிட்டு மகளை கொன்றிருக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில், நித்யாவின் பெற்றோர் அடிக்கடி பணம் கேட்டு நித்யாவை தொல்லை கொடுத்து வந்தனர்.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அம்பத்தூரில் தங்கியிருந்த போது நித்யாவுடன் தாலிக் கட்டி ஒன்றாக வாழ்ந்தோம். வேலைக்கு செல்லும் போது தாலியை கழற்றி வைத்துவிட்டு பணிக்குச் சென்றதாகவும் தெரிவித்தார். நித்யாவின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கடைசியாக யாருடன் பேசினார் என ஆய்வு செய்து அவரை தொடர்பு கொண்டனர். அதன்படி நித்யா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பவருடன் பேசியது தெரியவந்தது.

இந்த கொலை குறித்து சந்தோஷ்குமார், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: "நித்யா என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றினார். எனது போட்டோ, வீடியோவை காட்டி என்னை மிரட்டி மிரட்டியே இதுவரை என்னிடம் இருந்து ரூ 8 லட்சம் வரை கறந்துவிட்டார்.

இதனால் கடந்த 6 ஆம் தேதி நித்யாவின் வீட்டிற்கு சென்றேன். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது 2 விதமான தூக்க மாத்திரைகளில் 5 மாத்திரைகளை மதுவில் கலந்து நித்யாவிடம் கொடுத்தேன். அதை குடித்து நித்யா, மயங்கியதும், அவர் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டேன். அதனை எனது எதிர்வீட்டில் இருக்கும் நண்பர் முஜிபுர் பாஷாவிடம் கொடுத்து வைத்திருந்தேன்" என தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+