தெய்வமாக மாறிய மருத்துவர்.! ஐசியூவில் 30 நிமிடங்கள் இடைவிடாமல் சிபிஆர்.. அடுத்த நொடி அதிசயம்
சென்னை: மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நோயாளிக்குச் சுமார் 30 நிமிடங்கள் சிபிஆர் செய்து பெண் மருத்துவர் காப்பாற்றியுள்ளார். இதயத் துடிப்பு தொடர்ச்சியாக சரிந்தபோதும், விடாமல் தொடர்ந்து போராடிக் காப்பாற்றிய அந்த மருத்துவரின் செயலை இணைய உலகமே பாராட்டி வருகிறது.
உலகெங்கும் மிகவும் மதிக்கப்பட்ட வேலையாக மருத்துவம் இருக்கிறது. உயிரைக் காப்பாற்றும் நபராக இருப்பதால் மருத்துவர்களுக்கு எப்போதும் தனி மரியாதை இருக்கும். கால நேரம் பார்க்காமல் மருத்துவர்களும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

30 நிமிடங்கள் சிபிஆர்
மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த ஒரு நோயாளியை மருத்துவர் காப்பாற்றியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் இடைவிடாமல் முயன்று அந்த நோயாளியைக் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்த நோயாளியின் இதயத் துடிப்பு குறைந்து கொண்டே போனது. சில நொடிகள் தாமதித்து இருந்தாலும் அவரது உயிர் போய் இருக்கும். அந்தச் சூழலில் மருத்துவர் இதயத் துடிப்பை மீட்டெடுக்க சிபிஆர் செய்துள்ளார். அதுவும் ஓரிரு நிமிடம் இல்லை. விடாமல் சுமார் 30 நிமிடங்களுக்கு அவர் சிபிஆர் செய்து, நோயாளியைக் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இதைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
என்ன நடந்தது?
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ டிரெண்டாகி வருகிறது. அதில் பெண் மருத்துவர் ஒருவர், சுயநினைவில்லாத நோயாளியைக் காப்பாற்றப் போராடிக் கொண்டு இருந்தார். அந்த நோயாளிக்கு எதிர்பாராத விதமாக இதயச் செயலிழப்பு (cardiac arrest) ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது இதயத் துடிப்பை மீட்டெடுக்க அந்த டாக்டர் கேப் விடாமல் சிபிஆர் செய்கிறார்.
அந்த வீடியோவில் மேலும், "பெண் மருத்துவர் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் சிபிஆர் செய்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியின் உயிரை வெற்றிகரமாகக் காப்பாற்றினார். இது அங்கிருந்த பலரின் மனதை நெகிழச் செய்தது. இதற்காகப் பலரும் அவரை பாராட்டினார்கள். நிஜ வாழ்க்கையும் இதுபோல பல ஹீரோக்கள் இருக்கவே செய்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
சீரானது
நோயாளியின் இதயத் துடிப்பு உயிருக்கு ஆபத்தான நிலைக்குக் குறைந்துவிட்டது. உயிர் காக்கும் கருவியில் நோயாளியின் உடல்நிலை மோசமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், மருத்துவர் இடைவிடாமல் மார்பை அழுத்தி, இதயத் துடிப்பு சீராக முயன்றார். மருத்துவரின் தீவிர முயற்சிக்கு பிறகே சீரற்ற நிலையில் இருந்து, சீரான நிலைக்கு மாறியது.
பாராட்டு
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மருத்துவரைப் பாராட்டி வருகிறார்கள். அவ்வளவு இக்கட்டான மற்றும் பிரஷ்ஷரான சூழலிலும் சரியாகச் செயல்பட்ட மருத்துவரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் தான் உண்மையான ஹீரோ என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "இது வெறும் திறமையல்ல.. ஒருவரின் உயிரைக் காப்பாற்ற 30 நிமிடங்கள் மனம் தளரவிடாத உறுதி. அவருக்கு ஒரு விருது வழங்க வேண்டும். எங்களால் முடிந்ததைச் செய்துவிட்டோம் என்று எளிதில் கைவிடும் மருத்துவர்களை விட, இப்படிப்பட்டவர்கள் தான் நமக்கு வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், "இந்த மருத்துவரைப் பாராட்டியே தீர வேண்டும். சிபிஆர் செய்வது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் ஐசியுவில் பிரஷர் அதிகமாக இருக்கும். அது குழந்தை விளையாட்டல்ல. மனித உயிர்களைக் காப்பாற்றச் சிறப்பாகச் செயல்படும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்" என்று உணர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications