Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த்துக்கு அப்பல்லோவில் செய்த Aortic aneursym சிகிச்சை.. தமிழக அரசு மருத்துவமனையில் இலவசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள புகழ் பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் செய்து கொண்ட Aortic aneursym சிகிச்சை தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி சமுக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையையும், மருந்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் தான் தரமான சிகிச்சையும் மருந்தும் கிடைப்பதாகவும், ஏழைகள் அதிகம் செல்லும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையும் மருந்தும், அந்த அளவிற்கு தரமாக இருக்காது என்றும் சிலருக்கு பொதுப்புத்தி உள்ளது. அதாவது, முன்னே பின்னே பார்க்காத ஒருவரை, பார்த்த உடனே ஒருவரை தவறாக எடை போடுவார்களே, அதுபோல் அரசு மருத்துவமனைகள் குறித்து தவறான புரிதல் சிலருக்கு இருக்கிறது. அந்த புரிதல் தவறு என்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

rajinikanth government hospital apollo

அவர் வெளியிட்ட பதிவினை அப்படியே பார்ப்போம். " நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு , Aortic aneursym ஏற்பட்டது, அதற்கான சிகிச்சை முடிந்து நேற்று (கடந்த 4ம் தேதி) நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் . இந்த நோயைப்பற்றி சில தினங்களுக்கு முன்பு காணொளி வெளியிட்டிருந்தேன். அதைப்பார்த்த பலரும் " காசு இருப்பவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு போலாம். காசு இல்லாத ஏழைகள் அரசு மருத்துவமனைக்குத் தான் போகனும். அங்கே இந்த நோயை கண்டுபிடிப்பார்களா ? சரியான சிகிச்சை கிடைக்குமா ? " என்று கமெண்ட் செய்தனர்.

நேற்று மதியம் ஒரு முதியவர், காய்ச்சல் சளி இருமலுக்கு சிகிச்சை பெற என் கிளினிக் வந்திருந்தார். கையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சைப்பெற்ற நோட்டை வைத்திருந்தார் . அதை வாங்கி பார்த்ததில் , எனக்கு பயங்கர ஆச்சர்யம். அதில் Diagnosis : Aortic aneursym with hematoma என்று எழுதியிருந்தது.

ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட அதே aortic aneurysm என்ற நோயை, இந்த முதியவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் diagnosis செய்து, சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களும் diagnose செய்யப்படும். அதற்குரிய சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும். 2014ல் நான் கிளினிக் தொடங்கிய சமயத்தில் Vildagliptin 50mg என்ற சுகர் மாத்திரையின் விலை ₹25 . தற்போது அதே மாத்திரை, வடுவூர் PHC ( அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்) வாங்கி சாப்பிடுவதாக ஒரு பாட்டி தனது நோட்டைக் காட்டினார். அதில் VILDAGLIPTIN 50MG என்று எழுதியிருந்தது.

🔸கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் PRO PL என்ற பவுடரின் விலை ₹695. B PROTIN, D PROTIN போன்ற உலக பிரசித்தி பெற்ற பவுடர்களை தயார் செய்யும் BRITISH BIOLOGICALS எனப்படும் நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த PRO PL பவுடர். இதைத்தான் தமிழக அரசு இலவசாமாக, பாட்டில் பாட்டிலா தராங்க. அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையையும், மருந்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் நண்பர்களே..." இவ்வாறு மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி கூறியுள்ளார்.

rajinikanth government hospital apollo
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+