சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்! கடைசி வரை மனம் இறங்காத ஆளுநர் ரவி! மனுஷன் மறைந்தேவிட்டார்!
சென்னை: கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ரவி கடைசி வரை ஒப்புதல் தராத நிலையில் சங்கரய்யா அவரது 102வது வயதில் காலமாகி விட்டார்.
சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். அதன்படி, தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது.

ஆனால் ஏனோ தெரியவில்லை, சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ரவி கடைசி வரை ஒப்புதல் கொடுக்கவே இல்லை. டாக்டர் பட்டம் வாங்குவதற்கு தேவையான எல்லா தகுதிகளும் சங்கரய்யாவுக்கு இருந்தும், ஆளுநர் மறுப்பு தெரிவித்தது ஏன் என்பதற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. சங்கரய்யாவுக்கு வழங்காத டாக்டர் பட்டத்தை வேறு யாருக்கு அளிக்கப் போகிறார் ஆளுநர் என்பதும் தெரியவில்லை.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது பற்றியும் ஆளுநர் மாளிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே அண்மையில் தெரிவித்திருந்தார். சங்கரய்யாவை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடியவர் எனவும் அவரே குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் சங்கரய்யா என்பவர் வாழும் வரலாறு என்றும் அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்திருந்தது. சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வரலாற்றில் ஒரு நீங்கா புகழை நிச்சயம் பெறும் எனவும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்திருந்தது.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முடிவை தமிழக அரசே ஏற்றுக்கொண்ட பிறகு ஆளுநருக்கு என்ன வந்தது? என்ற கேள்வியை ஜவாஹிருல்லா, துரை வைகோ உள்ளிட்ட இன்னும் பலரும் எழுப்பியிருந்தனர். ஆனால் இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காததன் காரணத்தை இன்னும் ஆளுநர் ரவி தெரிவிக்கவில்லை.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications