டெங்குவின் 2வது வகை! ரொம்ப டேஞ்சர்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்! தீவிர பாதிப்புக்கு காரணமே இதுதான்
சென்னை: டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள நிலையில், இதற்கு டெங்கு வைரஸின் DEN-2 மாறுபாடுதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்டால் அவர்களின் ரத்த தட்டணுக்கள் (பிலாஸ்மா) எண்ணிக்கை குறைய தொடங்கிவிடும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 3 லட்சம் ரத்த தட்டணுக்கள் இருக்கும். ஆனால், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் சரிய தொடங்கும். இதனை தடுக்க ரத்த தட்டணுக்களை ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றத் தவறினால் நுரையீரல் பகுதியில் நீர் தேங்கும். இது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும் இதனை 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' என்று அழைப்பார்கள்.

வழக்கமாக பருவமழை தொடங்கும் காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக நீர் நிலைகளில் அருகில் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. மட்டுமல்லாது உயிரிழப்புகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் ஒரு சிறுவனும், புதுச்சேரியில் 2 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டை சுற்றி இருக்கும் தேங்காய் ஓடுகள், டயர்கள், டப்பாக்கள், டின்கள் போன்றவற்றில் மழை நீர் தேங்கி இருந்தால் அதில் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது பரவும் டெங்கு பாதிப்புக்கு டெங்கு வைரஸின் DEN-2 மாறுபாடுதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக டெங்கு DEN-1 வைரஸ் மூலமாகதான் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், சமீபத்தில் நொய்டாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்தபோது அவர்கள் டெங்கு வைரஸின் DEN-2 மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பொதுவாக டெங்குவில் 4 வகை வைரஸ்கள் இருக்கின்றன. DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 இந்த நான்கில் DENV-2 வைரஸ்தான் தற்போது டெங்குவை அதிகம் பரவி வருகிறது.
DENV-1 திரிபு வைரஸ் சாதாரணமாக காய்ச்சலையும், சளியையும் ஏற்படுத்தும். இதே DENV-2 திரிபு இத்துடன் சேர்ந்து வாந்தியையும் ஏற்படுத்தும். எனவேதான் இந்த வகை திரிபு வைரஸ் ஆபத்தானது என்று கூறுகிறோம். வாந்தி மட்டுமல்லாது ரத்தக்கசிவு காய்ச்சலையும் இது ஏற்படுத்தும். மேலும் உடல் உறுப்புக்கள் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்த DENV-2 திரிபு டெங்கு வைரஸால் பாதித்திருப்பதை உறுதி செய்ய சில அறிகுறிகள் இருக்கின்றன.
அதிக காய்ச்சல், குமட்டல், வாந்தி, கண்களுக்கு பின்னால் வலி, மூட்டு வலி, தொடர்ந்து தலைவலி போன்றவை இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இருப்போர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டெங்கு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
உணவை பொறுத்த அளவில், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும். பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய், வைட்டமின் கே நிறைந்த கீரைகள் அதிகம் சாப்பிடுவது டெங்கு ஏற்படாமல் தடுக்கவும் டெங்குவில் இருந்து குணமாகவும் உதவும். அதேபோல சூப், இளநீர், கஞ்சி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், கோழி, மீன், முட்டை, பருப்பு, கானாங்கெளுத்தி, சாலமன், மத்தி போன்ற மீன்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவு பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications