நீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்
சென்னை: சமூக வலைதளங்களில் முத்து என்கிற ஒரு சிறுவன் மூலமாக சொல்லப்படும் நீதி கதை தொடர்பான ஆவணப் படம் செம ஹிட்டடிக்கிறது. சமூகவலைதளங்களில் வைரலாகும் இந்த ஆவணப்படமே தமிழ்நாட்டின் மிக மிக பரபரப்பான அரசியல் தலைவரான துணை முதல்வர் ஓபிஎஸ்-க்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணப்படத்தின் ஹீரோ பெயர் முத்து. சிறுவனான முத்துவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், பக்கத்து வீட்டு பெண்மணிக்கு நீதியை சொல்லுதல் போல அமைந்திருக்கிறது.
அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்கிற போதனையை தமக்கு இந்த சின்ன வயதிலேயே அந்த முத்து என்ற சிறுவன் கற்றுத் தந்துவிட்டதாக பெருமிதப்படுகிறார் பக்கத்து வீட்டு பெண்மணி.

இத்துடன் இந்த ஆவணப்படம் முடியவில்லை. இந்த முத்து என்ற பேச்சிமுத்துதான்... நம்ம ஐயா ஓபிஎஸ் (ஓ. பன்னீர்செல்வம்).
தம்முடைய சின்ன வயதிலேயே இப்படியான நீதிக்கதைகளை ரகசியமாக நண்பர்களிடம் சொல்லி செயல்படுத்துபவர் ஓபிஎஸ் என புகழ் புராணம் தொடருகிறது.
முத்து என்ற பேச்சி முத்துவின் ஆவணப்படம் நீங்களும் பாருங்கள்..
Who is that Muthu? Please watch! pic.twitter.com/8lm6C9Hyh1
— D Suresh Kumar (@dsureshkumar) September 28, 2020












Click it and Unblock the Notifications