உளவுத்துறை ரிப்போர்ட் எங்கே? ஸ்டாலின் மேஜைக்கு போகும் "முக்கிய" ஃபைல்கள்.. அப்போ விஜய், எடப்பாடி?
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக, அழுத்தமாக பல விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை கேட்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்து உள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் மரணம் அடைந்துள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 24 பேரை கைது செய்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
எதிர்பார்க்காத சிக்கல்: திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக கள்ளக்குறிச்சி பிரச்சனை உருவெடுத்துள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்பார்க்காத பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன.
எடப்பாடி பழனிசாமி இதை கெட்டியாக பிடித்துள்ளார். சமீபத்தில் போராட்டம் செய்தவர் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். சென்னையில் எடப்பாடி உண்ணாவிரதம் செய்து வருகிறார். கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி மறுத்தது, சபை காவலர்கள் மூலம் சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்து கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உத்தரவை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
விஜய் திடீரென செய்யும் தீவிர அரசியல் திமுகவிற்கு பிரஷராக மாறி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜக ஆளுநர் தரப்பை சந்தித்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது தேசிய பிரச்சனையாக வெடிக்கும் வாய்ப்புகள் கூட உள்ளன. இதில் சிபிஐ விசாரணை என்ற கோணம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கடைசியாக கட்சிக்கு உள்ளேயே தலைமை பேச்சை கேட்காதவர்கள், ஆட்சியில் உத்தரவை மதிக்காத அதிகாரிகள், நிர்வாகிகள் ஆகியோரும் ஸ்டாலினுக்கு சிக்கலாக மாறி உள்ளனர்.
ஸ்டாலின் ரிப்போர்ட்: இப்படி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக, அழுத்தமாக பல விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை கேட்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
அதன்படி கள்ளக்குறிச்சி விவகாரம் மக்கள் இடையே எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, கள்ளச்சாராய விவகாரத்தில் இன்னும் சிக்காதவர்கள் யார் யார்? அரசுக்கு எதிரான மனநிலை உள்ளதா? எடப்பாடி பழனிசாமியை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? விஜயின் அரசியலுக்கு ஆதரவு எப்படி உள்ளது களத்தில் என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில ரிப்போர்டுகளை கேட்டு உள்ளாராம்.
கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதன் காரணமாகவே அவர் உளவுத்துறை ரிப்போர்டுகளை கேட்டு உள்ளாராம்.












Click it and Unblock the Notifications