3 ஆண்டுகளுக்கு பிறகும் பக்க விளைவுகள் வருமா? குழம்ப வைக்கும் கோவிஷீல்டு! டாக்டர்கள் என்ன சொல்றாங்க?
சென்னை: அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கும் நிலையில் இது குறித்த விளக்கத்தை மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.

லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கொரோனா: கொரோனா காலத்தில் இளைஞர்களின் திடீர் மரணம் மாரடைப்பு போன்றவற்றை தொடர்பு படுத்தி அவை தடுப்பூசியால் தான் நிகழ்ந்தது என சமூக ஊடகங்களில் கூறப்பட்டது. இளம் வயது மரணங்கள் அதிகரித்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மக்களுக்கு அளித்த தடுப்பூசிகளால் சாதாரண அறிகுறிகளை தவிர தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படுவது உண்மைதான் என ஐசிஎம்ஆர் ஒப்புக்கொண்டது.
தடுப்பூசிகள்: மேலும் தடுப்பூசிகள் பக்கவிளைவை ஏற்படுத்தின என மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ ஒப்புக்கொண்டதாக கடந்த சில மாதகளுக்கு முன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து அஸ்ட்ராஜெனகா விளக்கம் அளித்துள்ளது.கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு மற்றும் ரத்த பிளேட்லெட் குறைவு பிரச்சனை ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் கோவிஷீல்டு போட்டுக் கொண்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் அச்சம்: இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கும் நிலையில் இது குறித்த விளக்கத்தை மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேசிய புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்,” அலோபதி மருத்துவத்தை பொருத்தவரை பலகட்ட சோதனைகளுக்கு பிறகு அது நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் நீண்ட சோதனை மற்றும் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு அதன் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அஸ்ட்ராஜெனகா: ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருந்தவர்கள் குறிப்பாக இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தவர்கள் தடுப்பூசி போட்டதற்கு பிறகு மரணம் அடைந்ததும், அதற்கு பிறகாக இளம் வயது மரணங்கள் அதிகரித்ததும் தடுப்பூசியே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை அப்படி அல்ல. அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அது குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தான். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 25 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ரத்த உறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அஸ்ட்ராஜெனகா கூறி இருக்கிறது. அப்படி பார்க்கும்போது தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தான் இந்த பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது.
அச்சம் தேவையில்லை: 10 முதல் 15 வழக்குகள் மட்டுமே இங்கிலாந்தில் பதிவாகி இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும் நிலையில் தடுப்பூசிகள் இனியும் பக்க விளைவு ஏற்படுத்தும் என மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொதுவாக தடுப்பூசிகள் உடலில் குறிப்பிட்ட ஆண்டிஜென்களை உருவாக்கிவிட்டு உடலில் இருந்து வெளியேறிவிடும். அதாவது எதிர்ப்பு ஆற்றலை உடலில் உருவாக்கி விட்டு மருந்துகள் செயலிழந்து விடும். எனவே இனிய தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என மக்கள் அஞ்சத் தேவையில்லை’ என விளக்கம் அளித்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications