வேணாம் நிறுத்துங்க.. 2 மாஜிக்கள் கலகம்.. டெல்லியில் இருந்து போன்.. ஷாக் ஆன எடப்பாடி! உடனே சமாதானம்?
அதிமுகவின் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு டெல்லி தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
சென்னை : பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து இரு கட்சிகள் இடையே மோதல் எழுந்த நிலையில், அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் இருவர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அதைத் தொடர்ந்தே தலைவர்கள் சைலண்ட் மோடுக்கு போயிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி கட்சியில் இருந்தே ஆளைத் தூக்க பிளான் போட்ட எடப்பாடி பழனிசாமி, தனது அணியைச் சேர்ந்த மாஜிக்கள், டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாகச் சொன்னதும் ஆடிப்போய்விட்டாராம்.
உடனடியாக ஆள் சேர்க்கும் படலத்தை நிறுத்தச் சொன்னதோடு, வெள்ளைக்கொடி காட்டவும் வாய்மொழி உத்தரவு போனதாம்.

அதிமுக vs பாஜக
பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சியடைந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதனால் அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமையை கடுமையாக விமர்சிக்க, பதிலுக்கு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தனர். எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படங்களை பாஜகவினர் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பதிலுக்கு அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்ரூட்டாக
அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் பாஜகவினரையும், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தனர். பாஜகவினருக்கு சகிப்புத்தன்மையும் வாய் அடக்கமும் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. நாம் தான் பெரிய ஆள் என நினைப்பதால் இதுபோன்ற தவறு நடக்கிறது. முதலில் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை விட எனது மனைவி 1000 மடங்கு வலிமையானவர் எனப் பேசியதும் அதிமுகவினரை கொதிக்கச் செய்தது. நாளுக்கு நாள் இந்த மோதல் வலுத்து வந்த நிலையில் தற்போது அதிமுகவினர் அப்ரூட்டாக சாஃப்ட் டோனுக்குப் போயுள்ளனர்.

டெல்லி பிரஷர்
டெல்லி மேலிடத்தில் இருந்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான மேற்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. பாஜக - அதிமுக மோதல் விவகாரம் இப்படியே போனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ரொம்ப சாதகமாகிவிடும், கூட்டணி கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என ஆர்டர் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் விஷயத்தை எடுத்துரைத்து, தங்களுக்கு நெருக்கடி இருப்பதையும் எடுத்துரைத்துள்ளனர். டெல்லியில் இருந்து பிரஷர் வருகிறது எனக் கூறியுள்ளனர்.

கலகம்
அதைத்தொடர்ந்து தான் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர்களுக்கு எதிராக யாரும் பேச வேண்டாம் என்று தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். பாஜகவினரை இழுக்கும் படலத்தையும் நிறுத்தி வைத்துள்ளாராம். பாஜக நிர்வாகிகளுடன் இப்போதைக்கு யாரும் பேச வேண்டாம் என தனது டீமுக்கும் உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. தான் வலிமையான தலைவர் எனக் காட்டும் வகையில், ஆள்சேர்ப்பு படலத்திற்கு திட்டமிட்ட நிலையில், உட்கட்சிக்குள்ளேயே கலகம் வரும் என்று எடப்பாடி எதிர்பார்க்கவில்லை.

அதிர்ந்து போன எடப்பாடி
பாஜக பிரஷர் கொடுத்த 2 மாஜிக்கள் சேர்ந்தால், அதிமுகவில் பலர் அவர்கள் பக்கம் தான் நிற்பார்கள். கட்சியிலும் சரி, டெல்லியிலும் சரி அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறது, அவர்களின் பேச்சை புறம் தள்ளினால், சிக்கலாகிவிடும், கட்சி இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டிற்கு வந்துகொண்டிருக்கும் சூழலில் இன்னொரு பிளவு என்றால் தனது பலமே தவிடுபொடியாகிவிடும் என்பதை உணர்ந்தே எடப்பாடி பழனிசாமி பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் திடீர் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமாதானக்கொடி
மேலும், கூட்டணி பிளவை சரிசெய்ய சமாதான முயற்சியிலும் அந்த 2 மாஜிக்களும் இறங்கி இருக்கின்றனராம். பாஜக மாநிலத் தலைவர், மற்றும் சில சீனியர்களுடனும் பேசியுள்ளனராம். பாஜகவில் இருந்து திட்டம் போட்டு எல்லாம் நாங்கள் இழுக்கவில்லை. அங்கு அதிருப்தியில் இருப்பதாகச் சொன்னார்கள். திமுகவிற்கு போகவிடுவதை விட நம் பக்கமே இருப்பது நல்லது என்பதால் தான் எடப்பாடி பழனிசாமி ஓகே சொன்னார், மற்றபடி அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கை எல்லாம் இல்லை என விளக்கம் அளித்துள்ளனராம்.

பாஜக தலையசைப்பு
இதற்கு பாஜக பக்கமிருந்தும் ஓகே என தலையசைவு கிடைத்திருக்கிறதாம். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், கடந்த சில நாட்களாக விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்து விட்டன. பாஜக தலைமை விரைவில் இதற்கு தீர்வு காணும் என்று கூறி இருக்கிறார். பாஜக தலைமை இது குறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்பதை அதிமுக தலைவர்களின் திடீர் பல்டி பேச்சுகளே உறுதி செய்துள்ளன.

அந்தர் பல்டி
அதிமுகவில் இருந்து கடுமையாக அதிரடி பதிலடி கொடுத்து வந்த ஜெயக்குமார், "பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை. பக்குவப்படாதவர்கள் சிலர் கருத்துகள் சொன்னார்கள். அதற்கு நாங்களும் கருத்து சொல்லி விட்டோம். மற்றபடி கூட்டணி தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறியிருக்கிறார். பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், "கூட்டணியில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்" எனக் கூறியுள்ளார். இப்படியாக டெல்லியின் போனுக்கு பிறகு அதிமுகவினர் அப்படியே சைலண்ட் மோடுக்குப் போயுள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications