Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே சொதப்புதே.. ச்சே.. மிஸ் பண்ணுதே திமுக.. அதிமுக கூட்டணியில் "அவரா" இணைகிறாராமே.. தடுமாறும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில், அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைய போவதாக சொல்லி வருகிறார்கள். அந்தவகையில், யாருடன் இவர்களது கூட்டணி அமைய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

எம்பி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன... இதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் களப்பணியும் அதிகரிக்க துவங்கிவிட்டது.

Does DMK miss MNM Alliance and Can Kamalhasan join with AIADMK Edapadi Palanisamy alliance soon

திமுக: எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியுடன் இணைந்தே மய்யம் தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்தியா கூட்டணி மீட்டிங் உட்பட எந்த விவகாரத்திலும் கமலை யாரும் அழைக்கவில்லை என தெரிகிறது.. காங்கிரஸ் கட்சிகூட, கமலை கண்டுகொள்ளாதது பரவலாக கவனிக்கப்பட்டது.

பெங்களூருவில் அன்று எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திற்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை என்றதுமே கமல் அப்செட் ஆகிவிட்டாராம். அதனால்தான், கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய 3 லோக்சபா தொகுதிகளை, எந்த கூட்டணி தருகிறதோ, அதனுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு கமல் வந்துள்ளதாக, அன்றே செய்திகள் பரபரபத்தன. ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணியில், தாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால், அங்கே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

B TEAM: கமலை பொறுத்தவரை, என்னதான் பாஜகவுக்கு எதிராக பேசினாலும்கூட, பாஜகவின் B டீம் என்ற தன்மீதான விமர்சனத்தை அவரால் உடைக்க முடியவில்லை.. அதனால்தான், காங்கிரசுடன் நெருக்கமாக வேண்டிய சூழல் கமலுக்கு ஏற்பட்டது. அதனால்தான், ராகுலின் நடைபயணத்துக்கு நேரடியாகவே டெல்லி சென்று வாழ்த்தும்சொல்லி, இணக்கமான போக்கையும் கையாண்டார். "ஒரு தேசிய பிரபலம்" என்பதால், கமலின் வருகையை காங்கிரசும் வரவேற்கவே செய்தது.

நேரடியாக திமுகவுடன் கூட்டணி இல்லை என்றாலும், காங்கிரசுடன் சேர்ந்து கமல் வரப்போகும் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்தபடியே இருந்தன. ஆனால், திமுகவையும் மீறி காங்கிரஸால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை என்பதால், கமல் விஷயத்தில் அமைதியையே தற்சமயம் கடைப்பிடித்து வருவதாக தெரிகிறது.

ஷூட்டிங் கமல்: இப்போது கமல், ஷூட்டிங் பணிகளுக்காக, அமெரிக்கா, சீனா சென்றிருந்த கமல், 2 நாளைக்கு முன்புதான் சென்னை திரும்பினார்... கட்சியின் மாநில நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக, கமலிடம் சில ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளும் எடுத்து சொன்னார்களாம்.. அதில், பாஜக இல்லாத அதிமுக கூட்டணியில் சேருவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறதாம்..

ஆனால், கமல் இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.. நாளை மறுநாள் அதாவது 22ம் தேதி, கோவையில் கட்சியின் மாநில செயற்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்பதை கமல் எடுக்கக்கூடும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு மாநில செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், கமலின் முடிவே, இறுதியானதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..

அதிமுக முடிவு: ஆனால், கமலுக்கு உள்ள ஒரே சிக்கல் என்னவென்றால், தன் மீதான "பாஜக நிழல்" முத்திரைதான்.. இந்த முத்திரையை சுக்குநூறாக நொறுக்க காத்திருக்கும் சூழலில்தான், அதிமுக திடீரென பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டி விட்டுள்ளதாக அறிவித்துள்ளது..

இந்த கூட்டணி விவகாரம்தொடர்பாக, அதிமுகவில் எடப்பாடியும் சரி, பாஜகவில் அண்ணாமலையும் சரி, இருவருமே இதுவரை வாய்திறக்கவில்லை, எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றாலும், அதிமுக பாஜக உறவில் விரிசல் வந்துள்ளதை தமிழகமே கண்கூடாக பார்த்து வருகிறது.

பெஸ்ட் சான்ஸ்: இதைத்தான் தனக்கு சாதகமாக, விசிக பயன்படுத்தி கொள்ளும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வரும்நிலையில், கமலும் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிகிறது.

கடந்த முறை எம்பி தேர்தலிலேயே வெற்றி பெற முடியாமல் வாய்ப்பை தழுவவிட்டது மநீம.. எப்படி அன்று விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததுமே, முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று சட்டசபை சென்றாரோ, அப்படி ஒரு வெற்றி தங்களுக்கு இல்லையே என்ற வருத்தம் கமலுக்கு இருக்கத்தான் செய்கிறதாம்.

அதனால்தான், கூட்டணி என்ற முடிவுக்கே இப்போது இறங்கி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இன்னொன்றையும் இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும்.. திமுக கூட்டணியில் மநீம இடம்பெறுமானால், ஒரு சீட் மட்டுமே தரப்படும் என்கிறார்கள்.. கடந்த 2019 தேர்தலில், 3.7 சதவீதம் மநீம பெற்றுள்ளது.. 2021 சட்டசபை தேர்தலில் 3.2 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளது.. அப்படியானால், திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுகவை விட ஓட்டு சதவீதம் வைத்துள்ள மநீம கட்சிக்கு ஒரு தொகுதி என்பதை அவர்களால் ஏற்கவும் முடியாதாம்..

ஓட்டு வங்கி: அந்தவகையில், மநீம ஓட்டுக்களை திமுக மிஸ் செய்ய போகிறதா? அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? அல்லது காங்கிரஸ் ஓடோடி வந்து கமலை அரவணைத்து கொள்ள போகிறதா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+