சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆடு பகை குட்டி உறவா".. 20, 43, 45 ஞாபகம் இருக்கா.. எல்லாமே போச்சா.. பாஜக Vs எடப்பாடி.. அப்ப ஓபிஎஸ்?

எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் சமாதானம் செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி வழிவகுப்பாரா? ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார்? பாஜக தனித்து களம் காண போகிறதா? என்ற கேள்விகள் இணையத்தை வட்டமடிக்கின்றன.

வரும் எம்பி தேர்தலில் தமிழகத்தை குறி வைத்து, பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.. 10 முதல் 15 தாமரைகளையாவது பெற்று டெல்லிக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

மற்றொருபுறம், அதிமுக விவகாரத்தில் மோதல் அதிகரித்தபடியே வருகிறது.. பாஜகவும் இந்த விஷயத்தில் வெளிப்படையாக தலையிடவில்லை என்றாலும் சில அழுத்தங்களை தந்து வருகிறது.

அதிமுக + காங்கிரஸ் + விசிக + கமல்.. எடப்பாடியின் மெகா கணக்கு.. பாஜக கையில் அதிமுக + காங்கிரஸ் + விசிக + கமல்.. எடப்பாடியின் மெகா கணக்கு.. பாஜக கையில்

கமலாலயம்

கமலாலயம்

இதற்கு நடுவில், கமலாலயத்தில் கடந்த வாரம் பாஜக கூட்டம் நடந்தது.. அந்த கூட்டத்திலேயே நிர்வாகிகளிடம் நிறைய அறிவுரைகளை அண்ணாமலை தந்திருந்ததாக செய்திகள் வந்தன.. குறிப்பாக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும், இதற்கு முன்பு பெற்ற சீட்டைவிட அதிகமாக கேட்டு பெற வேண்டும்.. அதேசமயம், அதிமுக கூட்டணியை முழுமையாக நம்பிவிட முடியாது.. அதிமுகவே இப்போது பிளவுபட்டு உள்ளது.. உட்கட்சி பூசல் தீரவில்லை.. கட்சி யாருக்கு என்ற பஞ்சாயத்து கோர்ட்டிலும் உள்ளது, தேர்தல் ஆணையத்திலும் உள்ளது.. அதனால் நாம் யார் பக்கமும் இப்போதே ஓட முடியாது.

பச்சைக்கொடி

பச்சைக்கொடி

எம்பி தேர்தலில், 5, 6 சீட்களுக்காக யாரிடமும் தொங்கி நின்று, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு சீட்டுகள் ஜெயிப்பதில் விருப்பமில்லை.. இதை பிரதமரிடம் நான் எடுத்து சொன்னேன்.. அதற்கு தனித்து போட்டியிட பிரதமரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்.. தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருந்தாராம்.. அதாவது, நாற்பதும் நாமே என்று தம்பிதுரை சொல்ல ஆரம்பித்துள்ள நிலையில், தனித்துபோட்டியிட ரெடியாகுங்கள் என்று அண்ணாமலையும் காய்நகர்த்தல்களை துவங்கி உள்ளதுதான், தற்போதைய ஹாட் டாபிக்காக களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

 டிஸ்கஷன்

டிஸ்கஷன்

ஆனால், பாஜக அதிமுக இரண்டுமே தனித்து நின்றால், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து, அது அவர்களின் வெற்றிக்கே சுலபமாகிடும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. ஒருவேளை பாஜக & அதிமுக இரு கட்சிகளுமே தனித்தனியாக தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்த சந்தேகமும் எழுகிறது. இதுகுறித்து சில அரசியல் ஆலோசகர்களிடம் நாம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதுதான்.

 ஹெட் ஆபீஸ்

ஹெட் ஆபீஸ்

எடப்பாடியை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தயாராக இல்லை.. கட்சி 95 சதவீதம் தன்னிடம், நிர்வாகிகளும் தன்னிடம் உள்ளதால், தன்னையை தலைமையாக அங்கீகரிக்க சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், தொண்டர்களிடம் போதுமான ஆதரவு இல்லை, குறிப்பாக, தென்மண்டலங்களில் எடப்பாடிக்கான ஆதரவு இல்லை, கொங்கு மண்டலத்திலேயே கடந்த முறை பாமகவின் வாக்குகள்தான் எடப்பாடிக்கு உதவியாக இருந்தது.. அந்தவகையில், களத்தில் போதுமான ஆதரவு எடப்பாடிக்கு இல்லை என்பதையே மேலிடம் வலியுறுத்துகிறது. அதனால்தான், அதிமுக வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்றே ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்துகிறது.

 கண் சிவந்த பாஜக

கண் சிவந்த பாஜக

ஆனால், எடப்பாடி தன் தரப்பில் பல ஸ்ட்ராங் விஷயங்களை மேலிடத்துக்கு புரிய வைத்து வருகிறார்.. திமுகவை கடுமையாக எதிர்ப்பதில் தான் உறுதியாக இருப்பதையும், திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள், கண்டனங்களை தெரிவித்து வருவதையும் சொல்லி உள்ளார்.. அதுமட்டுமல்ல, எவ்வளவு குழப்பம், சலசலப்புகள் இருந்தாலும், தன் 95 சதவீத ஆதரவாளர்களை நழுவவிடாமல் கைப்பிடியில் வைத்திருப்பதை, லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கு சொன்னாராம்.

 லிஸ்ட்ஸ்

லிஸ்ட்ஸ்

ஆனால், ஓபிஎஸ்ஸோ இந்த 6 மாதத்தில் சொன்னது எதையுமே செய்யவில்லை, மாநாடு நடத்த போவதாக சொன்னார், நடத்தினார்களா? போட்டி பொதுக்குழுவை நடத்த போவதாக சொன்னார்களே? நடத்தினார்களா? சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க போவதாக சொன்னார்களே? செய்தார்களா? அதனால், தங்களுக்குத்தான் கட்சியில் முழு ஆதரவு உள்ளது என்று எடப்பாடி தரப்பு பாஜக மேலிடத்துக்கு எடுத்து சொல்கிறது போலும். அதனால்தான், ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி ஸ்ட்டிராங் ஆக உள்ளார்.

 தகர்ந்த கணக்கு

தகர்ந்த கணக்கு

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை ஒரே ஒரு நம்பிக்கைதான் அவருக்கு உள்ளது.. கடந்த 2021 டிசம்பர் அதிமுகவின் 20, 43, 45 போன்ற விதிகள் திருத்தப்பட்டன.. 20ம் விதிப்படி பார்த்தால், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார்கள்.. 43ம் விதிப்படி பார்த்தால், பொதுக்குழுவால் கூட இந்த விஷயத்தை மர்றற முடியாது.. 45ம் விதிப்படி பார்த்தால், இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் இந்த இருவரும் நினைத்தால்கூட அடிப்படை விதியை மாற்ற முடியாது.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற 2 பேர் பதவியையும் தேர்ந்தெடுத்தது தொண்டர்கள்தான் என்பதால், அதை பொதுக்குழுவாலும் மாற்ற முடியாது, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் நினைத்தாலும் மாற்ற முடியாது.. இந்த ஒரே ஒரு சட்ட பிடிமானம்தான் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளது.

 க்ளைமாக்ஸ்

க்ளைமாக்ஸ்

அதனால்தான், ஜூலையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்ற ஒற்றை வாதத்துடன், ஒற்றை நம்பிக்கையுடன் இருக்கிறார்.. இதில் முடிவெடுக்க வேண்டியது பாஜகதான்.. பாஜக சொல்வதை தேர்தல் ஆணையமும் பரிசீலிக்கும் நிலை உள்ளது.. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, இரட்டை இலையை முடக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அதேபோல, ஆடு பகை, குட்டி உறவு என்பதுபோல, எடப்பாடியின் வலது கரங்களை தன்பக்கம் பாஜக இழுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. எல்லாவற்றிற்கும் மேலாக, சுப்ரீம்கோர்ட் முடிவு எப்படி வரப்போகிறதோ அதையும் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டி வரும்.. எனவே பாஜக இப்போதைக்கு இந்த விஷயத்தில் அவசரப்படாது" என்கிறார்கள்.

English summary
Does Edappadi Palanisamy have any plans against BJP's strategies and What is the big hope of OPS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X