மாஜியின் பதவிக்கு விரைவில் 'வேட்டு'? புலி வாலை பிடித்த கதை.. ‘டைவ்’ புள்ளிக்கு அடிக்கும் ஜாக்பாட்!?
மாஜி அமைச்சரின் மாவட்ட செயலாளர் பதவி விரைவில் பறிபோகப்போகிறதாம்.
சென்னை : தென் தமிழ்நாட்டின் முக்கிய ஊரின் மாவட்ட செயலாளர் பதவி, முன்னாள் அமைச்சரிடமிருந்து விரைவில் பறிக்கப்படலாம் என்கிறார்கள் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
மாஜி அமைச்சர் மீது தலைமை அதிருப்தியில் இருக்கும் சூழலில், புதிதாகக் கட்சியில் இணைந்துள்ள செயல் புயலுக்கு அந்தப் பதவி போகலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
அதே ஊரின் இன்னொரு மாஜி கட்சிக்காக வாரி இறைக்கும் நிலையில், இவர் வெறும் கையையே காட்டுவதாக லோக்கல் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியிலும் ஏக அதிருப்தியாம்.

கோபத்தில் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பல சீனியர்களையும், மாவட்ட செயலாளர்களையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறாராம். பூத் கமிட்டியை பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யுமாறு ஏற்கனவே பல முறை சொல்லியிருந்தும் பல மாவட்ட செயலாளர்கள் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இதனால், அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற வேகத்தில், கட்சியில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய இருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்த ர.ரக்கள்.

விபூதி குங்கும புள்ளி
பல ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளாமல் இருக்கும் மாவட்டச் செயலாளர்களைத் தூக்கிவிட்டு, செயல்வீரர்களாக இருக்கும் நிர்வாகிகளை பொறுப்பில் நியமிக்கும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதில் சில முன்னாள் அமைச்சர்களும் சிக்குவார்கள் என்கிறது ராயப்பேட்டை வட்டாரம். குறிப்பாக தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளரும், மாஜி அமைச்சருமான விபூதி, குங்கும புள்ளி தூக்கப்படபோவது உறுதி எனச் சொல்கிறார்கள் தென் மாவட்ட அதிமுகவினர்.

தன் தொகுதிக்கு மட்டும்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போதே, இவரது மாவட்ட எல்லைக்குள் வரும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தது. வென்ற ஒரே தொகுதியும் அவர் போட்டியிட்ட தொகுதிதான். மற்ற தொகுதிகளை 'கவனிக்காமல்' தனக்கு மட்டுமே வைட்டமின் ஊட்டிக்கொண்டார் என அப்போதே புகார்கள் கிளம்பின. ஆனாலும், பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருக்கும் சீனியர் என்பதால் எடப்பாடி பழனிசாமி எதுவும் கண்டுகொள்ளவில்லை.

ஆக்ஷன் உறுதி
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் படையையே களமிறக்கி தேர்தல் பணியாற்றினார் ஈபிஎஸ், கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாது, மேலும் சிலரும் அதிகமாகச் செலவு செய்துள்ளனர். ஆனால், இந்த தென் மாவட்ட மாஜி வெறும் கையையே காட்டினார் என்கிறார்கள். இந்த தகவலும் எடப்பாடி பழனிசாமி காதுக்குச் சென்றுள்ளது. நேரம் வரட்டும், ஆக்ஷன் நிச்சயம் என்பதுதான் ஈபிஎஸ்ஸின் முடிவு என்கிறார்கள்.

தாவல் புள்ளி
விரைவில், அதாவது பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதுமே அந்த சீனியரிடம் இருக்கும் மாவட்ட செயலாளர் பதவியைப் பறித்து, தலைமைக் கழக பதவியை மட்டும் கொடுப்பார் எடப்பாடி என்கிறார்கள். அவரிடமிருக்கும் அந்த மா.செ பதவியைப் பெற கட்சியில் சமீபத்தில் இணைந்த 'தாவல்' புள்ளி தீவிரமாக காய்நகர்த்தி வருகிறாராம். இவருக்கு லோக்கல் மாஜி ஒருவரின் சப்போர்ட்டும் இருப்பதால், அவருக்கே ஜெயம் என்கிறார்கள் ர.ரக்கள்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!











Click it and Unblock the Notifications