சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சல்லி சல்லியா போச்சே.. சுத்த விட்டுரும் பாஜக.. "இவருக்கே" அதிமுக.. சீனியர் நச்.. அப்ப அவங்க 2 பேரும்?

அதிமுக விவகாரத்தில் பாஜக என்ன செய்ய போகிறது என கேசி பழனிசாமி கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக விவகாரத்தில் பாஜக என்ன முடிவெடுக்கும், அதிமுக வலுப்பெற என்ன வழி? என்பது குறித்து, மூத்த தலைவர் கேசி பழனிசாமி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தற்சமயம் நிறைவு பெற்றிருக்கிறது.

இதுவரை நடந்த விவாதங்களில், கட்சி விதிகளை தெளிவாக எடுத்து சொல்லி உள்ளதால், அநேகமாக ஓபிஎஸ்ஸூக்கே சாதகமாக தீர்ப்பு வரும் என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். ஆனால், எடப்பாடி தரப்பில் இனிமேல்தான் விவாதங்கள் துவங்க உள்ளன..

இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் கேசி பழனிசாமி, ஒருடிவி சேனலுக்கு தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.. அதில், எடப்பாடி, ஓபிஎஸ் மட்டுமல்லாமல் திமுகவையும் சேர்த்து விமர்சித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இவை:

ஷாக்..களத்துல சந்திப்போம்! எடப்பாடிக்கு சிக்கல் கொடுக்கும் ஓபிஎஸ்! இந்த பிளான் லிஸ்ட்லயே இல்லையே? ஷாக்..களத்துல சந்திப்போம்! எடப்பாடிக்கு சிக்கல் கொடுக்கும் ஓபிஎஸ்! இந்த பிளான் லிஸ்ட்லயே இல்லையே?

 500 பூத்கள்

500 பூத்கள்

விவாதங்கள் முடிவில், அடிப்படை தொண்டர்களால் மீண்டும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே சட்டரீதியான முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. அப்படி ஒரு முடிவு வருகிறபோது, அம்மா மறைந்தபோது, யாரெல்லாம் அப்போது உறுப்பினர்களாக இருந்தார்களோ, அவர்களை வைத்து, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியினை கொண்டு, அந்த தேர்தலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.. பிறகு, அந்த உறுப்பினர்கள் லிஸ்ட்டை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.. விடுபட்டுள்ள வாக்காளர்கள் யார் என்று, பட்டியலையும் சரிபார்க்க வேண்டும்.. 234 தொகுதி வீதம், ஒன்றியம் ஒன்றுக்கு பூத் வைக்கப்பட வேண்டும், இப்படி 500 பூத் வைத்து, அதிமுக தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்..

சுத்தவிடுதா

சுத்தவிடுதா

இறுதியில் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்தான் தலைமைஆவார்.. ஆனால், பாஜக என்ன செய்ய செய்யும் தெரியுமா? இப்படியே சுப்ரீம்கோர்ட், ஹைகோர்ட் என மாறி மாறி ஒரு வருஷத்துக்கு சுத்த விடும்.. இறுதியில் பாஜகவே ஒரு கூட்டணியை இறுதிசெய்து, அவர்களுக்கு யார் தோதாக வருகிறார்களோ, அவர்கள்வசம் இரடை இலையை தருவார்கள்.. பாஜகவின் தயவை பெற்றுவிட்டேன் என்று எடப்பாடி சொல்கிறார்.. ஓபிஎஸ் இப்போதே நெடுஞ்சாண்கிடையாக கிடக்கிறார்.. இதனை எம்பி தேர்தலுக்கு பாஜக பயன்படுத்தி கொள்ளும். ஆனால், தொண்டர்களை பொறுத்தவரை நொந்து போய் உள்ளனர்..

 ஓரணி வலிமை

ஓரணி வலிமை

திமுகவுக்கு இப்போது நிறைய கெட்ட பெயர் உள்ளது.. எடப்பாடி, ஓபிஎஸ், பாஜகமீதும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதால், அனைத்து தொண்டர்களும் தேர்தல் களத்தில் ஓரணியில் திரரண்டு வலிமையான சக்தியாக அமைய போகிறார்கள்.. இப்போது நடந்து வரும் வழக்கை வைத்து, ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம் என்கிறார்கள்.. ஆனால், அப்படி நினைக்க தேவையில்லை.. இப்போது நடந்து கொண்டிருப்பது ஓபிஎஸ் தரப்பின் வாதங்கள் மட்டுமே.. அதனால் அப்படி சொல்கிறார்கள்.. எடப்பாடி தரப்பில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய சொல்லி உள்ளதால், அநேகமாக 10ம் தேதி தாக்கல் செய்யலாம்..

 அட்ரஸ் எங்கே

அட்ரஸ் எங்கே

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, பதவி தனக்கு கிடைத்துவிட்டால் தொண்டர்களால்தான் எல்லாம் என்பார்.. பதவி இல்லாவிட்டால் பொதுக்குழுவால்தான் எல்லாம் என்பார்.. கோர்ட்டிலேயே கேட்டாங்களே, ஓபிஎஸ், ஈபிஎஸ் என்றால் என்ன என்று? அப்படியானால் 2 பேருமே அட்ரஸ் இல்லாத ஆட்கள் என்றுதானே அர்த்தம்?.. தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் மனசாட்சி.. பாஜகவுக்கு எது சாதகமாக அமையுமோ, அந்தவகையில்தான், தேர்தல் ஆணையமும் முடிவெடுக்கும்..

 ஜெயிலுக்கு போறாங்க

ஜெயிலுக்கு போறாங்க

இந்த வழக்கு அநேகமாக ஜனவரி மாத இறுதியில் இந்த வழக்கு முடியும்.. பிறகு உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும்.. அதன்படி பிப்ரவரி, மார்ச் மாதத்தில் உத்தரவு போடுவார்கள்.. அதற்கு பிறகு சென்னை ஹைகோர்ட்டில் கேஸ் நடக்கும்.. அதற்கான உத்தரவு வரும் ஜூன், ஜூலை மாதங்களில் வரலாம்.. அதுக்கப்பறம் டிவிஷன் பெஞ்சுக்கு வரும்.. அங்கே உத்தரவு அக்டோபர் நவம்பரில் வரும்.. கடைசியில் அடுத்த ஜனவரியில், இதே கேஸ் உச்சநீமன்றத்தில் வரும்.. இதற்கு நடுவில் அதிமுகவில் எத்தனை பேர் ஜெயிலுக்கு போக போறாங்க? என்பது தெரிந்துவிடும்.

 கலைஞரின் மகன்

கலைஞரின் மகன்

திமுகவுடன் ஓபிஎஸ் மறைமுக டீலிங் வைத்திருக்கிறார் என்று எடப்பாடி சொல்கிறாரே.. எடப்பாடி தரப்பும்தான் திமுகவுடன் மறைமுக டீலிங் வைத்துள்ளது.. கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என்றாரே, இதுவரை ஏதாவது அதிமுக விவகாரத்தில் செய்தாரா? யாரையாவது கைது செய்தாரா? கொடநாடு கேஸ் என்னாச்சு? எடப்பாடியின் பெரிய ஊழலை பற்றி கண்டுக்கவேயில்லையே.. திமுக இருக்கும்போது இபிஎஸ், ஓபிஎஸ் கொள்ளையடிச்சுக்கணும்.. இவங்க இருக்கும்போது அவங்க கொள்ளையடிச்சிக்கணும்.. இவர்கள் கொள்ளையை பாஜக கண்டுக்காது.. கடைசியில் எல்லாருமே கூட்டுக்களவாணிகள்தான்" என்றார்..!!

English summary
Does Edappadi Palaniswami have indirect dealings with DMK and What does KC Palaniswami say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X