"தோப்பு" தனிமரமானதா? பாஜக வீசிய தூண்டிலில் மாட்டுவாரா திமுக "வெங்கடாசலம்".. என்ன நடக்குது கொங்குவில்?
சென்னை: ஈரோடு திமுக மீண்டும் பரபரப்பாகி உள்ளது.. மாஜி அமைச்சர் மீண்டும் அதிமுகவுக்கு போக போவதாகவும், பாஜகவுக்கு போக போவதாகவும் தகவல்கள் பரபரத்து வருகின்றன. என்ன நடக்கிறது பெருந்துறையில்?
முன்னாள் அமைச்சர் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர்.. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இவருக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அழகு பார்த்துள்ளார்.
கடந்த 2016, சட்டமன்ற தேர்தலில் பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வெளியிட்டார்..
இரும்பு கோட்டை

இதற்கான பிரம்மாண்ட கூட்டத்தையும் தோப்பு வெங்கடாச்சலம் அப்போது ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 14 வேட்பாளருக்காக ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.. அதேபோல, கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது.. அந்தவகையில், அதிமுகவின் இரும்பு கோட்டையாகவே ஈரோடு மாவட்டம் திகழ்ந்து வந்தது.. அமைச்சராக இருந்தபோது தோப்பு வெங்கடாச்சலம், தொகுதி வளர்ச்சிக்காகவும், மாவட்ட வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவர் மறைவுக்கு எனினும் ஆரம்பத்தில் அமைச்சர் பதவிக்காக முயன்றார்.. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.
தோப்பு தனிமரம்
அதனால் எம்பி தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன. ஆனால், கடந்த எம்பி தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, அவருடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது.. இதற்கு காரணம், சாட்சாத் தோப்பு வெங்கடாசலத்தின் கடினமான உழைப்புதான்.. ஆனாலும், உட்கட்சி பூசல் என்னவோ தொகுதிக்குள் நிலவி கொண்டுதானிருந்தது.. குறிப்பாக, மாஜி அமைச்சர் கருப்பண்ணனுடனான மோதலும் நீடித்தது..
லடாய்கள்
அன்று, தோப்பு வெங்கடாசலம் கையில் இருந்த சுற்றுச்சூழல் துறை பறிக்கப்பட்டு கருப்பண்ணனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது... அப்போது முதலே இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் இருக்கின்றன.. ஒருகட்டத்தில், கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதமும் எழுதியிருந்தார்... இப்படிப்பட்ட சூழலில்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் தரப்போவதில்லை என்ற தகவல் கசிந்தது.. அதுமட்டுமல்ல, கருப்பணன் ஆதரவாளரான ஜெயகுமாருக்கு சீட் கிடைத்ததுமே அதிர்ந்து போன தோப்பு வெங்கடாசலம், நான் என்ன தப்பு செய்தேன் என்று கதறி கதறி அழுத நிகழ்வுகள் எல்லாம் அப்போது நடந்தது..
"பிராண்டு"
இதற்கு பிறகுதான் தோப்பு திறன்பட செயல்பட்டார்.. திடீரென சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்வதாக அறிவித்து எடப்பாடிக்கே ஷாக் தந்தார்.. காரணம், தன்னை நம்பிய பெருந்துறை தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடனேயே இருந்து வருவதால், இப்படி ஒரு அதிரடியை கையில் எடுத்தார்.. பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.. என்றாலும், இதில் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கி, தன்னுடைய செல்வாக்கை வலுவாகவே தொகுதிக்குள் தக்க வைத்ததையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
முணுமுணுப்பு

இதையடுத்துதான், இவர் திமுகவில் இணைய முயற்சிகளை எடுத்தார்.. இதற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பின்னணி இருப்பதாக முணுமுணுக்கப்பட்டது.. எனினும், பிரதிபலனா தனக்கு மாவட்ட செயலர் பதவி தரணும் என்று தோப்பு அப்போதே கேட்டதாக தெரிகிறது.. அதிமுகவின் பிரபலமான முகங்கள், அதாவது "பிராண்டு" நபர்கள், கட்சியின் திமுகவில் இணைய மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.. அந்தவகையில், தோப்பு வெங்கடாசலம் கடந்த ஜூலை 11ம்தேதி அறிவாலயத்தில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மணியோசை
அப்போது, தோப்பு வெங்கடாசலம் பேசும்போது, "நாங்கள் 'நிதி'யைத் தேடி வரவில்லை. நாங்கள் 'உதயநிதி'யை தேடி வந்திருக்கிறோம். நீதி இங்குதான் இருக்கிறது என்று வந்திருக்கிறோம்.. ஈரோடு மாவட்டத்திலிருந்து 900-க்கும் மேற்பட்டோர் இப்போது இணைந்துள்ளனர். இது மணியோசை தான். தலைவர் அனுமதியும், ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேரை திமுகவில் இணைப்போம்" என்று கெத்தாக கூறினார் தோப்பு வெங்கடாசலம்.
இந்த நிகழ்வுக்கு பிறகு, அதிமுகவின் கோட்டையான கொங்குவை தன் பக்கம் திமுக சாய்த்து வருகிறது.. அதிமுக, பாஜகவின் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்ந்து வலைவீசி, அதில் வெற்றியும் பெற்று வருகிறது.. மாற்று கட்சியில் இருந்து வந்த பலருக்கு திமுகவில் மிகப்பெரிய பொறுப்புகள் தரப்பட்டு வரும் நிலையில், எனினும், தோப்புவை திமுக எந்த அளவுக்கு பயன்படுத்தி கொண்டது என்று தெரியவில்லை.. 2 தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், பொறுப்புகள், பதவிகள் பெரிதாக தரவில்லை என்றே தெரிகிறது.. அதனால்தானோ என்னவோ, தோப்பு தற்போது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும், அவர் திமுகவில் இருந்து விலக போவதாகவும் தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடியே உள்ளது.
2 மாதங்களுக்கு முன்புகூட தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் கசிந்தன. ஆனால் அந்த தகவலுக்கு தோப்பு வெங்கடாசலம் உடனடி மறுப்பு தெரிவித்திருந்தார்.. "பாஜகவில் நான் இணையும் தகவலை யாரும் நம்ப வேண்டாம், தற்போதுவரை திமுகவில்தான் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.. இந்நிலையில், மறுபடியும் ஒரு சலசலப்பு கிளம்பி உள்ளது.. திமுகவில் இருந்து விலகி மறுபடியும் அதிமுகவிலேயே இணைய போவதாக கூறுகிறார்கள்.. ஆனால், இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் கேட்டபோது, மறுபடியும் தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுகவில் சேர்க்கும் எண்ணமில்லை என்ற தகவல் வெளியானது.
ஆனால், அதே நேரம், தோப்பு வெங்கடாச்சலத்தை பாஜகவில் சேர்க்க அழைப்பு வந்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. பாஜகவில் இணைந்தால், கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவரிடம் சொல்லப்பட்டதாம்.. ஆனால், இதற்கு தோப்பு வெங்கடாச்சலம் இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்து வருகிறாராம்.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும், அதன்பிறகே விரைவில் தன்னுடைய முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி தீயாய் பரவிவரும் செய்திகளும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஒருவேளை, தோப்பு மற்றும் பாஜக தரப்பிலேயே இப்படியெல்லாம் செய்திகள் கிளப்பி விடப்படுகிறதா? என்றும் தெரியவில்லை.. ஆனால், திமுகவில் தோப்பு வெங்கடாசலம் இணைந்து 2 வருடங்கள் மேலாகியும் அவருக்கு முக்கியமான பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.. சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணிக்குழுவில் அவர் இடம் பெற்றிருந்தாலும்கூட, பிரச்சாரம் எதையும் மேற்கொள்ளவில்லை... அதேபோல, கடந்த சில மாதங்களாகவே திமுக நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அமைதியாக இருந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே, கொங்குவை தக்க வைத்து கொள்வதில் எடப்பாடி பழனிசாமி, மும்முரமாகி உள்ளார்.. மற்றொருபக்கம், திமுகவின் அதிருப்தியாளர்களுக்கு தூண்டிலை வீசி, தமிழக பாஜக தன்பக்கம் இழுத்து வருகிறது.. அதிமுகவின் கொங்கு கோட்டையை தன் பக்கம் சாய்க்க, திமுக கடந்த 2 வருடங்களாகவே முயன்று வரும்நிலையில், இதுபோன்ற சலசலப்புகள், குழப்பத்தை தந்து வருகின்றன.. கொங்கு மண்டலத்தில், அதுவும் சொந்த தொகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தோப்பு வெங்கடாசலம் போன்ற சீனியர்கள் இருந்தால், அது திமுகவுக்கே பலம் தரும் என்பதும் யதார்த்த உண்மையே.. தோப்புவை திமுக இழக்கிறதா? அல்லது பாஜக முந்திக்கொள்கிறதா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
திமுக கூட்டணிக்கு குட்பை? இன்று அறிவிக்கும் வேல்முருகன்.. தவெக அதிருப்தியின் பின்னணி இதுதான் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications