விரலை நீட்டிய அமித் ஷா.. அதென்ன பாடிலேங்குவேஜ்? சாவகாசமாக வந்து சுருக்னு கேட்டுட்டாரு.. யார் பாருங்க
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டி தந்திருக்கிறார்.. இதுதான், தற்போது தமிழக அரசியலில் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, அமித்ஷா மேடையிலேயே கடிந்து கொண்டிருந்தார்.. இது மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது. பொது மேடையில் அமித்ஷாவின் அந்த கண்டிப்பு வெவ்வேறு கோணங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

விளக்கம்: எதற்காக தமிழிசையை அமித்ஷா கடிந்துகொள்ள வேண்டும் என்று, சோஷியல் மீடியாவில் பல்வேறு யூகங்கள் வலம்வந்தன.. "அண்ணாமலையை பகைத்துக் கொண்டதற்கு, தமிழிசையைக் கண்டித்துவிட்டார் அமித் ஷா" என்று சோஷியல் மீடியாவில் அண்ணாமலையின் ஆதரவாளர்களே தகவலை பரப்பியதாகவும் சொன்னார்கள்..
அதற்கேற்றவாறு, அன்றையதினம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தமிழிசை, செய்தியாளர்களை சந்திக்காமலேயே வீடு திரும்பவும், மீண்டும் சந்தேகம் அதிகமாகிவிட்டது.. பிறகு கிட்டத்தட்ட 24 மணிநேரம் கழித்து, அமித் ஷாவுடன் நடந்த உரையாடல் குறித்து விளக்கம் ஒன்றை தந்திருந்தார் தமிழிசை..
தமிழிசை: அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து பேசியிருந்தார். இதனால், இந்த விவகாரம் ஓரளவு முற்றுப்பெற்றது என்றாலும், அமித்ஷா ஏன் தமிழிசையிடம் கடுகடுப்பு காட்ட வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் விடையே தெரியவில்லை.
ஆனால், தமிழிசை மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்ட, தென்சென்னை பாஜக செயலாளர் வேண்டுமென்றே, தமிழிசை மீது, இல்லாததையும் பொல்லாததையும் கட்டவிழ்த்து விட்டாராம். இதுதான் அமித்ஷா வரைக்கும் சென்று, தமிழிசையை கடிந்து கொள்ள வைத்துவிட்டதாம். அதற்கு பிறகுதான் உண்மைத்தன்மை அறிந்த பாஜக மேலிடம், அண்ணாமலையை அனுப்பி தமிழிசையிடம் சமாதானம் பேச செய்திருக்கிறது.
மறைமுக உறவு: பாஜகவிடமிருக்கும் மறைமுக உறவு காரணமாகவே, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் விலகுவாக திமுக கூட்டணி தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், அந்த கூற்றை பொய் என்று நிரூபிப்பதற்காகவே, ஜெயக்குமார் இவ்வாறு பேசியிருக்கலாம் என்கிறார்கள்.. ஆகமொத்தம், அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து, தமிழிசைக்காக அதிமுகவே பரிந்து பேசியிருப்பதுதான், களத்தை மேலும் தகிக்க வைத்து வருகிறது.
ஆனால், இதனை தமிழிசைக்கே நேரடியாகவே ஃபோன் போட்டு அமித்ஷா பேசியிருக்க முடியும் என்றாலும், அது பாஜக தலைவர்களுக்குத் தெரியாமலே போய்விடக்கூடும்.. அதை விரும்பாத அமித்ஷா, அண்ணாமலையை தமிழிசையை சந்திக்க அனுப்பி வைத்து அவர் மூலமாகவே தமிழிசையிடம் பேசி சமாதானப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.
ஆதரவுக்கரம்: இப்படிப்பட்ட சூழலில், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.. இதுகுறித்து ஜெயக்குமார் சொன்னதாவது:
"தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு.. மேடையில் இருந்த அமித்ஷாவின் உடல்மொழியே அவர் ஆத்திரத்தில் தமிழிசையை பேசியதை உணர முடிந்தது.
அமித்ஷா: உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு தமிழிசையை மேடையில் வைத்து கடுமையாக பேசியிருக்கக் கூடாது. மேடை நாகரீகம், பண்பாடு என்னவென்று தெரியாமல் அமித்ஷா நடந்து கொண்டுள்ளார். அண்ணாமலை வந்தபிறகு சமூகவிரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவிட்டதை தமிழிசை தெளிவுபடுத்தி உள்ளார். தமிழிசை பேசியது தவறு என்றால், டெல்லிக்கு அழைத்து கண்டித்திருக்கலாம், மேடையில் அவமானப்படுத்தியிருக்கக் கூடாது" என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
ஜெயக்குமார் ஏன் இப்போது திடீரென இந்த விஷயத்தில் என்ட்ரி ஆகிறார்? எதற்காக தமிழிசைக்கு சப்போர்ட் செய்துள்ளார்? என்று தெரியவில்லை.. தமிழிசையை மேடையில் வைத்து அமித்ஷா கடிந்துகொண்டு, 5 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், ஜெயக்குமார் தமிழிசைக்கு சப்போர்ட் செய்துள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. ஆனால் அதிமுக, பாஜக வட்டாரத்தில் குழப்பியடிக்கிறது.
பாஜக: பாஜகவிடமிருக்கும் மறைமுக உறவு காரணமாகவே, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் விலகுவாக திமுக கூட்டணி தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், அந்த கூற்றை பொய் என்று நிரூபிப்பதற்காகவே, ஜெயக்குமார் இவ்வாறு பேசியிருக்கலாம் என்கிறார்கள்..
அல்லது தமிழிசைக்கு சப்போர்ட் செய்வதுபோல செய்து, ஏற்கனவே மேலிட பாஜகவுடனிருக்கும் அதிருப்தியை, இன்னும் அதிகமாக்கவே இப்படி ஜெயக்குமார் பேசியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.. ஆகமொத்தம், அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து, தமிழிசைக்காக அதிமுகவே இறங்கிவந்து பரிந்து பேசியிருப்பதுதான், தற்போது களத்தை மேலும் தகிக்க வைத்து வருகிறது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications