Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 நைட் ஒன்லி ஜாலி".. 7-வது கல்யாணத்துக்கு ரெடியான சந்தியா.. பெரிய நெட்வோர்க்.. சிக்கும் "மாமா"க்கள்

7வது திருமணம் செய்யவிருந்த பெண் உட்பட கும்பல் கைதாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 6 கல்யாணம் செய்துவிட்டு, 7வது கல்யாணத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த கல்யாண பெண் போலீசாரிடம் சிக்கி உள்ளார். யார் இந்த பெண்? பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம்.. இங்கு வசித்து வருபவர் தனபால்.. 35 வயதாகிறது.. மதுரையை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடன் கடந்த 7ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

புதுவெங்கரைஅம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தாலும், பெண் வீட்டின் சார்பில் வெறும் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்..

 பயங்கர லாபம்

பயங்கர லாபம்

கல்யாண பெண்ணுக்கு, அக்கா, மாமா என்று சொல்லி புரோக்கர் பாலமுருகன் என்பவர் அவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.. கடைசியில் அக்கா, மாமா, புரோக்கர் இந்த 3 பேரும்தான் கல்யாணத்தில் பங்கேற்றிருந்தனர்.. தாலி கட்டின கையோடு, கமிஷன் தொகையாக ரூ.1.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு புரோக்கர் முதலில் சென்றுவிட்டார்.. அடுத்த கொஞ்ச நேரத்தில் அக்கா - மாமா கிளம்பி விட்டார்கள்.. திருமணம் முடிந்த 2வது நாள் விடிகாலை கல்யாண பெண்ணையே காணோம்..!

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

டென்ஷனாகிவிட்ட மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தாரும் எங்கெங்கோ தேடினார்கள்.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. அதனால், புரோக்கர் பாலமுருகனுக்கு போனை போட்டார்கள்.. பாலமுருகன் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன... அப்போதுதான் சந்தேகம் வந்து வீட்டில் பீரோவை பார்த்தால், கல்யாண பட்டுப்புடவை, நகைகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது.. இதற்கு பிறகுதான் போலீசில் புகார் தந்துள்ளனர்.

அலர்ட்

அலர்ட்

போலீசாரும் சந்தியாவை தேடி வந்தபோதுதான், சந்தியா பற்றின வேறு ஒரு தகவல் கிடைத்தது.. அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்ய மணமகளை தேடியபோது, வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது... அதற்கான திருமண ஏற்பாடும் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தனபால் தன்னுடைய குடும்பத்தினரை அலர்ட் செய்து, திருமண நாளன்று திருச்செங்கோட்டிற்கு காரில் வந்த சந்தியாவையும், அவர் உடன் வந்த 3 பேரையும் தனபால் குடும்பத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 6 மாப்பிள்ளைகள்

6 மாப்பிள்ளைகள்

அதற்கு பிறகுதான் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.. மதுரையை சேர்ந்த சந்தியாவுக்கு இதுவரை 6 முறை திருமணம் நடந்துள்ளது.. தனபால் 7வது நபர்.. இவர்களுக்கென தனி நெட்வொர்க் இருக்கிறதாம்.. புரோக்கர்கள் என்று ஆண், பெண் தனித்தனியாக உள்ளனர். இவர்களுக்கு எந்தெந்த பகுதி என்று ஏரியா பிரித்து தந்துவிடுவார்களாம்.. அதேபோல, உறவினர்கள் என்று இந்த அக்கா - மாமா மட்டுமே இருப்பார்களாம்.. அதாவது, புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.. எந்த கல்யாணம் என்றாலும், லட்சக்கணக்கில்தான் இந்த புரோக்கர்கள் கமிஷன் வாங்குவார்களாம்..

ஜாலி

ஜாலி

அதேபோல, சந்தியாவும் இரண்டு நாள் மட்டும் மாப்பிள்ளையுடன் உல்லாசமாக இருப்பாராம்.. 3வது நாள் விடிவதற்குள் கிளம்பி விடுவாராம்.. கணவன் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போதுதான், சந்தியா வீட்டை விட்டு வெளியேறுவார்.. ஆனால், அதற்கு முன்தினமே தன்னுடைய உடைமைகள், நகைகளை தயாராக எடுத்து வைத்து விடுவாராம்.. ஏழாவதாக சந்தியா திருமணம் செய்யவிருந்தவர் ஒரு மாற்றுத்திறனாளியாம்.. ஆனால், மாப்பிள்ளைகளை முடிவு செய்வது, சந்தியா கிடையாது.. இந்த கும்பல்தான்.. இந்த நெட்வொர்க்கிற்கு மூளையாக பாலமுருகனும், தனலட்சுமியும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்..

 நைட் 2 நாள்

நைட் 2 நாள்

மதுரையை சேர்ந்த பெண் புரோக்கரான தனலட்சுமி, சந்தியாவை போல் இன்னும் 3, 4 பெண்களை வைத்து, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.. குறிப்பாக, இவர்கள் காங்கேயம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில், மாதம் ஒருமுறை இதுபோல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். இதில் சந்தியா மட்டுமே, கடந்த ஒன்றரை வருடத்தில் 6 பேரை திருமணம் செய்துள்ளார்... இதில் கொடுமை என்னவென்றால், சந்தியாவுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்களாம்..

வாரிசுருட்டல்

வாரிசுருட்டல்

போலீசில் சந்தியா சொல்லும்போது, "தன்னை கட்டாயப்படுத்தி, மிரட்டிதான் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள்' என்று கண்ணீர் வடித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, கல்யாணம் முடிந்த 2 நாள் முதல் 7 நாட்களுக்குள் பணம், நகை, துணிமணிகள் என எது கிடைத்தாலும், வாரிசுருட்டிக் கொண்டு சென்றுவிட வேண்டுமாம்.. அதற்கு முன்பு இந்த கும்பலுக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட வேண்டும்.. அப்போதுதான், நள்ளிரவில் வந்து காருடன் காத்திருந்து, தன்னை அழைத்துச் சென்றுவிடுவார், என்கிறார் சந்தியா. இதில் இன்னொரு ஷாக் சம்பவமும் உள்ளது.. இந்த மோசடி கும்பல், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே, தொடர்ச்சியாக கைவரிசை காட்டி வந்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது.

 ஷாக் சம்பவம்

ஷாக் சம்பவம்


பணப்புழக்கம் உள்ள அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம், எளிதாக ரூ1.50 முதல் ரூ.2 லட்சம் வரை பணம் கறக்கலாம் என்றும் இவர்களிடம் பணத்தை அபேஸ் செய்தாலும், குடும்ப கவுரவம் கருதி போலீசில் புகார் தர மாட்டார்கள் என்பதாலேயே, தொடர்ச்சியாக அந்த குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே மோசடியில் ஈடுபட்டதாகவும் கைதானவர்கள் சொல்கிறார்கள்... அனைவரும் கைதாகி விட்ட நிலையில், புரோக்கர் பாலமுருகன் மட்டும் மிஸ்ஸிங்.. அவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் போலீசார்.. ஏற்கனவே சந்தியாவை திருமணம் செய்து ஏமாந்தவர்கள் யார், யார்? என்ற லிஸ்ட்டையும் எடுத்து விசாரித்து வருகின்றனர்..!

சந்தியா

சந்தியா

தற்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. தனபாலுடன் திருமணம் நடந்தபோது, வெறும் 3 பேரை பார்த்துவிட்டு, ஏன் 3 மட்டும் வந்துள்ளீர்கள் என்று தனபால் சந்தேகத்துடன் கேட்டுள்ளார்.. "என்ன உங்க வீட்டுல இவ்வளவு பேர்தான் வந்திருக்காங்க. உறவினர்கள் யாரும் வரவில்லையே" என்று கேட்டாராம்.. அதற்கு சந்தியா, "எங்க உறவினர்களுக்கும், எங்களுக்கும் பிரச்சனை. எங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. உங்களை மட்டுமே உறவாக நினைச்சு இந்த திருமணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இனி, நீங்க மட்டும்தான் என் உலகம், உறவினர்" என்று கண்கள் கலங்கி கொண்டே சொன்னாராம்.. இதில்தான் தனபால் உருகி விழுந்தாராம்.

கண்ணீணீர்

கண்ணீணீர்

சந்தியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, தன்னுடைய குழந்தையை கடத்தி வைத்து புரோக்கர் பாலமுருகன் மிரட்டியதால் தான் மோசடி திருமணங்களுக்கு சம்மதித்ததாக வாக்குமூலம் தந்தார்.. அதற்கு போலீசார், "அப்படியானால் 6வது கணவன் மன்னித்து ஏற்றுகொள்வதாக சொல்கிறானே, அவனுடன் வாழத்தயாரா? என்று கேட்டார்கள்.. உடனே சந்தியா "எனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்காஙக.. என்னால யாருக்கும் அசிங்கம் இனியும் வேண்டாம்" என்று கண்ணீர் சிந்தியபடியே சொன்னாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+