நான் என்ன முட்டாளா? எனக்கு அரசியல் தெரியாதா? குமரவேலுக்கு மநீம கோவை சரளா பதிலடி!
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் என்னை என்ன முட்டாள் என்று நினைக்கிறாரா என்று கோவை சரளா கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் என்னை என்ன முட்டாள் என்று நினைக்கிறாரா என்று கோவை சரளா கேள்வி எழுப்பி உள்ளார். குமரவேல் குறித்து கோவை சரளா கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஒரே நாளில் மூன்று நிர்வாகிகள் நேற்று விலகி இருக்கிறார்கள். இதில் அதிகம் பேசப்பட்டது சி.கே. குமரவேல் ராஜினாமாதான். இவர் மக்கள் நீதி மய்யம் மீது கடுமையான புகார்களை வைத்து இருந்தார்.
சி.கே. குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்தார். நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீதும், செயற்குழு உறுப்பினர் கோவை சரளா மீதும் கடுமையாக புகார் வைத்தார்.

குமரவேல் பேட்டி
சி.கே. குமரவேல் அளித்த பேட்டியில், மக்கள் நீதி மய்யமும் எல்லா கட்சி போலத்தான் செயல்படுகிறது. கமல்ஹாசனின் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. கோவை சரளா என்னை நேர்காணல் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் கட்சியில் சேர்ந்த கோவை சரளாவிற்கு கமல்ஹாசன் செயற்குழு பதவி கொடுத்ததை ஏற்க முடியாது. அதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று குமரவேல் குறிப்பிட்டார்.

கோவை சரளா என்ன சொன்னார்
தனியார் தொலைக்காட்சியில் கோவை சரளா இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்தில் குமரவேலுக்கு பதில் அளித்துள்ளார். அதில், நான் கட்சியில் சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால் எனக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் என்னை நேர்காணல் செய்ய கமல்ஹாசன் அழைத்தார்.

பதில் அளித்த கோவை சரளா
நான் முட்டாள் என்று குமரவேல் நினைக்கிறாரா? எனக்கு அரசியல் தெரியாது, எனக்கு கேள்வி கேட்க தகுதியில்லை, நேர்காணல் செய்ய தகுதி இல்லை என்று குமரவேல் நினைக்கிறாரா? கமல்ஹாசனை முட்டாளை பயன்படுத்துகிறார் என்று குமரவேல் சொல்கிறாரா?

முடியுமா?
குமரவேல் என்னிடம் இதை நேரடியாக சொல்வாரா? அவருக்கு அந்த தைரியம் இருக்கிறதா? அவர் என்னிடம் நேரடியாக இதை சொன்னால் அவருக்கு நான் பதில் சொல்வேன். அங்கு நான் மட்டுமே நேர்காணல் செய்யவில்லை. பலர் அங்கு கேள்வி கேட்டனர். ஆனால் நான் மட்டும்தான் குமரவேலுக்கு தெரிந்து இருக்கிறேன், என்று கோவை சரளா பதில் அளித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications