"ப்ச், கைவிட்டுட்டாங்க, தப்பு பண்ணிட்டேனே".. அவர்கிட்ட ஓபனா சொன்ன ஓபிஎஸ்.. அவங்க கேட்ட "அந்த" கேள்வி
சசிகலா மற்றும் தினகரனிடம் அதிமுக விவகாரம் குறித்து ஓ பன்னீர்செல்வம் புலம்பினாராம்.
சென்னை: அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளதாம் ஓபிஎஸ் கூடாரம்.. இனி அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனைகள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், ஓபிஎஸ் விவகாரம் குறித்த ஒரு முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
நேற்றைய தினம், பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், அந்த பொதுக்குழுவின்போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியாகி இருக்கிறது.
சுப்ரீம்கோர்ட் உத்தரவையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது ஓபிஎஸ் தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

குழம்பிய கூல்தலைவர்
ஓபிஎஸ் மட்டுமல்லாமல், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருக்குமே இந்த தீர்ப்பு மிகுந்த ஷாக்கை தந்துள்ளதாம். ஏற்கனவே இடைத்தேர்தல் விவகாரத்தில், தங்களை பாஜக சரியாக நடத்தப்படவில்லை என்றும், கடைசிவரை இழுபறி நிலைமைக்குகொண்டுபோய் கைவிட்டுவிட்டதாகவும் ஓபிஎஸ் டீம் நினைக்கிறது. அதனால்தான், அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் போடும் அளவுக்கு செல்லவும் நேரிட்டது.. போதாக்குறைக்கு எடப்பாடியும்சரி, பாஜகவும்சரி, இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு, அழைப்பும் விடுக்காதநிலையில், ஓபிஎஸ் அதிர்ந்தே போனார். ஓபிஎஸ்ஸுக்கே இந்த நிலைமையா என்று அதற்கு மேல் குழம்பி போன டிடிவி தினகரன், கடைசிநேரத்தில் வேட்பாளரை வாபஸ் பெற்றார்..

+பாயிண்ட்ஸ்
அதுமட்டுமல்ல, நாளுக்குநாள், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தரும் முக்கியத்துவத்தையும், ஆதரவையும் பார்த்து, ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா என 3 தரப்புமே கடுமையான அதிருப்தியிலும் உள்ளதாக சொல்லப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் எடப்பாடிக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் கூடியுள்ளது. இதனால் ஓபிஎஸ் மட்டுமல்லாமல், தினகரனும், சசிகலாவும்கூட அப்செட்டில் இருக்கிறார்களாம்.. சட்டரீதியாகவே அடுத்தக்கட்ட நடவடிக்கையை ஓபிஎஸ் டீம் எடுத்தாலும், அது எந்த அளவுக்கு அவருக்கு பலன் தரும் என்று தெரியவில்லையாம்..

மேலிட லாபி
எடப்பாடி பழனிசாமியை சுப்ரீம்கோர்ட்டும் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்க வேண்டும். அதனால், ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் கடைசி சான்ஸ் தேர்தல் ஆணையம் ஒன்று மட்டும் தான் என்று தெரிகிறது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், ஓபிஎஸ் அரசியல் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். அதனால், கையை பிசைந்து நிற்கிறாராம் ஓபிஎஸ்..

தம்பிதுரை + மோடி
4 நாட்களுக்கு முன்பு நம்முடைய "ஒன் இந்தியா"வில் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தோம்.. டெல்லி தலைமையிடம் எடுத்து சொல்ல சரியான நபர் இப்போதைக்கு யாருமில்லை என்பதுதான் ஓபிஎஸ் டீமின் பிரதான பிரச்சனையாக இருக்கிறதாம்.. அதாவது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, ஆதரவாக நின்று, பிரதமர் மோடியிடம் சென்று பேசக்கூடிய அளவுக்கு தம்பிதுரை உதவினாரோ, அதுபோல் தங்கள் தரப்புக்கு யாரும் இல்லை என்பதே அந்த வருத்தமாக இருக்கிறதாம்.. அண்ணாமலையை மீறி சீனியர்கள் யாரும், ஓபிஎஸ் தரப்புக்கு உதவ முன்வரவில்லையாம்.. அதனால், டெல்லியில் தமக்காக பேச, நம்பிக்கையானவர் ஒருவர் தேவை என்பதை உணர்ந்துள்ளதாக தெரிகிறது..

தம்பிதுரை
ஆனால், டெல்லியில் அண்ணாமலையின் "வாய்ஸ்" அதிகமாக இருப்பதால், நம்பிக்கையானவர் கிடைத்தாலும்கூட, அது எந்த அளவுக்கு பலன் தரும் தெரியவில்லை என்ற கலக்கமும் ஓபிஎஸ் தரப்புக்கு இருப்பதால், விரைவில் சசிகலாவுடன் கைகோர்ட் ஓபிஎஸ் தயாராகி வருவதாக நாம் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது இதே விஷயத்தைதான் சுட்டிக்காட்டி சசிகலா, ஓபிஎஸ்ஸிடமே நேரடியாக பேசியிருக்கிறாராம். அது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்றும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. தீர்ப்பு வந்ததையடுத்து, நேற்றிரவு சசிகலாவிடமும் தினகரனிடமும் பேசினாராம் ஓபிஎஸ்..

பழனிசாமி லாபி
அப்போது சசிகலா ஓபிஎஸ்ஸிடம், "டெல்லியிலும் நீதிமன்ற வளாகத்திலும் அசைக்க முடியாத லாபியை பழனிச்சாமி (எடப்பாடி) வைத்திருக்கிறார். உங்களால் ஏன் அப்படி ஒரு லாபியை வைக்க முடியவில்லை? உங்களிடம் நான் பேசும்போதெல்லாம், 'பாஜக தலைவர்களிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்கு நல்ல சோர்ஸை வைத்திருக்கிறேன். பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவைத்தான் (ஓபிஎஸ்சுக்கு சாதகமானவை ) சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யும்ன்னு சொன்னீங்க.. ஆனால், உங்க நம்பிக்கை தப்பாபோய்டுச்சே, உங்களுக்கு சரியான சோர்ஸ் இல்லையா?" என்று கேட்டுள்ளார் சசிகலா.

ராஜதந்திரி
அதற்கு, ஓபிஎஸ், "பாஜக தலைமையை ரொம்பவும் நம்பினேன். கைவிட்டுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டுள்ளார். தினகரனிடம் பேசியபோதும் இதே ரீதியிலேயே ஓபிஎஸ் பேச்சு இருந்ததாம்.. எனவே, விரைவில், சசிகலாவை ஓபிஎஸ்சை சந்திப்பார் என்கிறார்கள் அவரது தரப்பினர். இதற்கிடையே, அரசியல் ராஜதந்திரியும், ஓபிஎஸ் டீமின் மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், சுப்ரீம்கோர்ட் வழங்கிய தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் அலசி ஆராய்ந்து வருகிறாராம்..!

சிக்கும் மீன்கள்
இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது. அதாவது, "ஓபிஎஸ்சுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. அவர் பாஜகவில் சேர வேண்டும் அல்லது தனிக் கட்சி துவங்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தாலும் அது சூசைட்டுக்கு சமம்... அவருக்கே எதிர்காலம் இல்லாத போது, உங்களுக்கும் இருக்காது. அதனால், மறுபடியும் நம்ம கட்சிக்குள் வந்து விடுங்கள். எடப்பாடியிடம் பேசி உங்களுக்கான முக்கியத்துவத்தை கிடைக்கச் செய்கிறோம். இப்போதே முடிவு எடுத்தால் அது உங்களுக்கு நல்லது. இனியும் ஓபிஎஸ்சை நம்பி ஏமாறாதீர்கள்" என்று பேசி வருகின்றனர். எடப்பாடி உத்தரவின் பேரிலேயே இந்த முயற்சியை அவரது மா.செ.க்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

அசையும் அச்சாணி
இந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாக மா.செ.க்கள் சொல்கின்றனர்.. ஏற்கனவே நொந்துபோயுள்ள அதிருப்தியாளர்கள், இப்படி வலிய வரும் வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்றும், அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் முனைப்பு காட்ட துவங்கி விட்டார்களாம்.. அதனால் விரைவில் எடப்பாடியை நோக்கி கிளம்பி வருவார்கள் என்றும், ஓபிஎஸ்சின் கூடாராம் காலியாகும் என்றும், அதீத மிதப்பில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. ஏற்கனவே ஒருமுறை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை, தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியை எடப்பாடி தரப்பு எடுத்ததாக செய்திகள் கசிந்ததை இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications