பாஜகவை கைவிட்ட தென்சென்னை? போன வேகத்திலேயே சறுக்கிடுச்சே.. திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை
சென்னை: தென்சென்னை தொகுதியில் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.. பெருவாரியான தேர்தல் கணிப்புகளில் கூறியிருந்தபடியே, திமுகவே முன்னிலை வகித்து வருகிறது.
இந்த முறை திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் - அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி ஆகியோர் களம் கண்டுள்ளனர்.

வேட்பாளர்கள்: திமுகவின் பாரம்பரியமான தொகுதியாக கருதப்படும் இந்த தென்சென்னையில், இந்த முறையும் தமிழச்சி தங்க பாண்டியனே களமிறங்கியிருக்கிறார். கடந்த முறை போல அல்லாமல், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக களமிறங்கியிருப்பதும் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு நடுவில், கடந்த முறை தேர்தலில் திடீரென என்ட்ரி தந்து, 1,36,645 வாக்குகளை பெற்றிருந்தது மக்கள் நீதி மய்யம். இந்த முறை திமுகவுடன் மய்யம் ஐக்கியமாகியிருப்பதால், பெருத்த லாபம் திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
ஜெயவர்தனே: அதிமுகவுக்கும் இந்த தென்சென்னை தொகுதியானது சாதகமானதாகவே நம்பப்படடு வருகிறது. இந்த முறையும் மூத்த தலைவர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனே களம் கண்டுள்ளார்.. அதாவது, 2014-ல் வென்று 2019-ல் தோற்ற ஜெயவர்தன், இப்போது 3-வது முறையாக போட்டியிட்டுள்ளார்..
பாஜகவை பொறுத்தவரை, இந்த தென்சென்னையில் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது.. காரணம், பிராமண சமூகத்தின் வாக்குகளையே பிரதானமாக நம்பியிருக்கிறது. ஏனென்றால், கடந்த முறை தேர்தலில், மூத்த தலைவர் இல.கணேசன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார்..
வாக்கு வித்தியாசம்: அதுமட்டுமல்ல, கடந்த 2014 எம்பி தேர்தலில், 2ம் இடத்தை பிடித்த திமுகவுக்கும், 3ம் இடத்தை பிடித்த பாஜகவுக்கும், வாக்கு வித்தியாசங்கள் வெறும் 40 ஆயிரம் வாக்குகளே.. எனவேதான், 2019-லேயே தமிழிசையே இங்கு தென்சென்னையில் போட்டியிட விருப்பப்பட்டார். இப்போதுகூட, ஆளுநர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு, டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் இங்கு போட்டியிட்டுள்ளார்.
அந்தவகையில், திமுக, அதிமுகவை வென்றாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இங்கு ஏற்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட "மினி" கோவை தெற்கு தொகுதி போலவே, தென்சென்னையும் பாஜக, மநீம கட்சிகளுக்கு அமைய போவதாக கணிப்புகள் கூறிவருகின்றன.
எதிர்பார்ப்பு: அதேபோல, திமுக கூட்டணி, பாஜக என இரு தரப்பையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியும், கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. 2 நாட்களுக்கு முன்புவந்த எக்ஸிட் போல் முடிவுகளில்கூட, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 37 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்றும், 2வது இடத்தை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 27 சதவீத வாக்குகளுடன் பெறுவார் என்றும், பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் 19 சதவீத வாக்குகளையே பெறுவார் என்றும் தந்தி டிவியின் கணிப்புகள் கூறியிருந்தன.
பாஜகவுக்கு எதிராக களம் இருப்பதாக சொன்னாலும், 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில், 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை தமிழிசை வெளியிட்டிருந்தது தொகுதி மக்களின் கவனத்தை திருப்பியிருந்ததை மறுக்க முடியாது.
யாருக்கு தென்சென்னை: மொத்தத்தில், தென்சென்னையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிமுக, பாஜக, திமுக என 3 கட்சிகளுமே ஏற்படுத்திய நிலையில், இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில், ஆரம்பத்திலேயே திமுக முன்னிலை பெற்று வருகிறது.. தமிழச்சி தங்கபாண்டியன் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருகிறார்.. இந்த தொகுதியை பாஜக மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதில், 2வது இடத்தை பெறும் என்று யூகிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.. காலை 10.30 மணி நிலவரப்படி, தமிழச்சி தங்கபாண்டியன், மொத்தம் 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்...
பாஜக: அந்தவகையில், திமுக 27252 வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தது.. இதற்கு அடுத்தபடியாக 14745 வாக்குகளை பெற்று பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியிருந்தது.. அதிமுக 9176 வாக்குகளை பெற்று 3வது இடத்தை தக்க வைத்திருந்தது.
இதையடுத்து, காலை 11.30 மணி நிலவரப்படி, 27029 வாக்கு வித்தியாசங்களில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் இருந்தார்.. அந்தவகையில், திமுக 79535 வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தது.. இதற்கு அடுத்தபடியாக பாஜக 51406 வாக்குகளையும் பெற்றிருந்தது.. அதிமுக 25758 வாக்குகளை பெற்று 3வது இடத்திலும், 11812 வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி 4வது இடத்தையும் பெற்றிருந்தன.
2வது இடம் பாஜக: 12.30 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 79,639 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.. அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 25,864 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.. பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் 50,713 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருந்தார்..
தற்போது 2 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 79,639 வாக்குகளை பெற்று முதன்மையான இடத்தையே தக்க வைத்துள்ளார்.. பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 50,713 வாக்குகளை பெற்று 2வது இடத்திலேயே உள்ளார்.. 3வது இடத்தில், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உள்ளார்.. அதன்படி, இவர் 25,864 வாக்குகளை பெற்றுள்ளார்.. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இந்த நிலவரம் மாறும் என்றே தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications