2 எலும்புத்துண்டு.. அதை விடுங்க.. கரெக்ட்டா பாயிண்ட்டுக்கு வேலூர் இப்ராஹிம்.. திமுக மீது பாய்ச்சல்
திமுக அரசை வேலூர் இப்ராஹிம் விமர்சித்து குற்றஞ்சாட்டி உள்ளார்
சென்னை: மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் திட்டங்களை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தமிழக அரசு தடுப்பதாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
வரும் 2024ல் மறுபடியும் மோடியை, பிரதமராக்கி அழகுபார்க்க பாஜக தொடர்ந்து உழைத்து வருவதாக பலமுறை சொல்லி வருபவர் வேலூர் இப்ராஹிம். அத்துடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லி வருபவர்..
திமுக அரசு மீது இப்ராஹிம் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாஜகவினரும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருவது வழக்கம்.. சமீபத்தில் நடந்த கோவை சம்பவத்திலும் இப்படித்தான் ஒரு வீடியோ வைரலானது..

எலும்பு துண்டு
அதில், இப்ராஹிம் பேசியபோது, "ஜவாஹிருல்லா இருக்காரே, இந்த திமுகவை எதிர்த்துதான் கட்சியையே ஆரம்பித்தார்.. தமமுகவை இவர் ஆரம்பிக்கும்போதே, "திமுக என்பது இஸ்லாமிய விரோத கட்சி என்று சொல்லி திமுகவை அழிக்க புறப்பட்டவர்கள்... ஆனால், இன்னைக்கு பாஜகவை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. 2 எலும்புத்துண்டை திமுக போட்டதன் விளைவு, 2 எம்எல்ஏவுக்காக திமுகவிடம் இந்த சமுதாயத்தை பலி தந்து கொண்டிருக்கிறார்.

ஜவாஹிருல்லா
வெளிப்படையாக சவால் விடுக்கிறேன், பாஜகவால் இங்கே தமிழர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆபத்தா? அல்லது திமுகவால் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஆபத்தா என்பதை என்னுடன் ஜவாஹிருல்லா விவாதிக்க தயாரா? எவ்வளவு காலம்தான் மக்களை நீங்கள் எல்லாரும் ஏமாத்துவீங்க? தனித்தனி மேடை எதுக்கு? வாங்க ஒன்னா பேசுவோம்.. மக்கள் பார்க்கட்டும்.. பிரதமர் எத்தனை திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்பதை நான் புள்ளிவிவரத்துடன் சொல்றேன்.. முதல்வர் என்ன செய்தார் என்பதை நீங்க சொல்லுங்க..

எலும்புத்துண்டு
தமிழகத்தில் வாக்கு வங்கி அரசியலை நடத்தி கொண்டு, இஸ்லாமிய இளைஞர்களிடம் பயங்கரவாதத்தை நடத்திவிட்டு, கொத்து கொத்தாக ஜெயிலுக்கு போயிட்டு இருக்காங்க.. தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவீங்கன்னு நீங்களே சொல்றீங்க.. அப்படி என்றால், இஸ்லாமிய இளைஞர்களை தூண்டிவிடுவது யார்? ஜவாஹிருல்லா தூண்டிவிடலையா? எஸ்டிபிஐ தலைவர் தூண்டிவிடலையா?
நீங்க செய்ற காரியத்தால், தமிழகமே தலைகுனிகிறது.. உங்க 2 எம்எல்ஏ எலும்புத்துண்டுக்காக ஏன் இந்த சமூகத்தை பலியாக்கிறீங்க? என்ஐஏவால் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் எல்லாம் புனிதர்களா? தேவதூதர்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் இப்ராஹிம்.

ஹேப்பி பர்த்டே
இந்நிலையில், மீண்டும் திமுக அரசு மீது பாய்ந்துள்ளார்.. கோவை மாவட்டம் காரமடையில் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது.. மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு, கிறிஸ்தவர்களுடன் இணைந்து இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடினார்.. பிறகு, நிகழ்ச்சியில் பேசிய இப்ராகிம், "மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு சிறுபான்மை மக்களின் மீது அக்கறை கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஃபிளக்ஸ் பேனர்
சிறுபான்மை மக்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கொண்டு சேர்க்க கூட தமிழக காவல்துறை அனுமதிப்பதில்லை.. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக க சார்பில் ஒரு தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்தினால் கூட கலவரம் ஏற்படும் என தங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.. கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியினை நடத்த பாஜக சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்க கூட விடாமல் நீதிமன்ற உத்தரவு என தடுக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் மற்றும் உதயநிதி,அமைச்சர்களை வரவேற்க மட்டும் நூற்றுக்கணக்கான பேனர்களை வைக்க அனுமதி அளிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி











Click it and Unblock the Notifications