Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எலும்புத்துண்டு".. கரெக்ட்டா தூங்கிட்டாங்க.. ஹிட்லர் போல நடந்து கொள்ளும் ஸ்டாலின்: வேலூர் இப்ராஹிம்

திமுக அரசை வேலூர் இப்ராஹிம் விமர்சித்து குற்றஞ்சாட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்காக, பாஜகவினரை திமுகவினர் முடக்க பார்ப்பதாகவும், தமிழக முதல்வர் தங்களிடம் ஹிட்லர் போன்று நடந்து கொள்வதாகவும், பாஜகவின் வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், திமுக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

அத்துடன், 2024ல் மறுபடியும் மோடியை, பிரதமராக்கி அழகுபார்க்க, தொடர்ந்து உழைத்து வருவதாகவும் பலமுறை செய்தியாளர்களிடம் பகிர்ந்தும் வருகிறார்.

 வேலூர் இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம்

திமுக அரசு மீது இப்ராஹிம் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாஜகவினரும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருவது வழக்கம்.. சமீபத்தில் நடந்த கோவை சம்பவத்திலும் இப்படித்தான் ஒரு வீடியோ வைரலானது.. அதில், இப்ராஹிம் பேசியபோது, பாஜக நபர்கள் ஏதாவது பேசினால், உடனே அடக்குமுறை, எவ்வளவு பொய்வழக்கு போட வேண்டுமோ அவ்வளவு வழக்குகளையும் போட்டுவிடுகிறார்கள்.. நாங்கள் என்னவோ சட்டத்தை மீறுபவர்கள் போன்ற ஒரு பிம்பத்தை தமிழகம் முழுவதும் ஏற்படுத்துகிறார்கள்..

 எலும்பு துண்டு

எலும்பு துண்டு

1000 ரூபாய் எங்கே என்று கேட்டு பெண்கள் கொந்தளித்து போயுள்ளார்கள்.. அதை பற்றி கேட்டால், ஆட்சி முடிய இன்னும் 5 வருடம் இருக்கிறதாம்.. கொஞ்சமாவது வெ.மா.சூடு சொரணை இருந்தால் இப்படி சொல்வார்களா? கடைசியில் தருவாங்களாமே.. ஏழை பெண்கள் எல்லாம் அழறாங்க.. நம்பி ஓட்டுப்போட்டோம் என்கிறார்கள்.. ஜவாஹிருல்லா இருக்காரே, இந்த திமுகவை எதிர்த்துதான் கட்சியையே ஆரம்பித்தார்.. தமமுகவை இவர் ஆரம்பிக்கும்போதே, "திமுக என்பது இஸ்லாமிய விரோத கட்சி என்று சொல்லி திமுகவை அழிக்க புறப்பட்டவர்கள்...

 ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

ஆனால், இன்னைக்கு பாஜகவை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. 2 எலும்புத்துண்டை திமுக போட்டதன் விளைவு, 2 எம்எல்ஏவுக்காக திமுகவிடம் இந்த சமுதாயத்தை பலி தந்து கொண்டிருக்கிறார். வெளிப்படையாக சவால் விடுக்கிறேன், பாஜகவால் இங்கே தமிழர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆபத்தா? அல்லது திமுகவால் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஆபத்தா என்பதை என்னுடன் ஜவாஹிருல்லா விவாதிக்க தயாரா? எவ்வளவு காலம்தான் மக்களை நீங்கள் எல்லாரும் ஏமாத்துவீங்க? தனித்தனி மேடை எதுக்கு? வாங்க ஒன்னா பேசுவோம்.. மக்கள் பார்க்கட்டும்..

 எலும்புத்துண்டு

எலும்புத்துண்டு

பிரதமர் எத்தனை திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்பதை நான் புள்ளிவிவரத்துடன் சொல்றேன்.. முதல்வர் என்ன செய்தார் என்பதை நீங்க சொல்லுங்க.. தமிழகத்தில் வாக்கு வங்கி அரசியலை நடத்தி கொண்டு, இஸ்லாமிய இளைஞர்களிடம் பயங்கரவாதத்தை நடத்திவிட்டு, கொத்து கொத்தாக ஜெயிலுக்கு போயிட்டு இருக்காங்க.. தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவீங்கன்னு நீங்களே சொல்றீங்க.. அப்படி என்றால், இஸ்லாமிய இளைஞர்களை தூண்டிவிடுவது யார்? ஜவாஹிருல்லா தூண்டிவிடலையா? எஸ்டிபிஐ தலைவர் தூண்டிவிடலையா?

 தேவதூதர்கள்

தேவதூதர்கள்

நீங்க செய்ற காரியத்தால், தமிழகமே தலைகுனிகிறது.. உங்க 2 எம்எல்ஏ எலும்புத்துண்டுக்காக ஏன் இந்த சமூகத்தை பலியாக்கிறீங்க? என்ஐஏவால் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் எல்லாம் புனிதர்களா? தேவதூதர்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் இப்ராஹிம். இந்நிலையில், மீண்டும் திமுக அரசு மீது பாய்ந்துள்ளார்.. கோவை மாவட்டம் காரமடை அருகே புங்கம்பாளையத்தில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளரான வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு பேசும்போது பேசிய பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் சொன்னதாவது:

 ஹிட்லர்

ஹிட்லர்

தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை படிப்படியாக பாஜக பெற்று வருகிறது. தொடர்ந்து மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த திட்டங்கள் குறித்து நாங்கள் மக்களை நேரில் சந்தித்து விரிவாக எடுத்து சொல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்காக, பாஜகவினரை திமுகவினர் முடக்க பார்க்கின்றனர். மேலும் தமிழக முதல்வர் எங்களிடம் ஹிட்லர் போன்று நடந்து கொள்கிறார்.

 தக்க பாடம்

தக்க பாடம்

தமிழகத்தில் ஜனநாயக முறையில் எதிர்கட்சி என்ற அடிப்படையில் பாஜக சார்பில் தொடர்ந்து மக்களை சந்திப்போம் போராடுவோம்... அதற்காக எத்தனை முறை கைது செய்தாலும், அதனை துணிவுடன் எதிர்கொள்வோம். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை முன்கூட்டியே கைது செய்யாமல் உளவுத்துறை தூங்கிவிட்டது... அதிமுக ஆட்சி போல் இப்போதைய அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. இதற்கெல்லாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+