"பச்சை கலர்" பால் விலையும் உயர போகுது என கொளுத்தி வீசிய டிடிவி தினகரன்
பச்சை கலர் பால் பாக்கெட் விலையும் உயர போவதாக தினகரன் கூறுகிறார்
சென்னை: ஆரஞ்சை தொடர்ந்து, ப்ளூ, பச்சை நிற என மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகீர் தகவலை கூறியிருக்கிறார்.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அரசு உயர்த்தியுள்ளது... கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 24 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக விற்பனையாகிறது.
அதே போல ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பானது பல்வேறு தரப்பில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

எருமைப்பால்
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் எதற்காக பால்விலை உயர்வு என்ற விளக்கத்தையும் கூறினார்.. "ஆவினில் பால் கொள்முதல் விலையை, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக முதல்வர் உயர்த்தியிருக்கிறார். இந்த பால் விலையேற்றம் சாதாரண மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஷாக்கிங்
முழுக்க முழுக்க வாணிப நோக்கத்தோடு விற்பனை செய்யப்படுகிற ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கான விலை மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது.. இதற்குமுன் ரூ.48-க்கு விற்பனை செய்து வந்தோம், இதே நிறைகொழுப்பு பாலை மற்ற மாநிலங்களிலும், மற்ற தனியார் நிறுவனங்களும் ஏறக்குறைய ரூ.70-வரை விற்பனை செய்கின்றனர். பாஜக ஆளுகின்ற குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் விலையைவிட ரூ.10 குறைவாக, அதாவது ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஆரஞ்ச் கலர்
தமிழகத்தில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். இந்த பாலை சந்தா அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அதே விலைதான், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர்களுக்கு இந்த பால் ரூ.48-க்கும், வணிக பயன்பாட்டிற்காக வாங்குபவர்களுக்கு மட்டும் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம்.. மத்திய அரசு வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, பாலுக்கும் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இதனால் விற்பனை விலை உயர்ந்துள்ளது.. இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில்தான் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

வாசன் + அட்டாக்
எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.. அந்தவகையில், ஜிகே வாசன், அன்புமணி ராமதாஸை தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில், "ஆவின் ஆரஞ்சு பால் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

பச்சை கலர்
மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆவின் ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தினகரன் பதிவிட்டுள்ளார்.. இந்த விலை ஏற்றம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் திரண்டு எதிர்ப்பு கூறி வருவது அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications