என்னாது.. மீண்டும் லாக்டவுனா.. அறிவிப்பு வெளியாகிறதா.. புதுவகை கொரோனாவால் தீயாய் பரவும் தகவல்
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி முடிந்ததுமே, லாக்டவுனுக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்ற குறைந்து வந்துள்ள போதிலும், முழுமையாக நீங்கவில்லை.. அதனால் தளர்வுகளும் முற்றிலுமாக அறிவிக்கப்படவில்லை.
காரணம், கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டு இறுதி வரை கூட அது நீடிக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

மீண்டும் லாக்டவுன்?
அதனால்தான், இன்று நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் தள்ளி வைக்கப்படலாம் என்றே கணிக்கப்பட்டது. பிறகு திடுதிப்பென தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.. எனினும், தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.. பிரச்சாரங்களும் பெரிதாக இல்லை என்பதுடன், கூடுதல் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது ஓரளவு ஆதரவான விஷயம்தான்..

விதிமுறைகள்
காரணம், தமிழகத்தில் கடந்த மாதமே ஊரடங்கு போடப்பட்டிருக்க வேண்டியது என்கிறார்கள்.,.. உள்ளாட்சி தேர்தலுக்காகவே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், இந்த தேர்தல் முடிந்து மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் முணுமுணுப்புகளும் எழுந்தபடியே உள்ளதால், மறுபடியும் நமக்கு லாக்டவுன் போடப்பட்டுவிடுமா என்ற சந்தேகம் தீவிரமாக உருவெடுத்துள்ளது..

ஊரடங்கு
இப்படி ஒரு தகவல், வாட்ஸ்அப்களில் இன்றைய தினம் தீவிரமாக பரவி கொண்டிருப்பதுதான்.. ஆனால், தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படும் என்பது தவறான தகவல் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது... ஒருவேளை தேர்தல் சமயத்தில் கூட்டம் கூட்டியது, மாஸ்க் போடாதது என விதிமுறைகள் மீறப்பட்டு, அதனால் தொற்று எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளதே தவிர, லாக்டவுன் போடும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்கிறது இன்னொரு தரப்பு.

கடிதம்
இன்னொன்றையும் சொல்கிறார்.. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அதில், "கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம். புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதோ பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
Recommended Video


வாய்ப்பு
எனவே மத்திய அரசின் இப்போதைய முடிவுப்படி, தளர்வுகளுக்குதான் நமக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இதற்கு நடுவில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. BA.2 கொரோனா எனப்படும் ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது.. ஒருவேளை, கொரோனா தொடர்ந்து உருமாறி வருவதால், அதை வைத்தே நமக்கு லாக்டவுன் முடிவாகும் என்று தெரிகிறது..!
-
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications