Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தொக்கா" சிக்கிட்டாரே.. அதெப்படி "3 பேருமே ஒன்றாக.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி.. இதுல இவ்ளோவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் - டிடிவி தினகரனை சந்தித்து முடித்துள்ள நிலையில், அடுத்தடுத்த பரபரப்புகள் அதிமுகவில் ஏற்பட்டுள்ளன.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தக்கட்ட யோசனையிலும் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் இணைந்துள்ளார்.. ஆனால், எந்த விதத்தில் என்றுதான் தெரியவில்லை.. அமமுகவில் ஓபிஎஸ் சேரப்போகிறாரா? அல்லது தனிக்கட்சி துவங்க போகிறாரா? அதற்கான ஆதரவை தினகரனிடம் கோரியுள்ளாரா? என்பதெல்லாம் இதுவரை தெரியவில்லை.

ஆனால், ஓபிஎஸ்ஸின் இணைப்பு இருவிதமான கருத்துக்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்தியபோதே, ஒரு முக்கிய விஷயம் கவனிக்கப்பட்டது.

Does VK Sasikala support Edappadi Palaniswami and What are the plans of OPS, TTV Dinakaran

திருச்சி மாநாடு: அந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர், தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்தே வந்திருந்தார்கள்.. அத்துடன், ஒருசமூகத்துக்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து கொண்டிருப்பதாக, அவர்களில் பலர் பொருமினார்களாம்..

அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவை முழுமையாக பெற வேண்டுமானால், சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் திட்டமாக இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் முதல் அடியைதான், தினகரன் கூடாரத்துக்குள் ஓபிஎஸ் வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

சமூக வாக்குகள்: தற்போது இருவரும் இணைந்துள்ள நிலையில், தென்மண்டலத்தில் சமூக வாக்குகள் இவர்களுக்கு மேலும் பெருக போவதாகவும், இதனால், திமுக மற்றும் எடப்பாடி தரப்புக்கு செக் வைக்க தங்களால் முடியும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமியால் இதுவரை, முக்குலத்தோர் வாக்குகளை தன்பக்கம் திருப்ப முடியாத நிலையில், தினகரன் + ஓபிஎஸ் + சசிகலாவின் இணைப்பானது, எடப்பாடிக்கே தோல்வி என்றும், இதன்மூலம் தங்களின் வலிமையை பாஜக மேலிடம் நன்கு அறிய வாய்ப்பாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.

எம்ஜிஆர்: ஆனால், இன்னொரு தரப்போ, ஓபிஎஸ் தேவையில்லாமல் இந்த வேலையை செய்துவிட்டார்.. எதற்காக தினகரனை சந்திக்க வேண்டும்? என்று கேள்விகளை அடுக்குகிறார்கள்.. இதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.. "அதிமுக என்ற பிரம்மாண்ட கட்சி அனைவருக்குமே பொதுவானது.. எம்ஜிஆரும்சரி, ஜெயலலிதாவும், சாதி சார்ந்த தலைவர்களாக தங்களை என்றுமே காட்டிக் கொண்டது கிடையாது.. அதனால்தான், அவர்களால் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்களாக அதிமுகவை கட்டி ஆள முடிந்தது.

அவ்வளவு ஏன்? எம்ஜிஆர் கட்சி தொடங்கி மாயத்தேவர் வெற்றி பெற்ற காலம் முதல் அந்த சமூகத்தில் அதிமுகவுக்கு கணிசமான செல்வாக்குகள் இருந்து கொண்டுதான் உள்ளது..

Does VK Sasikala support Edappadi Palaniswami and What are the plans of OPS, TTV Dinakaran

இரட்டை இலை: இதற்கெல்லாம் காரணம், கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் மீது தீவிர பற்று கொண்டவர்கள் தொண்டர்கள்.. அதனால், அதிமுக வெற்றி பெற நினைப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் என்று மட்டுமே பார்த்து ஓட்டுப்போட மாட்டார்கள்.. அதனால், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை ஆதரிக்கவும் யோசிக்கவே செய்வார்கள். இது நிச்சயம் எடப்பாடி பழனிசாமிக்குதான் பிளஸ் பாயிண்ட்டாக அமைய போகிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலிலும் டிடிவி தினகரன் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் அதிருப்தி வாக்குகள் மட்டுமே கிடையாது.. அதில் பிரதானமாக இருப்பது அதிமுகவின் ஓட்டுக்களும்தான்.. கடந்த எம்பி தேர்தலிலும்சரி, சட்டமன்ற தேர்தலிலும்சரி, அமமுக தனியாக நின்று வெற்றி பெற முடியவில்லை.. அதேசமயம், சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தடுக்கவே செய்தது.. அப்படி இருக்கும்போது, அதிமுகவின் தொண்டர்கள், யாருக்கு ஓட்டு போடுவார்கள்? தினகரனுக்கா? எடப்பாடிக்கா? ஓபிஎஸ்ஸுக்கா?

கிளைமாக்ஸ்: இயல்பாகவே, அதிமுக என்று வரும்போது, எடப்பாடி பழனிசாமிக்குதான் ஓட்டுக்களை தொண்டர்கள் போடுவார்கள்.. ஓபிஎஸ், தினகரன் பக்கம் போனாலும்சரி, நிச்சயம் அதிமுகவை தொண்டர்கள் பலவீனம் அடைய விடமாட்டார்கள். அந்தவகையில், ஓபிஎஸ் + தினகரனின் இணைப்பானது, அவர்கள் இருவரையும்விட எடப்பாடி பழனிசாமிக்கே சாதமாக இருக்கும் என்கிறார்கள்..

இப்படி இரு தரப்பு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுவிட்டார்கள்.. அதன்படி, சசிகலா + ஓபிஎஸ் + தினகரன் ஆகிய 3 பேரின் போட்டோக்களையும் ஒன்றாக வைத்து, போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.. "நாம் ஒன்றாக வேண்டும் - கழகம் வென்றாக வேண்டும்" என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர்கள் பளிச்சிட்டு கொண்டிருக்கின்றன.. திருப்பரங்குன்றம், திருமங்கலம் உட்பட இந்த போஸ்டர்கள்தான் பார்ப்போரின் கவனத்தையும் திருப்பி வருகிறது.

Does VK Sasikala support Edappadi Palaniswami and What are the plans of OPS, TTV Dinakaran

அதென்ன போஸ்டர்: இந்த போஸ்டரில் சசிகலா படம் இடம்பெற்றுள்ளது அதிமுகவினருக்கே அதிர்ச்சியை தந்து வருகிறதாம்.. காரணம், சசிகலாவை சந்திக்க போவதாக ஓபிஎஸ் அடிக்கடி சொல்லி வருகிறார்.. தினகரனை சந்தித்துவிட்டு வந்தபிறகுகூட, அடுத்து சசிகலாவை சந்திக்க போவதாக சொல்லி உள்ளார்.. ஆனால், இன்னும் சந்திக்கவில்லை.. அதற்குள் எப்படி சசிகலா போட்டோவை போஸ்டரில் அச்சடித்து ஒட்டியுள்ளார்கள்? என்ற ஆச்சரியம் கிளம்பி உள்ளது.

இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. ஓபிஎஸ் தனக்கு சாதகமாக இருக்கிறார் என்பது சசிகலாவுக்கு 2 வருடமாகவே தெரியும்.. ஆனாலும் சசிகலா நினைத்திருந்தால் என்றோ ஓபிஎஸ்ஸுடனான சந்திப்பை வெளிப்படையாகவே நடத்தியிருக்க முடியும்.. தேவர் ஜெயந்தி உட்பட எத்தனையோ நிகழ்வுகள் அதற்கான சாதகமாகவும் அமைந்தன.. எனினும் சசிகலா ஓபிஎஸ்ஸை சந்திக்கவில்லை..

சாதி முத்திரை: அதேபோல, திருச்சி மாநாட்டுக்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. ஆனால், சசிகலா செல்லவில்லை.. இதற்கெல்லாம் காரணம், சமூக முத்திரை குத்தப்பட்டு விடக்கூடாதே என்பதற்காகத்தானாம். அப்படி சாதி முத்திரை பதிந்துவிட்டால், அதிமுக என்ற பொதுவான கட்சிக்கு தன்னால் உரிமை கோரி போராட முடியாது என்பதே சசிகலாவின் எண்ணமாக உள்ளதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இருவரையுமே பொதுவான நபர்களாகவே சசிகலா இப்போதுவரை பாவித்து வருவதாகவும் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் தரப்பில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மிகுந்த சலசலப்பையும், பரபரப்பையும் கிளப்பி கொண்டிருக்கிறது. அடுத்து என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+