வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு.. இரவோடு இரவாக அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்
சென்னை: வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 928.50 ல் இருந்து ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (ஜுன் 07) முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேற்காசிய போரால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டருக்கான நெருக்கடி இன்னும் முழுமையாக நீங்காத நிலையே காணப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி வருகின்றன.

வீட்டு சமையல் சிலிண்டர் விலை உயர்வு
அந்த வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 928.50 ல் இருந்து ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ரூ.29 உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வரும் நிலையில், அதனை ஈடுகட்டும் விதமாக விலை உயர்வு அமல்படுத்தப்பட்டு இருப்பதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.703 இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு மூலம் இதனை ஓரளவு சமாளிக்க முடியும் என கருதப்படுகிறது. எனினும் இந்த விலை உயர்வு சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.50 அளவுக்கு இதுவரை உயரத்தப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களுக்கான வாடகை செலவு அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ள சூழலில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications