இன்னொரு டைம் பேசுனீங்கன்னா.. அவ்வளவுதான்! கணவர் பற்றி சொன்னதும்! குஷ்புவிற்கு வந்ததே கோபம்.. விளாசல்

இதை படித்துவிட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற குஷ்பு சரமாரியாக திட்டி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கணவர் சுந்தர் சி குறித்து இணையத்தில் நெட்டிசன் ஒருவர் கமெண்ட் அடித்ததும் பாஜக நிர்வாகி குஷ்பு கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

அரசியலில் தொடக்க காலத்தில் தீவிர பெரியாரிய கொள்கைகளை கொண்ட குஷ்பு திமுகவில் தீவிர உறுப்பினராக இருந்தார். அங்கே இருந்து அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். செய்தி தொடர்பாளராக இருந்தவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அங்கே பெரிதாக அரசியல் ரீதியாக இவர் முன்னேற்றாத நிலையில் பாஜகவில் இணைந்தார்.

தற்போது இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த நிலையில் காங்கிரசில் இருந்த போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஷ்பு பாஜகவை கடுமையாக தாக்கி இருந்தார். அதில், எந்த மதமும் முக்கியம் இல்லை. இந்த நாடு என்பது ஒரு மதம் பற்றியது அல்ல. இந்த நாடு என்பது இந்துமதம் பற்றியது கிடையாது. இந்த நாடு என்பது மக்கள் பற்றியது. இந்த நாட்டில் ஒரு இந்து முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள முடியும். ஒரு முஸ்லீம் கிறிஸ்துவரை திருமணம் செய்து கொள்ள முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். இது ஒரு மதசார்பற்ற நாடு என்பதை மறக்க வேண்டாம். இந்தியா அப்படித்தான் இருந்து வந்துள்ளது.

குஷ்பு பேச்சு

குஷ்பு பேச்சு

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு அதை மாற்ற பார்க்கிறது. ஒரு நாடு.. ஒரே கொள்கை என்று கொண்டு வர பார்க்கிறார்கள். அவர்கள் ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த பாஜக அரசு இப்படித்தான் நினைக்கிறது. பாஜகவில் இருந்து வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இப்படி நடக்கவில்லை. ஆனால் மோடி ஆட்சியில் இப்படி நடக்கிறது. வெறுப்பு அதிகரித்துவிட்டது. மத ரீதியான மோதல்கள் அதிகரித்துவிட்டன. அப்போதெல்லாம் இந்த மோதல்கள் இல்லை, என்று பேசி இருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

காங்கிரசில் இருந்த போது குஷ்பு பேசியதை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், குஷ்பு இப்படி பேசிய போது நான் பார்வையாளராக இருந்தேன்.அப்போது அவர் பேசியதை நான் மிகவும் விரும்பினேன். இப்போது அவரின் கணவர் செய்த ஒரு தவறான பிஸ்னஸ் டீலிற்காக அவர் சிறையை எதிர்நோக்கி இருக்கிறார். அவர் சிறைக்கு செல்லாமல் இருப்பதை பாஜக தடுக்கிறது. இதனால் அவர் பாஜகவுடன் டீலிங் செய்துள்ளார். பாஜக இவரை கட்டாயப்படுத்தி கட்சியில் சேர்த்து உள்ளது. அதற்கு பலனாக அவரின் கணவர் சிறைக்கு செல்லாமல் இருக்கிறார், என்று குறிப்பிட்டு இருந்தார்.

கோபம்

கோபம்

இதை படித்துவிட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற குஷ்பு, என்னுடன் பேசும் போது கண்ணியமாக பேசவும். எந்த இடத்திலும் கண்ணியத்தின் எல்லையை எப்பொழுதும் கடக்காதீர்கள். அது தவறு. என் குடும்பத்தை யாராவது தொட்டால் அவ்வளவுதான்.. நான் காயப்பட்ட புலியாக மாறிவிடுவேன். தங்கள் சொந்த எண்ணம் இல்லாத கட்சி அல்லது தலைவரின் பக்கம் நான் எப்போதும் இருக்கமாட்டேன். என் கணவரைப் பற்றி இன்னும் ஒரு முறை பேச உங்களுக்கு தைரியம் இருந்தால் பேசுங்கள்.. அவ்வளவுதான். உங்களுக்கும் உங்களைப் போன்ற மற்ற தோல்வியாளர்களுக்கும் நான் கடுமையாக எச்சரிக்கை விடுகிறேன், என்று குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன் யாரும் காங்கிரஸ், திமுக கட்சிக்கு வேறு கட்சியில் இருந்து வந்ததே இல்லையா? நான் மட்டும்தான் வந்து இருக்கிறேனா?நான் ஒரு பெண் என்பதால் இப்படி பேசுகிறார்களா? என்று குஷ்பு கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+