"ஹூம்..! தள்ளி படுங்க..!" சந்திர கிரகண நாளில் உடலுறவு கூடவே கூடாதாம்.. என்னவெல்லாம் கூடாது! என்ன காரணம்
சென்னை: இன்று சந்திர கிரகணம் வர உள்ள நிலையில், காலம் காலமாக நாம் கடைப்பிடிக்கும் நம்பிக்கை சிலவற்றைக் குறித்து பார்க்கலாம்.
இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் சமயத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் மாறும் என்பதால் மக்கள் பலரும் இதை ஆர்வமாகப் பார்ப்பார்கள்.
இந்தியாவில் கடைசியாகக் கடந்த நவம்பர் 19, 2021இல் சந்திர கிரகணம் தெரிந்தது. அதன் பின்னர் இப்போது தான் நாட்டில் சந்திர கிரகணம் தெரிய உள்ளது.

சந்திர கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது தான் இந்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் பூமி சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நிலவை பிளட் மூன் எதாவது ரத்த நிலா என அழைப்பார்கள். ஏனென்றால் நிலா இந்த சமயத்தில் ரத்தச் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

நம்பிக்கைகள்
அறிவியல் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் சூரிய கிரகணம் என்றால் என்ன சந்திர கிரகணம் என்றால் என்ன என்பது குறித்ததெல்லாம் நமக்குத் தெரிகிறது. ஆனால், அதற்கு முன்னதாக கிரகணங்கள் குறித்து நம்ம ஊரில் பல மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகள் நிலவி வந்தன. அவை காலப்போக்கில் குறைந்துவிட்டது என்றாலும் கூட இன்னுமே சில மூட நம்பிக்கைகள் அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்து மதம்
இந்த நம்பிக்கைகளுக்கு அறிவியல் பூர்வமாகச் சான்று எதுவும் இல்லை என்றாலும் கூட இவை நமது நன்மைக்காகவே பின்பற்றப்பட்டதாக முன்னோர்கள் கூறி வந்துள்ளனர். ராகு சந்திரனை விழுங்குவதே சந்திர கிரகணம் என்று இந்து புராணங்கள் கூறுகின்றன. சந்திர கிரகணத்தின் போது சில குறிப்பிட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது என்றும் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்றும் இந்து மத புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

உடலுறவு கூடாது
இது குறித்து பிரபல ஜோதிடர் சோனியா பாக்யா முன்பு அளித்த பேட்டியில், "இந்து சாஸ்திரங்களில், இந்த நிகழ்வு மிகவும் மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது,.. இந்த கிரகணங்கள் கெட்ட சகுனத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் நாம் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக உடலுறவைத் தவிர்க்க வேண்டும். அப்படி உடலுறவு கொள்பவர்கள் வரும் காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படும்" என் கூறியிருந்தார்.

சாப்பிடக் கூடாது
அதேபோல நமது பாவங்களைப் போக்கிக் கொள்ள ராகுவின் தீமைகளைப் போக்க, மக்கள் அதிலும் குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் கிரகணம் முடிந்த உடன் உடனடியாக குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். அதேபோல இந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்றும் சிலர் கூறுவார்கள். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் புற ஊதா கதிர்களால் உணவு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

அறிவியல் சான்று
ஆனால், உண்மையில் சந்திர கிரகணத்தின் போது புற ஊதா கதிர்கள் எல்லாம் வராது என்பதையே அறிவியல் கூறுகிறது. எனவே சாப்பிடுவதற்கு எல்லாம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. அதேபோல மற்ற நம்பிக்கைகளுக்கும் கூட எந்தவொரு அறிவியல் சான்றும் இல்லை. அதேநேரம் காலம்காலமாக கடைப்பிடிக்கப்படும் இதை ஒரு நாள் கடைப்பிடிப்பதில் தவறும் இல்லை.. இன்று நீங்கள் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதை நீங்கள் மிஸ் செய்துவிட்டால்.. அடுத்து அக்டோபர் 28, 2023 வரை காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications