"பாஜக பற்றி வாயை திறக்க கூடாது".. அதிமுக மா.செக்களுக்கு பறந்த உத்தரவு.. ஓபிஎஸ் - இபிஎஸ் சொன்னது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை; பாஜக குறித்து பொது வெளியில் பேச கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் தொடங்கி சசிகலா விவாகரம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டு பேருமே மிகவும் கண்டிப்போடு இந்த கூட்டத்தில் பேசி உள்ளனர். முக்கியமாக கூட்டணி கட்சியான பாஜக குறித்தும் இந்த 2 மணி நேர ஆலோசனை கூட்டத்தில் பேசி உள்ளனர்.

 தேர்தல் தோல்வி

தேர்தல் தோல்வி

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட செயலாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட செயலார்களிடமும் தனி தனியாக தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சறுக்கியது எங்கே, நிர்வாகிகள் யாரெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, தோல்வி ஏற்பட்டது எதனால் என்று காரணம் கேட்டு உள்ளனர்.

தடுக்க வேண்டும்

தடுக்க வேண்டும்

இதே தவறு உள்ளாட்சி தேர்தலில் நடக்க கூடாது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து எல்லோரும் நன்றாக தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். பூசல் இன்றி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்நிய சக்திகள் கட்சிக்குள் கலகம் ஏற்படுத்துவதை அனுமதிக்க கூடாது. மாவட்ட செயலாளர்கள் ஒற்றுமையாக இருப்பதே முக்கியம்.

 பாஜக வேண்டாம்

பாஜக வேண்டாம்

கூட்டணி கட்சிகள் குறித்து பொது வெளியில் யாரும் பேச கூடாது. கூட்டணி கட்சிகள் குறித்தும், முக்கியமாக பாஜக குறித்தும் யாரும் பொது வெளியில் விமர்சனம் வைக்க கூடாது. கூட்டணி கட்சிகள் மீது கசப்பு இருந்தால் தாய் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். மாறாக பொது வெளியில் இதை பற்றி பேச கூடாது என்று உத்தரவு பறந்துள்ளது.

சிவி சண்முகம்

சிவி சண்முகம்

முன்னதாக அதிமுகவின் தோல்விக்கு பாஜகவின் கூட்டணிதான் காரணம் என்று சிவி சண்முகம் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த பாஜகவின் நாராயண் திரிப்பாதி, அதிமுகதான் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்று கூறினார். இதையடுத்து அதிமுக சார்பாக இதற்கு உடனே விளக்கம் அளிக்கப்பட்டது. அதிமுக - பாஜக இடையே மோதல் இல்லை.

மோதல்

மோதல்

அதிமுக பாஜக கூட்டணி எப்போதும் போல தொடரும். தேர்தலுக்கு பின்பும் கூட்டணி தொடரும் என்று அதிமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் பெரிய சர்ச்சையான நிலையில் தற்போது பாஜக குறித்து பொது வெளியில் பேச கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு வாய் பூட்டு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+