ஜஸ்ட் இது டிரைலர்.. கருணாநிதியை நாங்க ஒருவாரம் தூங்க விடல.. புரியுதா முதல்வரே.. அர்ஜுன் சம்பத் நறுக்
அர்ஜுன் சம்பத் மீண்டும் திமுக அரசை சீண்டி கடுமையாக விமர்சித்துள்ளார்
சென்னை: "முதல்வரே நாங்க உங்க அப்பா காலத்திலேயே அரசியல் செய்தவர்கள்..அவர் முதல்வராக இருக்கும் போதே ஸ்ரீரங்கத்தில் ஈவேரா சிலையை தூக்கி கருணாநிதியை ஒருவாரம் தூங்க விடாமல் செய்தவர்கள்.. வரலாற்றை திமுக சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்" என்று அர்ஜூன்சம்பத் பேசியுள்ளது திமுகவினரை செம கடுப்பாக்கி வருகிறது.
இந்து மக்கள் கட்சியின் சுதந்திர இந்தியா 75 ம் ஆண்டு அமுதவிழா யாத்திரை நிறைவு விழாவை முன்னிட்டு தாராபுரம் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பாரத மாதாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் பேசியபோது, வழக்கம்போல் திமுகவை சரமாரியாக விமர்சித்தார்..

பிளேடுகள்
கருணாநிதிக்கு பேனாவில் சிலை வைக்கும் விவகாரத்தில், கடுமையான எதிர்ப்பை தெரிவித்தவர் அர்ஜுன் சம்பத்.. அப்படி கடலுக்குள் சிலையை வைத்தால், போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்தவர். இந்நிலையில், மீண்டும் திமுகவை சீண்டி உள்ளது இந்து மக்கள் கட்சி.. அவர்கள் பேசியதன் தொகுப்புதான் இவை: இந்து மக்கள் கட்சியின் வந்தே மாதர யாத்திரை நிறைவு விழாவிற்காக திருப்பூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் பிளேடால் கிழிக்கப்பட்டுள்ளது.. பிரிவினைவாதிகளுக்கு இந்து மக்கள் கட்சியின் வளர்ச்சி பொறுக்கமுடியவில்லை என்பதையே இது காட்டுகிறது..

மடம் + சாமியார்
இது பழைய இந்து மக்கள் கட்சி அல்ல.. எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு யாத்திரையை இந்து மக்கள் கட்சி செய்துள்ளது.. தேசபக்தி யாத்திரையை தமிழகத்தில் செய்த ஒரே கட்சி இந்து மக்கள் கட்சி.. சாமியார்கள் அரசியல் மேடையில் பேசலாமா என கேட்கிறார்கள்.. நாங்கள் பேச வேண்டிய நேரம் இது.. தமிழ்நாட்டில் இன்றைக்கு பல ஊர்களில் ஈவேரா சிலையை வைத்து திட்டமிட்டு சுதந்திர போராட்ட வீரர்களை மறைத்துவிட்டனர் திராவிட கும்பல்கள்.

தூங்காத கருணாநிதி
இந்து மக்கள் கட்சி இந்த யாத்திரையை துவங்கிய அன்றே திமுக அரசு தடை விதித்தது.. கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தது.. ஏன் அவ்வளவு பயம்? முதல்வரே, நாங்க உங்கள் அப்பா காலத்திலேயே அரசியல் செய்தவர்கள்.. அவர் முதல்வராக இருக்கும் போதே ஸ்ரீரங்கத்தில் ஈ.வே.ரா சிலையை தூக்கி கருணாநிதியை ஒருவாரம் தூங்க விடாமல் செய்தவர்கள்.. வரலாற்றை திமுக சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்..

கருணாநிதி
இந்து மக்கள் கட்சியின் இந்திய சுதந்திர 75ம் ஆண்டு வந்தேமாதர யாத்திரை துவங்கிய அன்றே திமுக அரசு கூட்டங்களுக்கு அனுமதி மறுத்தது.. வாகனத்தில் உள்ள வாசகங்களை மறைக்க கோரியது.. திமுக பயந்த அன்றே இந்த யாத்திரை வெற்றி பெற்றுவிட்டது.. ஒரு மாதம் முழுக்க நடந்தது எங்களின் வெற்றி பயணம்தான். தமிழகம் முழுவதும் உயிரை கொடுத்து சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளை மறைத்து, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஈ.வே.ரா, கருணாநிதி சிலைகளை வைத்து, வரலாற்றை திரிக்க திராவிடர் கழக பின்புல திமுக முயன்றதை இந்து மக்கள் கட்சி மக்கள் மத்தியில் முகத்திரையை கிழித்தது போன்று அம்பலப்படுத்தியுள்ளது!

சாராயம்
தமிழகத்தில் தேசிய சிந்தனையை மழுங்கடித்து, சாராயத்தை ஊற்றிக்கொடுத்து தன் குடும்ப வாரிசுகளுக்கு ஜால்ரா அடிக்கும் அற்ப விழுதுகளை திமுக உருவாக்கி வைத்திருக்கிறது.. இதனை இந்த யாத்திரை மூலம் மக்களிடத்தில் கொண்டு சென்றுள்ளோம், விரைவில் விதை வளரும் பொழுது தெரியும்.. இந்து மத ஒற்றுமை ஓங்க, தேசிய உணர்வு தழைத்தோங்க, பிரிவினைவாதிகளை புறந்தள்ளி, தேசியவாதிகள் முன்னேற, ஊழல், குடும்ப அராஜகம் ஒழிந்து அனைத்து மக்களுக்கு அனைத்தும் கிடைக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.
Recommended Video

குட்டிக்கரணம்
இந்து என்றால் இளக்காரம்.. மற்ற மதங்கள் என்றால் பரிவட்டம்.. திமுகவின் இந்த குள்ளநரித்தனத்தை மக்கள் புரிந்துக் கொள்ள துவங்கிவிட்டனர்.. அதன் விளைவே 'திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல' என்ற முதல்வர் ஸ்டாலினின் குட்டிகரணம்!.. இதுவே இந்து மக்களாகிய எங்களின் வெற்றி.. இனி திமுக காவடியும் தூக்கும்.. சுருங்க சொன்னால் இந்த யாத்திரை வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரே இனிதான்" என்றார் அர்ஜுன் சம்பத்.












Click it and Unblock the Notifications