“அதுவரை தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” - சட்டசபையை அதிரவிட்ட தங்கம் தென்னரசு
சென்னை: “மகளிர் உரிமைத்தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்துக் குரல் கொடுக்கும். அந்தக் கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் உரையாற்றியுள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 17 ஆம் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, நிதி அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் யாரும் அவைக்கு வரவில்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றிப் பேசுகையில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி பதவியேற்ற உடன் முறையாக பயிற்சி பெற்ற 23 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத் திட்டங்கள், மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக உள்ளது திராவிட மாடல் ஆட்சி. சமூக நீதிக்காக நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடர்ந்து போராடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சமூகநீதிக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து போராடும். மகளிர் உரிமைத்தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்துக் குரல் கொடுக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” என உரையாற்றி உள்ளார்.
தங்கம் தென்னரசு மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து சமூகநீதிப் பயணத்தை நிகழ்த்தி வருபவர் நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். சமூகநீதிக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து போராடும். தமிழ்நாட்டில் கலகம் விளைவிக்க முயற்சி செய்த சக்திகள் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்கி வருகிறது.
நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுக் கருத்துகள் கொண்ட எதிர்க்கட்சிகள் இருக்கிறது. ஆனால், எதிரிகளே கிடையாது. கூட்டாட்சி தத்துவத்தை குலைத்திடும் எந்த முயற்சிகள் தலைநகரில் இருந்து உருவானாலும், அதை எதிர்க்கும் முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் குடியிருக்கும் பகுதிகள் 'அகதிகள்' என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த சொல்லை மாற்றி, 'இலங்கைத் தமிழர்கள்' என்று தாய்த்தமிழ் உறவை உறுதிசெய்து, அங்கீகாரம் வழங்கியிருக்கிறார் நம் முதலமைச்சர்.
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, உலகத் தமிழர்களை வழிநடத்திட முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை காலத்தின் கட்டாயமாக உள்ளது. நல்ல திட்டங்களை செயல்படுத்தினால் போதும். மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பற்றி நாம் அனைவரும் ஒன்றாக வென்றிடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?











Click it and Unblock the Notifications