Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்கொடை + கல்வி கடனுக்கான வட்டி.. வருமான வரித்துறை வைத்த செக்.. வெளியிட்ட புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ள வருமான வரித்துறை, அதற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருமான வரி பிடித்தத்தை திரும்பக்கோரும் (ரீபண்ட்) விண்ணப்பங்களில் சிலர் 80 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியதாகவும், கல்வி கடனுக்கான வட்டி செலுத்தியதாகவும் கூறி வரி விலக்கு கோரி உள்ளனர்.

Donation and interest on education loan New notification issued by Income Tax Department

இத்தகைய விண்ணப்பதாரர்களிடம், வரி சலுகைக்கான உண்மைத்தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை கோரியபோது அவர்களால் வழங்க முடியவில்லை. வருமான வரி சட்டப்பிரிவு 139 (8A)-ன் படி வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்த போதும் கூடுதல் வரியை செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவத்தை தாக்கல் செய்யலாம்.

இந்த பிரிவின் கீழ் வரி செலுத்துவோர், அந்த வருடத்துக்கு தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் விடுபட்ட வருமானம் அல்லது பிழைகளை சரி செய்ய முடியும். மதிப்பீட்டு ஆண்டு 2021-22-க்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வருகிற 31-ந் தேதி ஆகும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்கொடை: சமுதாயத்தில் பலர் தொண்டு நிறுனனங்களுக்கு நன்கொடை அளிப்பதையும், சமூகத்திற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று நினைத்து சேவையும் செய்வார்கள்..அப்படிப்பட்டவர்களின் சேவையை கருத்தில் கொண்டு அரசு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொண்டு சேவைகளுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு வரி விலக்குகளை வழங்குகிறது.

இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80G பிரிவு, முதலமைச்சசர், பிரதமர், தேசிய பேரிடர் நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நிதிகள் மற்றும் தொண்டு காரியங்களுக்கு உதவியவர்களை வரி விலக்கு அளிக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் பிரிவு 80C தவிர பிரிவு 80G இல் வரி விலக்குகளைப் பெற்று பலர் அதிகபட்ச வரிகளைச் சேமித்தார்கள். ஆனால் அப்படி விண்ணப்பிக்கும் போது காசோலை அல்லது வரைவோலை அல்லது 2000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் அளித்தால் அதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

அதாவது வருமான வரி பிடித்தத்தை திரும்பக்கோரும் (ரீபண்ட்) விண்ணப்பங்களில் சிலர் அதிகமான வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியதாக காரணத்தை கூறுவார்கள்.. அப்படி காரணத்தை கூறினால், அவர்கள் ஆதாரத்தை கண்டிப்பாக சமர்பித்தாக வேண்டும். அப்படி சமர்பிக்க முடியவில்லை என்றால் வருமான வரி சட்டப்பிரிவு 139 (8A)-ன் படி வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரி படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த முறையை தான் வருமான வரித்துறை கையில் எடுத்துள்ளது.

கல்வி கடன்: இந்திய வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80E இன் படி, கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு பெற முடியும் . அதாவது வங்கியில் நீங்கள் அல்லது உங்கள் மகள் அல்லது மகனுக்காக கல்விக் கடனைப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தினால், அந்த கல்விக் கடனுக்கான வட்டியானது பிரிவு 80E இன் கீழ் மொத்த வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின்படி தனிநபருக்கு மட்டுமே விலக்கு கிடைக்கும்.

அதாவது ஐடிஆர் பைல் பண்ணும் போத கல்விக் கடனுக்கு நாம் எவ்வளவு வட்டி செலுத்தியுள்ளோம் என்பதை பிரிவு 80E இன் கீழ் நமது ITR ஐத் தாக்கல் செய்யும் போது இதைத் தனியாகத் தெரிவிக்க வேண்டும். அப்படி ஆவணங்களை காட்டி தெரிவிக்க முடியாதவர்கள் வருமான வரி சட்டப்பிரிவு 139 (8A)-ன் படி வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரி படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்- இந்த முறையில் 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+