"பயப்படாதீங்க சார் உஷாரா இருப்பேன்".. ரஜினியின் அட்வைஸை ஏற்ற ஸ்டாலின்! அந்த ரியாக்சன் இருக்கே! செம
சென்னை: ‛‛என்னை விட ஒரு வயது கூடதான். அதனால் ரஜினிகாந்த் அறிவுரையும் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாரா இருப்பேன்'' என மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது சிரித்தபடி ரஜினிகாந்த் ரியாக்சன் கொடுத்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் தான் அதன் பின்னணி பற்றி இங்கு பார்ப்போம்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு நூலாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
அமைச்சர் எவ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். இந்த விழாவில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் ரஜினிகாந்தின் அறிவுரையை ஏற்பதாகவும், உஷாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் கூறியதாவது:

இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல நம்முடைய சூப்பர் ஸ்டார் வருகை தந்து மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில், என்னை விட ஓரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் பரிந்து கொண்டேன்.பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாரா இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்து, அவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து நம்மையெல்லாம் பெருமைப்படுத்தியிருக்க கூடிய எவ வேலுவுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்'' என பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது ஸ்டாலினுக்கு முன்பு ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர், ‛‛எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க..
துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டி ஆட்டியவர். முக ஸ்டாலின் Hats off too you..''என பேசினார். இதனை கேட்டவுடன் முதல்வர் ஸ்டாலின் உள்பட மேடையில் இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் நிகழ்ச்சி அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. அதாவது முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பவர்கள் அனைவரும் கருணாநிதியின் அரசியல் செய்தவர்கள் அவர்களை சமாளிப்பது கடினம் என்ற வகையில் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இதனை புரிந்து கொண்ட ஸ்டாலின் கடைசியாக தனது பேச்சில் ரஜினிகாந்தை பார்த்து, ‛‛உங்களின்அறிவுரைகளை ஏற்கிறேன். பயப்பட வேண்டாம். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications