Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த அவசியமும் இல்லை.. துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ரவி எழுதிய கடிதத்தால் அடுத்த சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்கல்வித்துறையின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டாம் என தமிழக பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளுக்கு ஆளுநர் ஆர்என் ரவி கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வர விரும்பியது. கிட்டத்தட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது. பொதுபாடதிட்டத்தை பின்பற்ற தன்னாட்சி கல்லூரிகள் மறுப்பு தெரிவித்ததுடன், கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தன.

Dont follow the general curriculum of higher education: Governor rn ravi wrote a letter

இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தன்னாட்சி கல்லூரிகளின் நிர்வாகிகளிடம் பேசினார். இதையடுத்து பொது பாடத்திட்டத்தை விருப்பத்துக்கு ஏற்ப அந்தந்த தன்னாட்சி கல்லூரிகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முடிவு செய்துகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே பொது பாடத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிய, ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், தனியார் கல்லூரி நிர்வாக சங்கத்தின் தலைவருக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், " மாநில அரசின் உயர்கல்வித்துறையானது பொது பாடத்திட்டத்தை ஏற்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வருவது தொடர்பாக தங்களது கவலைகளைஎன் கவனத்துக்கு கொண்டு வந்தார்கள்.

குறிப்பாக, தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் வடிவமைத்திருக்கும் இந்த பொது பாடத்திட்டம் கல்வி சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், தற்போது பின்பற்றி வரும் பாடத்திட்டத்தை விட பின்னோக்கி இருக்கிறது என்றும், இதனால் உயர் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்றும் கல்வியாளர்கள் கூறினார்கள்.

மேலும் ஆரோக்கியமான போட்டி, சிறந்த செயல்திறனை நோக்கி ஊக்குவிக்கும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் இருந்து (என்.ஐ.ஆர்.எப்.). இந்த பொது பாடத்திட்டம் கல்வி நிறுவனங்களை வெளியேற்றிவிடும் என்று என்னிடம் தெரிவித்திருந்தார்கள். மாநில அரசின் தகுதிக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழு பாடத்திட்டங்கள் தொடர்பாக பொருத்தமான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கும் பொறுப்பை கொண்டிருக்கிறது.

அந்த வழிகாட்டுதல்கள் விதிமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாநில பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் உள்ள தன்னாட்சி கல்லூரிகள் பாடத்திட்டங்களை வடிவமைக்கின்றன.

எனவே உங்கள் நிறுவனங்களின் திறமையான அமைப்பால் வடிவமைக்கப்பட்டு இருக்கும் பாடத்திட்டங்களை நீங்களே நடைமுறைப்படுத்தலாம். உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் வடிவமைத்த பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை" இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+