காதலர் தினம்: உங்கள் லவ்வருக்கு இந்த 7 பொருளை கிஃப்ட்டா கொடுக்காதீங்க! மீறினால் பிரேக் அப்தான்!
சென்னை: காதலர் தினத்தில் தப்பித் தவறிக் கூட இந்த 7 பொருட்களை உங்கள் காதலருக்கு பரிசாக கொடுத்துவிடாதீங்க! அப்புறம் பிரேக் அப்தான் போங்க!
காதலர் தினம் வரும் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பூங்காக்கள், பொழுதுபோக்கு கூடங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், உணவகங்கள், ரிசார்ட்கள் என நிரம்பி வழியும்.

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் இந்த தினத்தை கொண்டாடுகிறார்கள். அது போல் திருமணமானவர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள். கொண்டாட்டம் என்றால் அன்புதான். அந்த அன்பை வெளிப்படுத்த பரிசு பொருட்கள் என்பது அத்தியாவசியமாகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் பரிசு பொருட்கள் என்றாகிவிட்டது. இது ஊக்கப்படுத்துவதற்காகவும் வழங்கப்படுகிறது. அது போல் நீங்களும் உங்கள் அன்பானவர்களுக்கு பரிசுகளை கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
அப்படியென்றால் என்ன கொடுக்கலாம் என்பதை நன்கு ஆராய்ந்துவிட்டு பிறகு வாங்குங்கள். அதாவது சில பரிசு பொருட்களை கொடுத்தால் உங்கள் காதல் பிரேக் அப் ஆகிவிடும் என சாஸ்திரம் சொல்கிறது.
குறிப்பிட்ட 7 பொருட்களை பரிசாக கொடுத்தால் பிரேக் அப்தானாம்! அவை என்ன என்பதை பார்க்கலாம். அதாவது முட்கள் கொண்ட செடிகளை கொடுக்கக் கூடாது. இவை எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். மேலும் உங்கள் உறவில் சண்டையை ஏற்படுத்தும். எனவே ரோஜாக்களை கொடுக்கலாம். ரோஜாக்களிலும் முள் இருக்கே என்று சொல்லாதீர்கள். ரோஜாவில் முட்கள் இருக்காது, அதன் கிளைகளில்தான் இருக்கும். ஆனால் சாஸ்திரம் சொல்வது பூக்களே முட்கள் போல் இருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதால் அதை பலர் தேர்வு செய்வர் என்பதால் இந்த எச்சரிக்கை!
கருப்பு நிற பொருட்களையும் பரிசாக கொடுக்காதீர்கள். இவை துக்கத்தை உணர்த்தும் நிறம். மேலும் பிரிவையும் ஏற்படுத்தும். உங்கள் மீது தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். எனவே மஞ்சள், பிங்க், பச்சை உள்ளிட்ட நிறங்களை கொடுங்கள். அது போல் கூர்மையான கத்தி, கத்தரிக்கோல் போன்றவை கூட விரிசலை ஏற்படுத்தும்.
பழைய அல்லது பயன்படுத்திய பொருட்களும் எதிர்மறை ஆற்றலை தரும். இதனால் உறவின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே புதிய பொருட்களை வாங்கித் தாருங்கள்.
4, 8 போன்ற எண்ணிக்கையில் எதையும் வாங்கித் தராதீர்கள். இவை துரதிருஷ்டத்தை தரும். ஒற்றை ரோஜாவையும் கொடுக்காதீர்கள். இரும்பு, எஃகு போன்ற உலோகங்களால் ஆன பரிசுகளையும் கொடுக்காதீர்கள். இவையும் இருவருக்குள்ளும் சண்டைக்கு வழிவகுக்கும். எனவே வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்கள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்பதால் இவற்றை வாங்கித் தரலாம். தங்கம் விற்கும் விலைக்கு பரிசா என கேட்கிறீர்களா அதுவும் நியாயம்தான்!
இந்த தகவல்கள் இணையத்தில் இருந்து எடுத்தது. உங்கள் விருப்பப்படி பரிசுகளை கொடுத்துக் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications