"ஜோசப் விஜய்" ரசிகர்களே, ஜாக்ரதை.. கிறிஸ்மஸ்க்கு ரிலீஸ் பண்ணுங்களேன்.. கருணாநிதி வேற: அர்ஜூன் சம்பத்

அஜித், ஜோசப் விஜய் ரசிகர்களுக்கு அர்ஜூன் சம்பத் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், அஜித் மற்றும் விஜய் ரசிர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.. அத்துடன், வழக்கம்போல், திமுகவையும் அட்டாக் செய்து ஒரு பேட்டி தந்துள்ளார்.

பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானது தமிழ் சினிமாவில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான்.. இதில் போட்டி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் அது பரபரப்பின் உச்சமாகத்தான் இருக்கும்.

அன்றைய எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் இருந்தே இப்படித்தான்.. ஒரே நாளில் படங்கள் வெளியாவதால் அந்தந்த ரசிகர்கள் அதனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

 2 ஸ்டார்கள்

2 ஸ்டார்கள்

அப்படித்தான் இப்போதும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது.. இந்த நேரத்தில் யார் பெரிய ஆள்? என்கிற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வலுக்கட்டாயக உருவாக்கப்படுவதாகவும், அதிக வருவாயை பெருக்கவும் இது உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், 2 ஸ்டார் படங்கள் வரும்போது, அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.. ரசிகர்கள் இடையே மோதல் நடப்பதை தவிர்க்க, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டி உள்ளது.

 கருணாநிதி

கருணாநிதி

விடிகாலை 4 மணி ஷோவுக்கு, மிட்நைட்டிலேயே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிடுவதால், இது சில சமயம் எல்லைமீறியும் விடுகிறது.. அந்தவகையில், ரசிகர் ஒரு நடந்த களேபரத்தில் இறந்துவிட்டது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சி அடைய செய்தது. அதனால், தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடந்த 2 நாட்களாகவே, இளைஞர்களுக்கு தங்களால் முடிந்த அளவு அறிவுரை சொல்லி வருகிறார்கள். திராவிடர் கழக மூத்ததலைவர் சுப.வீரபாண்டியன் வேதனையுடன் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார்.

 முக முத்து

முக முத்து

அதில், "கோடி கோடியாக ஊதியம் பெறும் நடிகர்கள், தெருக் கோடியில் இருக்கும் தங்கள் ரசிகர்களைக் காப்பாற்றியாக வேண்டும், அறியாமையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்! தங்கள் ரசிகர்களைச் சமாதானப்படுத்தி, அவர்களை நன்னெறிப்படுத்த வேண்டும். இனிமேலாவது ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாவதை அவர்களே தவிர்க்க வேண்டும்! இரண்டு பேர் புகழ் பெறுவதற்காக, ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கை பலியாகக் கூடாது" என்று மனவருத்தத்துடன் அறிவுறுத்தியிருந்ததை இங்கு மீண்டும் ஒருமுறை நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

 பிள்ளையோ பிள்ளை

பிள்ளையோ பிள்ளை

அந்தவகையில், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும் ஒரு கருத்தை சொல்லி உள்ளார். ஆனால், இதுவரை யாருமே முன்வைக்காத, வித்தியாசமான கோரிக்கையை எழுப்பி உள்ளார். செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் பேசியபோது, "இன்னைக்கு நீங்க பார்த்தீங்கன்னா, தமிழ்நாடு முழுக்க துணிவு. அப்பறம் இன்னொன்னு வாரிசு. "பிள்ளையோ பிள்ளை"ன்னு ஒரு படம் எடுத்தாரு கருணாநிதி. அப்ப அதிமுககாரர்கள் அதை "கொள்ளையோ கொள்ளை" என்று விமர்சித்தார்கள். முக முத்துவை வைத்து, பிள்ளையோ பிள்ளை, கொள்ளையோ கொள்ளை என்றார்கள். இப்போது ரெட்ஜெயன்ட் நிறுவனத்தை வைத்து, 2 படத்தையும் இவங்களே வாங்கி கொண்டு, கொள்ளையோ கொள்ளை நடக்குது.

 கொள்ளையோ கொள்ளை

கொள்ளையோ கொள்ளை

200 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விக்கறாங்க. டாடா, பிர்லா, அம்பானி, அதானி இவங்க எல்லாம் முதல் போட்டு தொழில் பண்ணால்கூட, இவ்வளவு சம்பாதிக்க முடியாது..ங்க. தமிழ்நாட்டு மக்களை எப்படி ஏமாத்திட்டு இருக்காங்கன்னு பாருங்க. ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலமாக "கொள்ளையோ கொள்ளை". அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ நிறுவனங்கள், என்ஜிஓக்கள், பல இடங்களில் இந்த 2 படத்தையும் வாங்கி கொண்டு, முதல்நாள், சிறப்பு காட்சிகள் என்ற பெயரில், ஏராளமாக வசூல் பண்ணியிருக்காங்க.

 ஜோசப் விஜய்

ஜோசப் விஜய்

அஜீத் ரசிகர், ஜோசப் விஜய் ரசிகர்கள் எல்லாம் உஷாரா இருக்கணும். ஏற்கனவே இந்த மாதிரி திரைப்படங்களை எல்லாம், பொங்கல் நேரத்துல, தீபாவளி நேரத்துல, அஜித், ஜோசப் விஜய் படங்களை எல்லாம் பண்ணக்கூடாது. ஏன் கிறிஸ்துமஸ்க்கு ரிலீஸ் பண்ணுங்களேன். ரம்ஜானுக்கு ரிலீஸ் பண்ணுங்களேன். எதுக்குய்யா எங்க பண்டிகையில ரிலீஸ் பண்ணுறே? எங்கள் மக்களை எல்லாம் பொங்கல் கொண்டாட விடாமல், எங்க மக்களை எல்லாம் தீபாவளி கொண்டாட விடாமல், பூரா பேரையும் தியேட்டருக்கு அனுப்பிவிட்டு, நீங்க உங்க பண்டிகையை மட்டும் நல்லா கொண்டாடுவிங்களா?

 சாராயம் சினிமா

சாராயம் சினிமா

அதனால் இந்த படம் வினியோகஸ்தர், பட தயாரிப்பார்கள் எல்லாம் இனிமேல் பொங்கல் படம், தீபாவளி படம் இதெல்லாம் வரக்கூடாது. எதுக்குப்பா தீபாவளிக்கு சினிமாவும், சாராயமும்? பொங்கலுக்கு சினிமா, சாராயம் இலக்கு வைத்து, என்னங்க இதெல்லாம் அநியாயமா இருக்குது? இந்த சினிமா இன்டஸ்ட்ரி, தமிழக இளைஞர்களை, இந்து தமிழர்களை எத்தனை அடிதடி, எத்தனை கலவரம், எத்தனை சட்ட ஒழுங்கு பிரச்சனை, ஒருத்தன் செத்தே போயிட்டான். இந்த ரசிகர் மன்ற மனோபாவத்தில் இருந்து மாற வேண்டும். இந்து மக்கள் கட்சி இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும்" என்றார் அர்ஜுன் சம்பத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+