Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோட்டில் சிகரெட் பிடித்தால் அவ்வளவுதான்.. ப்ளீஸ், இனிமேல் "இதை" செய்யாதீங்க.. தமிழக அரசு வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் கத்திரி வெயிலே ஆரம்பிக்காத நிலையில், தமிழகத்தில் வெப்பம் வதைத்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், தீயணைப்பு துறையினர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்திருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்தவாறு உள்ளது.. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு எச்சரித்தே வருகிறது..

Dont throw Beedis and Cigarette butts on the Roadsides asks Fire and Rescue Department Officers

ஆரஞ்சு அலர்ட்: கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்திருந்தது. சமாளிக்க முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.. ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 15 இடங்களில் நேற்றைய தினம் வெயில் சதம் அடித்திருக்கிறது..

அதிகபட்சமாக ஈரோட்டில் 107 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது.. சென்னையில் 101 டிகிரி வெப்பமும் பதிவாகியிருக்கிறது. திருப்பத்தூர் - 106.52, தருமபுரி - 106.16, வேலூர் - 105.98, திருத்தணி - 105.08, கரூர் பரமத்தி - 104.36, சேலம் - 104.18, மதுரை விமான நிலையம் - 103.28 என பதிவாகி உள்ளது. இதில், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது.. ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது.

கிளைமேட்: ஊட்டியைபோலவே, கிட்டத்தட்ட ஜில் கிளைமேட் கொண்ட பெங்களூரு, பாலக்காடு போன்ற இடங்களிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. எனவே, மக்களை கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு தமிழக சுகாதாரத்துறையும் , வானிலை மையமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுவருகின்றன.

இந்நிலையில், தீயணைப்பு துறையினரும் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர்.. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குப்பைக்கு தீ வைக்க வேண்டாம் என்றும், சாலை ஓரங்களில் சிகரெட் மற்றும் பீடி துண்டுகளை வீச வேண்டாம் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பீடி, சிகரெட்: இதுகுறித்து மேலும் அவர்கள் சொன்னபோது, "தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வீடுகளில் வைக்க வேண்டாம். குடிசை வீடுகளின் அருகே, குப்பைக்கு தீ வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம்..

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சாலைகளில் மட்டுமல்ல, வயல் வெளிகளில் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரத்தடி நிழல்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.. புகையும் பீடி துண்டுகளை சாலையோரம் வீசி எறியும் வழிபோக்கர்களால், காய்ந்த புல்வெளிகள் தீப்பிடித்து, காற்றின் போக்கில் அதிவேகமாக தீ பரவுகிறது.

அறிவுறுத்தல்: சாலையோரம் காய்ந்த புல்வெளி அருகே எரியும் தீக்குச்சி, பீடி, சிகரெட் துண்டுகளை வீச வேண்டாம். குப்பைக்கு தீ வைக்க வேண்டாம்" என்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+