தோசை, இட்லி, சாம்பார் சட்னி! 100% லிட்ரெசி சார்! தென்னிந்தியா மீது வெறுப்பை உமிழும் சில வடஇந்தியன்ஸ்
சென்னை: இந்தி திணிப்பு எதிர்ப்பு, மும்மொழிக்கொள்கை திணிப்பு , புதிய கல்விக்கொள்கை பிரச்சனை என்ற பல பிரச்சனைகளுக்கு இடையே தற்போது வடஇந்தியர்கள் தென்னிந்தியர்களுக்கு எதிராக கடுமையான வெறுப்பை உமிழ தொடங்கி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மொழி பிரச்சனை உச்சத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்தி திணிப்பு
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு பற்ற வைத்த இந்த மொழிப்போர் தீ சர்வதேச அளவில் பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுவதை கன்னட மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில்.. கன்னட மக்கள் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பொறாமை.. நம்ம கன்னடிக மக்களுக்கு இதே தெளிவு 10% ஆவது இருக்கணும். இங்கே உள்ளவர்கள் ஸ்டாலின் போல இப்படி பேசுவது இல்லை, என்றுள்ளனர்.
வடஇந்தியா வெறுப்பை உமிழ்கிறது
இந்தி திணிப்பு எதிர்ப்பு, மும்மொழிக்கொள்கை திணிப்பு, புதிய கல்விக்கொள்கை பிரச்சனை என்ற பல பிரச்சனைகளுக்கு இடையே தற்போது வடஇந்தியர்கள் தென்னிந்தியர்களுக்கு எதிராக கடுமையான வெறுப்பை உமிழ தொடங்கி உள்ளனர்.
1. இணையத்தில் முக்கியமாக இன்ஸ்ட்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்படுகிறது.
2. கேரளா, தமிழ்நாட்டை கிண்டல் செய்யும் வகையில் சார் 100% லிட்ரெசி சார்.. என்று கமெண்ட் செய்யப்படுகிறது. முக்கியமாக சமீபத்தில் வடஇந்திய காமெடியன் ஒருவர் செய்த வன்ம காமெடிக்கு பின் இது டிரெண்டாகி உள்ளது.
3. தமிழ்நாட்டை கிண்டல் செய்யும் வகையில் கருப்பான ஒரு வீடியோவை போட்டோ.. இதோ தமிழர்கள்.. என்று கிண்டலாக நம் கலரை கலாய்க்கும் தொனியில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
4. தமிழ் பேசுவது போல.. தவறாக பேசி.. நம்முடைய மொழியை கிண்டல் செய்யும் ரீல்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
5. தமிழ்நாட்டிற்கும் - கர்நாடகாவிற்கும் வித்தியாசம் தெரியாமல்.. முதல்வர் ஸ்டாலினை கிண்டல் செய்கிறேன் என்றே பெயரில் அவர் கன்னட மொழியை காக்க போராடுவது போல இரண்டு மாநிலத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் கூட பல ரீல்ஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
7. தமிழர்களின் கிடா வெட்டு போன்ற கலாச்சாரத்தை கூட கிண்டல் செய்யும் விதமாக போஸ்டுகள் போடப்படுகின்றன.
இன்ஸ்ட்டாவில் டிரெண்டாகும் "தோசை, இட்லி, சாம்பார், சட்னி சட்னி".. "கேரளா சார்.. 100% லிட்ரெசி சார்" போன்ற தென்னிந்தியாவை கிண்டலடிக்கும் வெறுப்பு டிரெண்ட்களை எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!












Click it and Unblock the Notifications