சென்னைக்கு வருது ”டபுள் டக்கர்” 2கே கிட்ஸ்கள் பார்த்திராத பஸ் ரெடி.. எப்போது முதல் இயங்கும்.. வெளியான தகவல்
சென்னை: ஒரு காலத்தில் சென்னை நகரை கலக்கிக் கொண்டிருந்த டபுள் டக்கர் பஸ் (Double decker bus) மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 2கே கிட்ஸ்கள் பார்த்திராத இந்த டபுள் டக்கர் பஸ்கள் எனப்படும் இரட்டை மாடி பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்க்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார பேருந்துகளாக இந்த இரட்டை அடுக்கு பேருந்து இயக்கப்பட உள்ளது.
சென்னையில் வேறு எந்த நகரங்களிலும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையில் புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்து வசதி என தமிழகத்தின் வேறு எந்த நகரத்திலும் இல்லாத வசதி சென்னையில் மட்டுமே உள்ளது.

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் எனப்படும் இரட்டை மாடி பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
கடைசியாக எப்போது இயக்கப்பட்டது
சென்னை நகரில் தற்போது தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் டபுள் டக்கர் பேருந்து விரைவில் இயக்கப்பட உள்ளது. 1970 காலகட்டங்களில் இரட்டை அடுக்கு பஸ்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டன. சுமார் 10 ஆண்டுகள் இந்த பஸ்கள் சென்னையில் ஓடின. பின்னர் 1980 காலகட்டத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
பின்னர் 1997-ம் ஆண்டில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் சென்னையில் ஓடத் தொடங்கின. ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மேம்பால பணிகள் உள்ளிட்டவை காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் இந்த பேருந்து சேவை நிறுத்தபட்டது. கடைசியாக உயர்நீதிமன்றம் - தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பேருந்து இயக்கப்பட்டது.
எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது?
அதன்பிறகு இதுவரை சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் தற்போது சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை இரட்டை அடுக்கு பேருந்துகள் வழக்கமான பயணிகள் பயணத்துக்கும், சுற்றுலா பயணத்துக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
தினசரி பயணத்திற்கு மட்டுமல்லாமல், சென்னை நகர சுற்றுலாவிற்கும் பயன்படுத்தப்பட உள்ளன. சுற்றுலா செல்வதற்கு பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்று கூறினர். முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் வார நாட்களில் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் உயரம் அதிகம் என்பதால் அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடங்களில் மட்டும் இயக்கப்பட உள்ளதாம்.
90 பயணிகள் செல்ல முடியும்
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை நகர சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இந்த பேருந்துகள் இயக்கப்படும் எனவும் வழித்தடம் திட்டமிடல் மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. சாதாரண மின்சார பேருந்துகளை விட 1.5 மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்றும் தெரிவித்தனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications