Double Decker: சென்னையில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து இயக்கம்! மாடி பஸ்ஸில் ஜாலியா போலாம்!
சென்னை: சென்னை மாநகரில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து (Double Decker) சேவை தொடங்குகிறது. கடந்த 12 ஆம் தேதி இந்த பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்த நிலையில் இன்று முதல் அந்த பேருந்துகள் இயக்கத்திற்கு வருகின்றன.
1970-களில் இரண்டு அடுக்கு பேருந்துகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. சுமார் 10 ஆண்டுகளுக்கு இந்த பேருந்துகள் சென்னை மாநகரில் இயங்கியிருக்கும். அதன் பிறகு 1980 களில் இரட்டை அடுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து 1997ஆம் ஆண்டில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் சென்னையில் ஓடத் தொடங்கின. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அவை பயணிகளை ஏற்றிச் சென்றன. கடைசியாக உயர்நீதிமன்றம்- தாம்பரம் இடையே இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
மீண்டும் இயக்கம்
இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு அந்த பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு இதுவரை சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த முறை இரட்டை அடுக்கு பேருந்துகள் வழக்கமான பயணிகள் பயணத்திற்கும் சுற்றுலா பயணத்திற்கும் பயன்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சென்னை சாலையில் ஒரு காலத்தில் மக்கள் விரும்பி பயணம் செய்தது இரட்டை அடுக்கு பேருந்துகள்.
மாடி பஸ்
இதை பலர் மாடி பேருந்து என்றும் அழைத்ததுண்டு. அப்படிப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. இந்த முறை அவர் தினசரி பயணத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதாவது சென்னையில் நகரச் சுற்றுலா செல்வதற்கும்!
20 இரட்டை அடுக்கு பேருந்து
இதற்காக பயணிகள் முன்பதிவு செய்யப்பட வேண்டும். முதல் கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் 20 இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வார நாட்களில் பயணிகளுக்காகவும், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாவுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
12 ஆம் தேதி தொடக்கம்
சாதாரண மின்சார பேருந்துகளை விட ஒன்றரை மடங்கு பயணிகளை இந்த பேருந்துகள் ஏற்றிச் செல்லும் என தெரிவித்திருந்தனர். இந்த டபுள் டக்கர் பேருந்துகளை கடந்த 12 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து வைத்து அறிமுகப்படுத்தினார்.
டபுள் டக்கர் பேருந்து
சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடந்த விழாவில் முதல்வர் அறிமுகப்படுத்தினார். இந்தப் பேருந்து அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து, ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் ஹிந்துஜா அறக்கட்டளை, மும்பை மூலமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை இயக்குவதற்காக வழங்கப்பட்டது.
வழித்தடம் இதுதான்
முதல்கட்டமாக சென்னையில், முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின் படி, TTDC தலைமையகம் - LIC - ஸ்பென்சர் பிளாசா - மக்கா மஸ்ஜித் - பி. ஓர் & சன்ஸ் (வாட்ச் டவர்) - பல்லவன் சாலை - பாடிகார்டு முனீஸ்வரர் கோவில் - ராஜா அண்ணாமலை மன்றம் - சென்னை உயர்நீதிமன்றம் - தலைமைச் செயலகம் - ரிசர்வ் வங்கி - சென்னை துறைமுகம் - வெற்றி போர் நினைவுச்சின்னம் - நேப்பியர் பாலம், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள், மெரினா கடற்கரை - கலங்கரை விளக்கம் - பட்டினப்பாக்கம் கடற்கரை - சாந்தோம் தேவாலயம் - அகில இந்திய வானொலி - கலங்கரை விளக்கம் - காவல்துறை தலைமை அலுவலகம் - குயின் மேரீஸ் கல்லூரி - விவேகானந்தர் இல்லம் - பிரெசிடென்சி கல்லூரி - எழிலகம் - சென்னை பல்கலைக்கழகம் - தூர்தர்ஷன் கேந்திரா - இராஜாஜி மண்டபம் - ஓமந்தூரார் அரசு மருத்துவமனை - TTDC தலைமையகம் ஆகிய வழித்தடங்களில், நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாகக் காணும் வகையில் பனோரமிக் (Panoramic) பார்வை வசதியுடன் இப்பேருந்தின் சேவை இயக்கப்பட உள்ளது. சுற்றுலாவுக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 200-ம் சிறியவர்களுக்கு ரூ 150-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.
-
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications