"சக்கரம்" சுழல்கிறது.. இரட்டிப்பு சந்தோஷம்.. தமிழகத்தில் மழை கொட்ட போகிறது.. எத்தனை நாளைக்கு தெரியுமா

இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் 1ம் தேதி வரை தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 4ம் தேதிவரை மழை பெய்யக்கூடும் என்ற இன்னொரு தகவலும் தமிழ்நாட்டு மக்களை குளிர வைத்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது... ஆனாலும் வழக்கமான மழை காணப்படவில்லை.. போதிய அளவு மழை பெய்யாத நிலையில், அவ்வப்போது பனியின் தாக்கமும் பெருமளவில் காணப்படுகிறது.

வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கி விட்டால், மழை குறைந்து விடும் என்பது இயல்பு.. ஆனால் இப்போது தற்போது பருவம் தவறி மழை, பனிப்பொழிவு காணப்பட்டாலும் மழையும் அடிக்கடி பெய்து வருகிறது.

சைக்கிள்

சைக்கிள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பலமாக கொட்டியது.. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் வரும் 30ம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், அதன்படி நேற்றைய தினம் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தது... இனியும் மழை இருக்கும் என்கிறார்கள்..

 ஹேப்பி நியூஸ்

ஹேப்பி நியூஸ்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.. அதில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல், வரும் டிசம்பர் 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளது.. அதேபோல, தமிழக வானிலை நிலவரம் குறித்து தனியார் வானிலை நிபுணரான வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்றைய தினம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார் அதன்படி, இன்றும் நாளையும்கூட, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

 சுழல்கிறது சக்கரம்

சுழல்கிறது சக்கரம்

அதாவது, கிழக்கு திசை காற்றால் சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதன்படி மேற்கு மாவட்டங்களான ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூரில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேபோல, தென்தமிழக மாவட்டங்களில், நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சக்கரம்

சக்கரம்

அதுமட்டுமல்ல, டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாக போகிறது என்றும், இது 3 முதல் 4 கட்டங்களாக நகர்ந்து இடம்மாற வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்.. சக்கரங்கள் பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும் என்பதால், இந்த சக்கரம் ​​இலங்கைக்கு கீழ் செல்லப்போகிறதா? அல்லது இடம்மாறி செல்ல போகிறதா என தெரியவில்லை.. இலங்கைக்கு கீழ் வந்தால், தமிழகத்திற்கு மறுபடியும் மழைக்கு வாய்ப்புண்டு என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+