இ பான் கார்டு.. உங்களுக்கு இப்படி இ-மெயில் வந்திருக்கா பாருங்க? டச் பண்ணாதீங்க.. பறந்து வந்த அலர்ட்
சென்னை: பெருகிவரும் ஆன்லைன் மோசடிகளுக்கு யாருமே ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக பலமுறை, பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஒன்றை பொதுமக்களுக்காக விடுத்தபடி உள்ளனர்.. எனினும், புதுப்புது மோசடிகள் அரங்கேறிவருவதால், மீண்டும் ஒரு எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.
அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் தற்போது அரங்கேறி வருகின்றன.. குறிப்பாக, பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.

விதவிதமான மோசடிகள்
அதேபோல, "கூரியர் தபாலில் உங்கள் பெயரில் போதை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் உங்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுவோம்" என்று மிரட்டி ஐடி ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதும் தொடர்கதையாகிவிட்டது..
அதேபோல, உங்களது ATM கார்டு காலாவதியாக போகிறது, மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம், உடனே தடுத்துநிறுத்த, குறிப்பிட்ட நம்பருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பொய்களை சொல்லி, பீதியை கிளப்பியும் ஆன்லைன் மோசடிகள் நடக்கின்றன..
கூகுள் பே, கியூஆர் கோடு
அதேபோல, கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாகவும் மோசடி நடக்கிறது.. "உங்க அக்கவுண்டிற்கு தெரியாமல் பணம் அனுப்பிட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லி, கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடக்கிறது.. கியூஆர் கோடை அனுப்பும்போது, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை மர்மநபர்கள் சுருட்டி விடுகிறார்களாம்.
எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க, அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விட வேண்டும் என்றும், தொடர்ந்து நீங்கள் மர்மநபர்களிடம் பேசினால், அதை பயன்படுத்தியே வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள் என்றும் போலீசார் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
கடிவாளங்கள்
அதுமட்டுமல்ல, ஒருசிலர், தாங்கள் செய்வது குற்றம் என்று தெரிந்தும், மோசடி பேர்வழிகளுக்கு தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை தந்து, கமிஷனை பெற்றுக் கொள்கிறார்களாம்.. எனவே, மோசடிக்கு உடந்தையாக, தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை யார் கொடுத்தாலும், அதுவும் குற்றமாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
இவ்வளவு கடிவாளங்களை போலீசார் போட்டும்கூட, மீண்டும் நூதன மோசடிகள் பெருகி வருகின்றன.. இந்நிலையில், பான் கார்டுகளை வைத்தும் மோசடி நடக்கிறதாம்..
மீண்டும் வந்த எச்சரிக்கை
இன்றைய சூழலில் பான் கார்டுகள் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது... எனவே, இந்த அவசியத்தை புரிந்து, மர்மநபர்கள், இதிலும் தங்களது மோசடிகளை காட்ட துவங்கிவிட்டார்கள்.. எனவேதான், PIB Fact Check எனப்படும் உண்மை சரிபார்ப்பு பிரிவிலிருந்து, பொதுமக்களுக்கு, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில், Download e-PAN Card என்று உங்களுக்கு இ-மெயில் வந்தால் அதனை நம்ப வேண்டாம்.. இதுபோன்ற எந்த ஒரு இ-மெயிலும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை.. எனவே இப்படியான மெயில் வந்தால் அதில் உள்ள எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும், அக்கவுண்டில் உள்ள பணம் திருடப்பட வாய்ப்பு உள்ளது என்று PIB Fact Check எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications