தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி.. 22 கிமீ தூரத்திற்கு.. வருது 19 ரயில் நிலையங்கள்! மெட்ரோவின் தரமான முடிவு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யும் முனையில் உள்ளது. இந்த 21.5 கிலோமீட்டர் நீள வழித்தடத்தில் 19 நிலையங்கள் அமையவுள்ளன.
இது தொடர்பாக சிஎம்ஆர்எல் அதிகாரிகள், அறிக்கை இறுதிக்கட்டமாக உள்ளதாகவும், அடுத்த இரு வாரங்களுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தனர். இதன் தயாரிப்பு ஒப்பந்தம், கடந்த ஆகஸ்டில் சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் நிறுவனத்திற்கு ₹96.19 லட்சத்திற்கு வழங்கப்பட்டது.

தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி
DPR முடிந்ததும், சிஎம்ஆர்எல் அதை தமிழக, மத்திய அரசுகளின் ஒப்புதல் மற்றும் நிதிக்கு அனுப்பும். "கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகும்," என ஒரு சிஎம்ஆர்எல் அதிகாரி கூறினார். இம்மெட்ரோ வழித்தடம் தாம்பரம், கிண்டி, வேளச்சேரி பகுதி கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களை இணைப்பதால், பொதுமக்களுக்கும் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டிற்கும் (TOD) மிக முக்கியமானது.
ஒரு மூத்த சிஎம்ஆர்எல் அதிகாரி, "21.5 கி.மீ. வழித்தட நிலையங்கள், அதிகபட்ச பயணிகள் போக்குவரத்து (PHPD) உள்ள முக்கிய இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன. கிண்டியை இணைப்பது அதை பிரம்மாண்ட போக்குவரத்து மற்றும் வணிக மையமாக மாற்றும்" என்றார். இத்திட்ட நிலையங்களில் மேடவாக்கம், வழித்தடம் 5 (மாதவரம்-சோழிங்கநல்லூர்) இணைப்பு, பல்லிக்கரணை காமாட்சி மெமோரியல் மருத்துவமனை, வேளச்சேரி குருநானக் கல்லூரி சந்திப்புகள் மற்றும் வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.
மார்ச் 2024 பணிகளில், தாம்பரம்-வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் (MRTS) பயணத் தேவையை சிஎம்ஆர்எல் மறுமதிப்பீடு செய்தது. கிண்டி அல்லது லிட்டில் மவுண்ட் வரை நீட்டிக்க முதலில் மதிப்பிடப்பட்டது. எனினும், கிண்டியின் வளர்ச்சி, இ.எம்.யு. (EMU) சேவைகள், சிஎம்ஆர்எல்-இன் பல்நோக்கு மையத் திட்டங்களை கருதி, அதிகாரிகள் லிட்டில் மவுண்டிற்குப் பதிலாக கிண்டியை நீட்டிக்க முடிவு செய்தனர்.
மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள்
₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக பணிகள் தாமதம் அடைந்து உள்ளது. விரைவில் போரூர்-கோடம்பாக்கம் ரூட்டை திறக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-IIத்தில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வருட இறுதியில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பணிகள் தீவிரம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, இன்று (01.03.2025) முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எட்டியுள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்திற்காக தொடக்க புள்ளியாக நியமிக்கப்பட்ட தூண் எண். 424-ஐ அடைந்தது. கூடுதலாக, மேல்நிலை உபகரண (OHE) பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் இரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இது திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications