Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபேமிலி டிராமாவும், குரோட்டன்ஸ் பாமகவும்.. ராமதாஸிடம் திமுக மன்றாட அவசியமில்லை.. அடுத்து என்னாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருமே தற்போது இரு துருவங்களாக உள்ளனர்.. இந்த மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வராது.. வரவிருக்கும் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இதற்கு ஒரு முடிவை உண்டாக்கும்" என்று மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார். மேலும் பாமகவின் இன்றைய சூழல் குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன், 'குடும்ப சட்டை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.. இது ஒரு 'ஃபேமிலி சென்டிமென்ட் டிராமா'.. 20. 30 துண்டுகளாக வெட்டினால் கூடப் பரவாயில்லை, அன்புமணி துரோகம் செய்துவிட்டாயே, நான் முறையாக பிள்ளை வளர்க்கவில்லை.. என் வளர்ப்பு சரியில்லை.. ஒரு தகப்பனாக தோற்றுவிட்டேன்" என்று ராமதாஸ் ஆதங்கப்படுகிறார்..

Ramadoss DMK Dr Anbumani PMK

அதிகாரம் தரும் மாற்றம்:

எந்தவொரு அரசியல் கட்சியும், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு லட்சியவாதிகளால், கொள்கை பிரகடனங்களால், தீவிர செயல்பாட்டாளர்களால் முழுக்க முழுக்க நிறைந்திருக்கும்..

ஆனால் அதே கட்சி, அதிகாரம் கிடைத்த பிறகு, யாரெல்லாம் கட்சிக்கு தியாகம் செய்தார்களோ, யாரெல்லாம் பாடுபாட்டார்களோ, சொத்தை இழந்தார்களோ, அவர்களை ஓரம் தள்ளிவிட்டுப் பணக்காரர்களுக்கு முன்னுரிமை அளித்துவிடும்.. இதனால்தான் அந்த கட்சி, பிழைப்புவாத அரசியல் கட்சியாக மாறுகிறது. இப்படி பல கட்சிகள் உள்ளன..

அன்புமணியின் அரசியல் வளர்ச்சி:

அன்புமணி ராமதாஸை பொறுத்தவரை, எந்த போராட்டமும் இல்லாமல், கட்சியில் சேர்ந்த 2004-ம் ஆண்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினர், இளைஞரணி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் என அனைத்து பதவிகளையும் உடனடியாக பெற்றார். உழைப்பின் வழியே வராமல், அதிகாரத்தை எளிதாக பெற்றதால் அவருக்கு அதன் அருமை தெரியவில்லை.. பசிக்கும் முன்னே உணவை தயாரித்து தந்தால் எப்படி? அதனால்தான் அனைத்தையும் எட்டி உதைக்கும் நிலைமைக்கு அன்புமணி வந்துவிட்டார்.

காந்திமதியின் விமர்சனம்:

அன்புமணியின் அக்கா காந்திமதி, "நீ போடும் கோட் சூட், கார், டாக்டர் பதவி என எல்லாமே ஐயா போட்ட பிச்சை" என்கிறார்..

வாரிசு அரசியலால் தோற்றுவிட்டேன் என்று சொல்லும் ராமதாஸ், மீண்டும் தனது மகளையே செயல் தலைவராக்குகிறார். ஏன் நீண்ட காலமாக செயல்பட்ட ஜிகே மணி அல்லது அருள் எம்எல்ஏ அல்லது வேறு யாராவது விசுவாசிகளிடம் கட்சியை ஒப்படைக்க அவர் முன்வரவில்லையே? மீண்டும் மீண்டும் கட்சி அக்கா, தம்பி என்ற வட்டத்துக்குள்தானே செல்கிறது?

களத்தில் இறங்கி உழைக்காமல், வெயில் படாமல் 'குரூட்டன்ஸ்' செடி வளர்ப்பது போல வீட்டிற்குள் வளர்க்கப்படும் வாரிசுகளுக்கு அரசியல் போராட்டங்கள் மற்றும் தொண்டர்களின் மதிப்பு தெரியாது...

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் இப்போது துணை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரது உண்மையான தலைமை பண்பு என்பது கட்சி ஆட்சியில் இல்லாத சோதனை காலங்களில்தான் வெளிப்படும்.. அரசியலுக்கு உதயநிதி தகுதி உடையவரா? வலிமை பெற்ற திமுகவை வழிநடத்தக்கூடியவரா? என்பது சோதனை காலங்களில்தான் தெரியும்.. கலைஞரின் போராட்ட வரலாறு அப்படித்தான் வெளியே தெரிந்தது..

உதயநிதிக்கென்று தனி பாதை கிடையாது.. ஆனால் கட்சியில் மூத்தவர்களுடன் பண்பாக பழகுகிறார், நாகரீகமாக சீனியர்களுடன் நடந்து கொள்கிறார்..

பாமக-வின் அரசியல் அங்கீகாரம்

பொதுக்குழுவில் அன்புமணியின் பதவி காலம் முடிந்துவிட்டது, இனி காந்திமதி தலைமையில் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வை ராமதாஸ் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக பொதுக்குழுவைக் கூட்டித் தங்களுக்குத் தாங்களே திட்டமிட்டுக் கொண்டாலும், தற்போது பிளவுபட்டுள்ள நிலையில் அவர்களை எந்தப் பெரிய கட்சி கூட்டணியில் சேர்க்க முன்வரும் என்று தெரியவில்லை.

அன்புமணி "திமுக-வின் அடிமைகள்" என்று விமர்சிப்பதும், அதற்குப் பதிலாக "ஆர்எஸ்எஸ் அடிமைகள்" என்று பதில் வருகிறது.. விசிக இருக்கும் கூட்டணியில் பாமக நுழைய முடியாது என்பதால், திமுக அவர்களை அழைக்க வாய்ப்பில்லை..

திமுக-வின் பலம்

திமுக ஏற்கனவே வலுவான மற்றும் நெருக்கடியான கூட்டணியைக் கொண்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்குப்பிறகு, வன்னியர் வாக்கு வங்கிக்காக ராமதாஸிடம் மன்றாட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை..

விஜய் இன்னும் குட்டி கதை சொல்லும் இடத்திலேயே இருக்கிறார். 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே நம்பி அரசியல் செய்வது வெற்றி தராது.. "இன்ஸ்டாகிராமில் தேர்தல் வைத்தால் மட்டுமே தவெக வெல்ல முடியும்..

காந்திமதி செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அவர் கூறுவது, பாமகவின் கடந்த கால செல்வாக்கை வைத்துப் பேசும் பழைய கதை.. பேரம் பேசக்கூடிய நிலைமையில் பாமக இன்று இல்லை..

அன்புமணியும் ராமதாஸின் கண்ணீரும்:

ராமதாஸின் கண்ணீர், அன்புமணி ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் கரைக்கும். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது அன்புமணியின் பிடிவாதம்.. அன்புமணி தன்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்துப் பொதுவெளியில் பேசுவது ஒரு டாக்டராக தவறானது.. இது தொண்டர்களை எச்சரிப்பதற்காக அவர் செய்யும் செயல்..

தனது தந்தையைப் பார்க்கத் தன்னை விடமாட்டேன் என்கிறார்கள் என்று அன்புமணி சொல்வதும், தொண்டர்களிடையே ராமதாஸ் மிகவும் வயதானவர் என்ற பிம்பத்தை உருவாக்கி, அவர்களை தன் பக்கம் இழுப்பதற்கான ஒரு தந்திரமாகும்..

ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருமே தற்போது இரு துருவங்களாக உள்ளனர்.. இந்த மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வராது.. வரவிருக்கும் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இதற்கு ஒரு முடிவை உண்டாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+