அயராத கொரோனா தடுப்புப்பணிக்கு இடையே மகள்களைப் பார்த்த மகிழ்ச்சியில் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் என்னும் கொடூர அரக்கனின் கைகளில் சிக்கியுள்ள மக்களைக் காக்க அரசுப்பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பம்பரமாக சுற்றி வருகின்றனர்.
சென்னை: அயராத கொரோனா தடுப்புணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் நாற்பது நாட்களுக்குப் பிறகு தனது வீட்டிற்கு சென்று மகள்களை சந்தித்திருக்கிறார். இந்த தகவலை தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். நாற்பது நாட்கள் தனித்திருந்தும், விலகியிருந்தும்,கடமையாற்றி களைத்து போகவில்லை நான் மகள்களைக் கண்ட உடன் புத்துணர்வு பெற்ற தொடர்ந்து களத்தில் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 12 லட்சம் பேரை தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் துணை முதல்வர், அமைச்சர்கள் பம்பரமாக சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்புப்பணியில் ஆரம்பம் முதலே முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். குடும்பத்தினரை சந்திக்கக் கூட நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்நிலையில் 40 நாட்கள் கழித்து தன்னுடைய குழந்தைகளை சென்று சந்தித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாற்பது நாட்கள் தொடர்ந்து பணியில் இருந்தாலும் களைத்துப்போகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது நாட்கள்
தனித்திருந்தும்...
விலகியிருந்தும்...
கடமையாற்றி
களைத்து போகவில்லை நான்!
40 நாட்களுக்கு பின்
மகள்களை கண்ட புத்துணர்வுடன்
தொடர்ந்து களத்தில்

என்று உற்சாக பதிவினை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட அவர் தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் என்னும் கொடூர அரக்கனுடன் எதிர்த்து போராடும் களப்போராளிகள் அனைவருமே தங்களின் குடும்பத்தை கவனிக்கக் கூட நேரமின்றி அயராது பணி செய்து வருகின்றனர். இதை உணர்ந்தாவது மக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.












Click it and Unblock the Notifications