உ.பி.யில் பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸா?.. ரத்தம்னா சிவப்பாதான் இருக்குமா? டாக்டர் பரூக்
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் நரம்பு வழியாக ஏற்றப்பட்டதாக சொல்லப்படுவது தவறான செய்தி என சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரத்தம் என்றால் சிகப்பு நிறத்தில் தான் இருக்கும் என்ற பொதுக் கருத்தின் விளைவாக அல்லது முன்முடிவின் விளைவாக இது போன்ற தவறான செய்திகள் பரவி வருகின்றன. உண்மையில் நடந்த விசயம் தான் என்ன? இது போன்ற சாத்துக்குடி ஜூஸை மனிதருக்கு ஏற்ற முடியுமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது டெங்கு எனும் கொசுவினால் பரவும் வைரஸ் காய்ச்சல் கொள்ளை நோயாக பரவி வருகிறது. இதில் ஒரு நபர் தீவிர டெங்கு நோய்க்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார் . அவரது தட்டணுக்கள் அபாயகரமான
அளவுகளை எட்டியதால் அவருக்கு தட்டணுக்கள் நிரம்பிய ப்ளாஸ்மாவை ஏற்றுவதற்கு முடிவாயிற்று.

தனியார் மருத்துவமனை
அருகில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனையில் இருந்து ஐந்து பைகள் ப்ளாஸ்மா வந்தடைந்தன. அதில் மூன்றாவது பை ஏற்றும் போது அன்னாருக்குத் தீவிரமான எதிர்வினை ஏற்பட்டு இறந்திருக்கிறார் (இது அந்த நிலைய மருத்துவரின் முதல் அறிக்கை) உடனே ஒரு செய்தி பரவுகிறது. ரத்தத்திற்கு பதிலாக மொசாம்பி ஜூஸ் ஏற்றப்பட்டது தான் இறப்பிற்கு காரணம் என்று பரவுகிறது.

ரத்தம் சேகரிக்கும் பைகள்
ஆனால் உண்மையில் ரத்தம் சேகரிக்கும் பைகள் ஏற்கனவே சீல் செய்யப்பட்டவையாகும். அதில் சாத்துக்குடி சாறு இருப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை. ரத்தம் சேகரிக்கப்படுவதே சீல் வைக்கப்பட்ட பைகளில்தான். மேலும் அவை முறையாக பராமரிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட ரத்த வங்கிகளால் / மருத்துவமனைகளில் மட்டுமே விநியோகம் நடக்கும்.

ரத்தம் என்றால் முழு ரத்தம்
முன்பெல்லாம் ரத்தம் என்றால் அது முழு ரத்தம் . சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்போது ரத்தத்தில் உள்ள கூறுகளைத் தனித்தனியாக பிரிக்கும் யுக்தியையும் மதி நுட்பத்தையும் கற்றுவிட்டதால் ரத்தத்தின் ப்ளாஸ்மா தனியாகவும் சிவப்பு அணுக்கள் தனியாகவும் பிரித்து எது யாருக்குத் தேவையோ அவர்களுக்கு வழங்கிட முடியும். உதாரணமாக ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு தீவிர ரத்தசோகை ஹீமோகுளோபின் 5 கிராம் தான் இருக்கிறது என்றால் அவருக்கு முழு ரத்தம் (WHOLE BLOOD) ஏற்றுவதைக் காட்டிலும் தனியாக சிவப்பு அணுக்களை (PACKED RED CELLS) ஏற்றுவது நல்லது.

டெங்கு நோய்
இன்னொரு உதாரணம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்த தட்டணுக்கள் குறையும். அது அபாயகரமான அளவை எட்டும் போது முழு ரத்தம் ஏற்றுவதைக் காட்டிலும் தனியாக தட்டணுக்கள் நிறைந்த ப்ளாஸ்மாவை (FFP என்று அழைக்கப்படும் FRESH FROZEN PLASMA) ஏற்றுவது போதுமானது. இதில் fresh frozen plasma என்பதும் ரத்தம் தான். ஆனாலும் அதில் சிவப்பு அணுக்கள் இருக்காது என்பதால் அதன் நிறம் சிவப்பாக இருக்காது.

மஞ்சள் நிறத்தில்
அதனால் பார்க்க வெளிர் மஞ்சள் நிறத்தில் சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு ஜூஸ் போன்று இருக்கும். பார்ப்பதற்கு சாத்துக்குடி ஜூஸ் போன்று இருந்ததாலேயே டெங்கு நோய் பாதிக்கப்பட்ட உறவினர்களில் இருவர் இதை சாத்துக்குடி ஜுஸ் என்று நினைத்து குற்றம் சாட்டியுள்ளனர். இறந்த நபருக்கு தீவிர டெங்கு நோய் இருந்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையாக ப்ளாஸ்மா வழங்கப்பட்டுள்ளது.

இரு பிளாஸ்மா பைகள்
இதில் இரண்டு ப்ளாஸ்மா பைகள் ஏற்றி முடித்து மூன்றாவது பை ஏற்றும் போது எதிர்வினை ஏற்பட்டு இறந்துள்ளார். பொதுவாக இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ரத்தம் ஏற்றும் அனைவருக்கும் நேருவதில்லை. ஆயினும் அரிதாக தீவிர எதிர்வினை நிகழ்ந்து மரணம் சம்பவிக்கவும் வாய்ப்பு உண்டு. இதை கருத்தில் கொண்டு எதிர்வினையை ஈடு செய்யும் மருந்துகளுடன் தயாராக உள்நோயாளியாக இருக்கும் வார்டுகளில் மட்டுமே ரத்தம் ஏற்றப்படும். இச்சூழ்நிலையில் சாத்துக்குடி ஜூஸை ஏற்றி விட்டார்கள் என்ற உறவினரின் குற்றச்சாட்டில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.

ரத்தம் ஏற்றும் பை
காரணம் - ரத்தம் ஏற்றும் இந்தப் பையை பாருங்கள். ரத்தம் தானமாகக் கொடுப்பவர்களுக்கும் சமீபத்தில் ரத்தம் ஏற்றுவதை நேரில் பார்த்தவர்களுக்கும் தெரியும். ப்ளாஸ்மாவாகட்டும், முழு ரத்தமாகட்டும், ஜூஸ் பார்சல் கட்டித்தரும் சாதாரண நெகிழிப்பையில் ரப்பர் பேண்ட் போட்டு வருவதில்லை. மாறாக சீல் செய்யப்பட்ட தரமான மெடிக்கல் கிரேடு நெகிழிப் பையில் ரத்தம் கிடைக்கிறது. மேலும் இந்த விசயத்தில் உறவினர்கள் கம்ப்ளெய்ண்ட் கொடுத்ததுமே உண்மையை விசாரித்து முடிப்பதற்குள் மருத்துவமனைக்கு சீல் வைத்தது தவறான நடவடிக்கையாகும்.

மொசாம்பி ஜூஸ்
முழு விசாரணை நடந்து முடிவதற்குள் மொசாம்பி ஜூஸை ஏற்றியது உண்மைதான் என்பது போல் செய்திகளைப் பரப்புவதும் தவறாகும். மீண்டும் கூறுகிறேன் , ப்ளாஸ்மாவும் சாத்துக்குடி ஜூஸும் ஒரே கலரில் இருப்பதால் வந்த பிரச்சனை இது. இதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications