விஜய் அரசியலுக்கு வரனுமா.. ஒரு கண்டிஷன்.. கிருஷ்ணசாமி வச்சாரு பாருங்க ஒரு கோரிக்கை
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். ஆனால் அவர் 10 ஆண்டுகள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், அதன் பிறகு அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் வரும் 2026 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை சந்திப்பார் என தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அவர் நேரடியாக அறிவிக்காவிட்டாலும் , 12, 10 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பட்டும்படாமல் பேசியுள்ளார்.

அதாவது வரும் தேர்தலில் நிறைய புதிய கட்சிகள் வரலாம். புதியவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். அது போல் தேர்தலில் யாரிடமும் பணம் வாங்காமல் ஜனநாயக கடமையை ஆற்றுமாறு பிள்ளைகளாகிய நீங்கள் சொன்னால் உங்கள் பெற்றோர் கேட்டுக் கொள்வர்.
இத்தனை செலவு செய்து வெல்லும் எம்எல்ஏ போட்ட காசை திருப்பி எடுக்க ஊழலைத்தான் செய்வார் என தெரிவித்திருந்தார். அது போல் காமராஜர், அண்ணாவை படியுங்கள் என இளைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அது போல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடச்சாலை, இலவச சட்ட உதவி மையம் போன்றவற்றை தொடங்கியுள்ளார்.
மேலும் தனது ரசிகர்களிடமும் மக்களுக்கு தேவையான நன்மையை செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் லியோ வெற்றி விழா நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் விஜய்யிடம் நெறியாளர் 2026 என்ற ஒரு வார்த்தைக்கு பதில் சொல்லுமாறு கேட்டார். அதற்கு விஜய்யோ 2025 க்கு பிறகு வருகிறது, உலக கால்பந்து போட்டி நடைபெறுகிறது, கப் முக்கியம் பிகிலு என கூறினார்.
உடனே ரசிகர்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதாவது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் அறிவிப்பார் என்பதால் நெறியாளர் 2026 குறித்து கேட்டார். ஆனால் விஜய்யோ பட்டும்படாமல் பதில் அளித்தார். அது போல் உங்கள் அமைச்சரவையில் லோகேஷ் கனகராஜுக்கு என்ன துறை என கேட்ட போது போதை மருந்து தடுப்பு பிரிவு என்றார். பின்னர் நீங்கள் கற்பனையாக கேட்டதற்கு நானும் கற்பனையாக சொல்லிவிட்டேன் என கூறிவிட்டு சிரித்தார்.
எனவே விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும்.
சினிமாவை விட்டு விட்டு 10 ஆண்டுகளுக்கு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதன் பிறகு தாராளமாக அரசியலுக்கு அவர் வரலாம் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications