டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த டாக்டர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80
Recommended Video
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா முத்து விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
சமூக நீதி காவலர் என்ற அழைக்கப்படும் டாக்டர் ராமதாஸ், 1980களில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தையே அதிரவைத்த இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர்.
இதனையடுத்து முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, வன்னியர் உட்பட 108 ஜாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவில் உள்ளடக்கி 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழர் வாழ்வுரிமை போராட்டங்களை முன்னெடுத்தவர் டாக்டர் ராமதாஸ்.
1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழகத்தில் தமிழ்த் தேசியக் குரல்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. அப்போது துணிச்சலாக தமிழகத்துக்கு தன்னுரிமை கோரி மாநாடு நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அவரது 80-வது பிறந்த நாளை முத்துவிழாவாக பாமகவினர் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. இது அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் இடம்பெற்ற சில ட்வீட்டுகள்

பெருமையாக பார்க்கிறேன்
பாமக ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது: மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிக்காட்டியாக, மனஉறுதி மிக்க வீரராக, அரசியல் சாணக்கியராக, பிடிவாதக்காரராக, எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையாக இன்று முத்துவிழா காணும் மருத்துவர் ஐயாவை பெருமையாக பார்க்கிறேன். ஆறு வயதில் பள்ளி விடுதியில் சேர்த்த கண்டிப்பு மிக்க தந்தையை பார்த்திருக்கிறேன், ஆண்டுதோறும் சுற்றுலா அழைத்து செல்லும் அன்பான அப்பாவை பார்த்திருக்கிறேன், பெரும் போராளியாக சிறையில் பார்த்திருக்கிறேன், ஒரு டாக்டராக மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார் அன்புமணி.

துவளாத தலைவர்
@ArumugamHemnath என்ற பதிவர், போராளி என்பவர் எவ்வித தோல்வி கண்டு அஞ்சமாட்டார். எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்க மாட்டார். துரோகங்கள் முதுகின் மீது ஏற்றினாலும் துவளமாட்டார். துணை நின்றோர் ஒதுங்கினாலும் கவலைப்பட மாட்டார். அத்தனையும் ஒருங்கே சந்தித்த இந்த பெருமகனார் ஐயா எங்களுக்கு போராளியே! என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாவலர்
@aaavanthika-வின் வாழ்த்து: பெண்களின் பாதுகாவலர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்கின்றேன்.

வாழ்த்திய திமுக தொண்டர்
பழ பரசுராமன் திமுக என்ற ட்வீட்டிஸ்ட், மதிப்புமிக்க ஐயா அவர்களுக்கு வன்னிய திமுக காரன் என்ற உணர்வுடன் ஐயா அவர்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று நோய் நொடி இல்லாமல் பல நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் என வாழ்த்து கூறியுள்ளார்.

வழிகாட்டியாக இருக்க ..
@murprak என்ற ட்வீட்டிஸ்ட், முத்துவிழா காணும் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்ந்து தமிழ்நாட்டிற்கும் தமிழ்மக்களுக்கும் இன்னும் பல சேவைகளை செய்து அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்க இறைவனை பிராத்தித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications