"சாயும்" ராமதாஸ்.. மு.க. ஸ்டாலினை மறுபடியும் பாராட்டி இருக்கிறாரே.. 2 டிவீட் போட்டு சபாஷ்!
முதல்வர் முக ஸ்டாலினின் அறிவிப்பினை டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்
சென்னை: முதல்வர் முக ஸ்டாலினின் இன்றைய புது அறிவிப்புக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட்களை போட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்றது முதல், முக ஸ்டாலின் எத்தனையோ நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.. இதனால், திமுக அரசுக்கு பெரும் மதிப்பு கூடி வருகிறது..
இவர்கள் மீது என்ன விமர்சனத்தை வைக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன.. ஒருகட்டத்தில் அதிமுகவின் சில அமைச்சர்களே, ஸ்டாலினை புகழவும் ஆரம்பித்துவிட்டனர்.

ஸ்டாலின்
இவர்கள் மட்டுமில்லை.. ஓபிஎஸ்ஸும் புகழ்ந்துள்ளார்.. திமுக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.. அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் பாராட்டினார்.. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வெளியிட்ட 5 அறிவிப்புகளை வரவேற்று அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. அதுமட்டுமல்ல, பாமக எம்எல்ஏக்கள், முதல்வர் ஸ்டாலினின் ரூமுக்குள் வலிய சென்று தங்கள் பாராட்டை சொன்னவர்களும்கூட..

பாமக
இந்த 5 வருடமாக திமுகவை அதிகமாக விமர்சித்தது பாமகதான்.. ஆனால், இப்போது பாமக தலைவர்கள் ராமதாஸ் முதல் அன்புமணி வரை திமுக கொண்டு வரும் திட்டங்களுக்கு அறிக்கை விட்டு வரவேற்று வருகிறார்கள்.. அப்படித்தான் இன்றும் ஒரு பாராட்டு திமுகவுக்கு கிடைத்துள்ளது.

பெற்றோர்
"கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்படும் என்றும் ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார்.. கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

ட்வீட்
இந்த அறிவிப்புக்குதான் டாக்டர் ராமதாஸ் ஒன்றுக்கு 2 ட்வீட் போட்டு வரவேற்றுள்ளார்.. அதில், "கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்கு சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும்"..!

குழந்தைகள்
"இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பொருளாதார நெருக்கடி, வருவாய் ஈட்டும் ஒரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும். எனவே, வருவாய் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகளுக்கும் இதே உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

கமெண்ட்கள்
ராமதாஸ் இப்படி பதிவிட்டதும், ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. "அய்யா, நீங்க பாஜக கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பதையே மறந்துடறீங்க.. கொஞ்சம் ஓவரா தான் புகழறீங்க" என்றும் "ஐயா, திராவிட கட்சிகளை எப்பவுமே புகழாதீங்க" என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications