கோட்டையில் பாமக கொடி பறக்கும்.. நீங்கள் ஆண்ட பரம்பரை.. அன்புமணிதான் இனி எல்லாம்.. ராமதாஸ் அட்வைஸ்
கடலூரில் பாமக கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வருத்ததுடன் பேசியுள்ளார்
சென்னை: "நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள், ஆனால், இன்று அடுத்தவர்களுக்கு நாம் துதி பாடிக்கொண்டிருக்கிறோம்.. இனி தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு வீடாக சென்று திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.
இதன்காரணமாக, அக்கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் கடந்த வாரம் திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது

அன்புமணி
அந்த கூட்டங்களில் எல்லாம் அடுத்து வரும் தேர்தலில் அன்புமணி தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும்.. 100க்கு 40 சதவீத வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டும் என்ற முக்கிய வேண்டுகோளை ராமதாஸ் விடுத்து வருகிறார்.. அப்படித்தான், கடலூர் மாவட்டத்திலும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. இதில் நிர்வாகிகளிடம் பல விஷயங்களை டாக்டர் ராமதாஸ் மனம்விட்டு பேசியுள்ளார்.. சில வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார். அவைகளின் சுருக்கம்தான் இவை:

வன்னியர்கள்
நாம யாருக்காக போராடி இடஒதுக்கீடு பெற்று தந்தோமோ, அந்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று கேஸ் போட்டுள்ளார்கள்.. ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்து சரியாகவே செயல்படுகிறது... நல்ல வழக்கறிஞர்களை கொண்டுதான் வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்... நல்ல உத்தரவு வரும் என்று நம்புவோம்.

மாடு மேய்க்கும் சிறுவன்
முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜ் கேஸை, நான் கையில் எடுத்திருக்கிறேன்.. தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது.. நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தோல்வியை சந்தித்தது.. இதுக்கு காரணமே மாவட்ட செயலாளர்கள்தான்.. உங்களால் முடியவில்லை என்றால், ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் 1 லட்சம் வாக்கு வாங்க முடியுமா என்று கேட்பேன்.. அவன் முடியும் என்று சொன்னால் அவனையே மாவட்ட செயலாளராக போட்டுக்கொள்வேன்..

வயதானவர்கள்
42 வருடங்கள் மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன்... உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன்... வயதானவர்கள் பேசத்தான் முடியும்.. இனி இந்த கட்சி இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது.. இளைஞர்கள் நினைத்தால் வானத்தை வில்லாக வளைக்கலாம்.. மலையை தவிடுபொடியாக்கலாம்... அன்புமணியை கோட்டையில் அமரவைப்பது உங்கள் கையில் தான் உள்ளது... ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகளை பெற வேண்டும்... 1 பூத்தில் ஆயிரம் வாக்குகளையாவது பெற வேண்டும்

அந்தமான்
கடலூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லியிருந்தால் அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்திருப்பேன்.. கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.. நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள், ஆனால், இன்று அடுத்தவர்களுக்கு நாம் துதி பாடிக்கொண்டிருக்கிறோம்.. இனி தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு வீடாக சென்று திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்...

முதல்வர்
60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி முதல்வராகி ஆள முடியும்... அன்புமணி மாதிரி ஒரு திறமைசாலி யாரும் கிடையாது.. ஆனால், ஏன் மக்கள் ஆட்சியை தருவதற்கு தயங்குகிறார்கள்? வஞ்சகம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு போட்டுவிட்டதால், இனி ஒருமுறையாவது பாமகவிற்கு வாக்கு போடுமாறு மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.. அப்படி செய்யும்போது கோட்டையில் பாமக கொடி பறக்கும்..

வெட்கம்
1949ல் திமுக ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது தேர்தலில் ஆட்சியைப் பிடித்தனர். இன்று வரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த கட்சி 2016ல் தனியாக நிற்கும்போது வெறும் 23 லட்சம் வாக்குகளையே பெற்று இருக்கிறோம். அதற்கு தலைவர், நாம் 5.6% வாக்குகளைப் பெற்று 3வது பெரிய கட்சி என சொல்கிறார். எனக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது," என்றார் ராமதாஸ்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications